தாயாய்....ஆதரவாய்....| Dinamalar

தாயாய்....ஆதரவாய்....

Added : ஏப் 19, 2015 | |
''ஆணென்ன... பெண்ணென்ன... நீயென்ன... நானென்ன... எல்லாம் ஓரினம் தான்,'' என்ற பாடல் வரிகள் பலரின் நினைவலைகளை வருடுவதுண்டு.சமுதாயத்தின் மிக முக்கியமான... மற்றவர்களால் மறுக்கப்பட்டு... ஒதுக்கப்பட்டு... ஒரு மனித இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அது 'மூன்றாம் பாலினம்' என அழைக்கப்படுகின்ற 'திருநங்கைகள்' தான். இவர்கள் மனிதர்கள் இல்லையா? ஏன் நாம் அவர்களை ஒதுக்க வேண்டும்
தாயாய்....ஆதரவாய்....

''ஆணென்ன... பெண்ணென்ன... நீயென்ன... நானென்ன... எல்லாம் ஓரினம் தான்,'' என்ற பாடல் வரிகள் பலரின் நினைவலைகளை வருடுவதுண்டு.சமுதாயத்தின் மிக முக்கியமான... மற்றவர்களால் மறுக்கப்பட்டு... ஒதுக்கப்பட்டு... ஒரு மனித இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அது 'மூன்றாம் பாலினம்' என அழைக்கப்படுகின்ற 'திருநங்கைகள்' தான். இவர்கள் மனிதர்கள் இல்லையா? ஏன் நாம் அவர்களை ஒதுக்க வேண்டும் என்ற கேள்வி மேலை நாடுகளில் எழுப்பப்பட்டது.திருநங்கைகள் தாங்களும் இச்சமுதாயத்தில் ஓர் அங்கம் என்றும், தங்களுக்கும் வாழும் உரிமை இருக்கிறது என்று கூறி போராட்டங்கள் பல நடத்தினர். விளைவு இன்று மற்றவர்களை போல் கல்வி, வேலை வாய்ப்பு, வாழும் வீடு, காப்பீடு, ஓட்டுரிமை, ஓட்டுனர் உரிமை என வாழ்க்கையில் மிக அத்தியாவசியமான உரிமைகளை பெற்று மற்றவர்கள் போல் வாழ ஆரம்பித்துள்ளனர்.''இந்தியாவில் இம்மாற்றம் பெரிய அளவில் இல்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம்,'' என்கிறார் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியின் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை ஏ.ஆர்.உமா. மேலை நாடுகளை போல் திருநங்கைகள் நம் நாட்டிலும் மதிக்கப்பட வேண்டும்; சம உரிமை பெற வேண்டும் என்பது உமாவின் கனவு. திருநங்கைகளுக்கு அடிப்படை தேவை கல்வி. இதற்காக 'பல்கலை மானியக்குழு' (யு.ஜி.சி.,) மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ள உமா அனுமதி பெற்றார்.2011 ஜூன் முதல் 2014 டிசம்பர் வரை இரண்டரை ஆண்டுகள் திருநங்கைகள் குறித்து கள ஆய்வில் ஈடுபட்டார். 180 பக்க ஆய்வறிக்கையை யு.ஜி.சி.,யில் சமர்ப்பித்தார். பரிந்துரைகளை ஏற்று கொண்ட யு.ஜி.சி, ஆய்வுக்கான செலவு ரூ.90 ஆயிரத்தை உமாவிடம் வழங்கியது. இவரது பரிந்துரைகள், கல்லுாரிகளில் பாடங்களாக விரைவில் வெளியிடப்பட உள்ளது.உதவி பேராசிரியை உமா, ''எவரும் விரும்பி திருநங்கைகளாக பிறப்பதில்லை. ஹார்மோன் மாற்றத்தினால் ஏற்படக்கூடிய உடல் மாறுபாடு இது. இவர்களை மற்றவர்களை போல் நடத்த வேண்டும். குறிப்பாக பள்ளிகளில் சேர்ந்து கல்வி கற்க உதவிட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் சில திருநங்கைகள் 'பார்' ஊழியர்களாக, பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். இதை முதலில் தவிர்க்க வேண்டும். தங்களால் சாதிக்க முடியும் என்பதை பலர் நிரூபித்து வருகின்றனர். இவர்களை போல் மற்ற திருநங்கைகளும் முன்னேற வேண்டும் என்பது எனது கனவு,'' என்றார்.திருநங்கைகளின் தாயாய்... ஆதரவாய் மனிதாபிமானத்துடன் சேவை புரியும் உதவி பேராசிரியை உமாவின் சேவை போற்றுதலுக்குரியது. வாழ்த்த 97870 12280 க்கு டயல் செய்யலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X