பொது செய்தி

தமிழ்நாடு

நெரூர் சதாசிவ பிரமேந்திரர்சதுர்வேத ஸம்ஹிதா ஹோமம்

Added : ஏப் 19, 2015
Advertisement


கரூர்:நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில், உலக நன்மைக்காக, சதுர்வேத ஸம்ஹிதா ஹோமம் நடந்து வருகிறது.கரூர் மாவட்டம், நெரூரில் புகழ்பெற்ற சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளது. இங்கு, உலக நன்மைக்காக, மார்ச், 25ம் தேதி முதல் சதுர்வேத ஸம்ஹிதா ஹோமம் நடந்து வருகிறது. மார்ச், 25ம் தேதி முதல், 31ம் தேதி வரை ரிக் வேத ஸம்ஹிதா ஹோமம், ஏப்ரல், 7ம் தேதி முதல், 12ம் தேதி வரை யஜுர் வேத ஸம்ஹிதா ஹோமம் நடந்தது.ஏப்ரல், 20ம் தேதி வரை ஸாம வேத ஸம்ஹிதா ஹோமம், ஏப்ரல், 22ம் தேதி முதல், 27ம் தேதி வரை அதர்வ வேத ஸம்ஹிதா ஹோமம் நடக்கிறது.ஹோமம் குறித்து வெங்கடேஸ்வரன், கூறியதாவது:ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் அறியப்படுகின்றன. நான்கு வேதங்களும் வைத்து ஒரு இடத்தில் ஹோமம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு வேதத்திலும் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் தலைமையில் ஹோமம் நடத்தப்படுகிறது. சைதன்யாகாலே தலைமையில், ரிக் வேத ஸம்மிதா ஹோமம், சுனில் லிம்யா, தலைமையில், யஜுர் வேதம் ஸம்ஹிதா ஹோமம், ராமகிருஷ்ணா பட், தலைமையில் ஸாம வேத ஸம்ஹிதா ஹோமம், ரெகுநாத காலே, தலைமையில், அதர்வ வேத ஸம்ஹிதா ஹோமம் நடத்தப்படுகிறது. 28ம் தேதி நடைபெறும் ஆராதனை விழாவில், கலசத்தில் உள்ள புனித நீரால், ஸ்வாமிக்கு பூஜை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X