திருப்பூர்: தீவனப் பற்றாக்குறையை சரி செய்து, ஆடு வளர்ப்பை ஊக்குவிக்க, திருப்பூர் கால்நடை மருத்துவமனை நிர்வாகத் தினர் திட்டமிட்டுள்ளனர். முதல்கட்டமாக, மருத்துவ மனைக்குள் கொழுக் கட்டை புல், ஊட்டச்சத்து நிறைந்த புல் வகைகளை வளர்க்க முடிவு செய்யப் பட்டுள்ளது. தொழில் துறையின் அதீத வளர்ச்சியால் திருப் பூரில் கால்நடை வளர்ப்பு குறைந்து வருகிறது. கிராமங்களில் வாழ்பவர் களே இன்னும் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வளர்ச்சியடைந்து வரும் பல இடங்களில் விளை நிலங்கள் அழிக்கப்பட்டு, வீடுகளாக மாறி வருகின்றன. இதனால், கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உடைய இயற்கை தீவனம் கிடைக்காமல் போகிறது. தற்போதுள்ள விலை வாசியால் போக்குவரத்து செலவு, ஆள் கூலி வைத்து கால்நடை வளர்ப்பில் ஈடு பட யாரும் முன் வருவ தில்லை. இதனால், கிராமப் புறத்தில் கூட கால்நடை வளர்ப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறையத் துவங்கியுள்ளது. இதை தடுக்கும் வகை யில், நகரப்பகுதிகளை ஒட்டியுள்ள கால்நடை மருத்துவமனைகளில் ஆடு களுக்கு தேவையான கொழுக்கட்டை புல், கோரை உள்ளிட்டவற்றை பயி ரிட்டு, தீவனமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் கால்நடை மருத்துவமனை டாக்டர் பழனிச்சாமி கூறியதாவது: பக்ரீத் பண்டிகை நெருங்குவதை ஒட்டி, அதிக அளவில் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. திருப்பூர் நகர பகுதிகளில் இவைகளுக்கு தீவனம் கிடைப்பதில்லை. முதல் கட்டமாக, மருத்துவமனை வளாகத்தில் 40 சென்ட் அளவிலான இடத்தில் கொழுக்கட்டை புல் பயிரிடப்பட்டுள்ளது. சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ள நிலங்களில் மட்டுமே வளரும் இப்புல், ஆடுகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது. பசுந்தீவன பயிரான இது, வறட்சி வெப்பத்தை தாங்கி வளரக்கூடியது. ஒரு நாளைக்கு ஐந்து ஆடுகள் வீதம் அனுமதிக்கப்பட்டு வருகிறது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE