உணர்ச்சி முந்தும் நேரம் இது

Updated : நவ 10, 2010 | Added : நவ 10, 2010 | கருத்துகள் (118)
Share
Advertisement
 - ஆர்.ரங்கராஜ் பாண்டே - முன்குறிப்பு : இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் அனைவரது மனதிலும் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக. இது நடக்கும் என்பது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. எப்போது நடக்கும் என்பது தான் எவராலும் எதிர்பார்க்கப்படாதது. அப்படியே நடந்துவிட்டது, கோவை கொடூரன் மோகனகிருஷ்ணனின் "என்கவுன்டர்.' "எந்தப் பின்விளைவுகளும் நேராது; சமூகத்தின் எந்தப்

 - ஆர்.ரங்கராஜ் பாண்டே -

முன்குறிப்பு : இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் அனைவரது மனதிலும் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக.


இது நடக்கும் என்பது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. எப்போது நடக்கும் என்பது தான் எவராலும் எதிர்பார்க்கப்படாதது. அப்படியே நடந்துவிட்டது, கோவை கொடூரன் மோகனகிருஷ்ணனின் "என்கவுன்டர்.' "எந்தப் பின்விளைவுகளும் நேராது; சமூகத்தின் எந்தப் பிரிவின் எதிர்ப்பும் எழாது' என்ற உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை இது. முதலிலேயே சொல்லிவிடுகிறேன்: போலீசாரின் இந்தச் செயல், முற்று முதலான அத்துமீறல்.


உடனடியாக உங்கள் மனதில் எழக்கூடிய கோபக் கணைகளுக்கான விடையே இந்தக் கட்டுரை. போலீசாரின் செயல் அத்துமீறல் எனில், மோகனகிருஷ்ணனும், அவனது கூட்டாளி மனோகரனும் செய்தது சமூக சேவையா? என கேட்கக் கூடும். அந்த ராட்சதர்கள் செய்தது பஞ்சமா பாதகத்தையும் விட கொடூர பாதகம். எத்தனை யுகம் அழுதாலும் தீராத சோகம்.


ஆனால், நண்பர்களே! ஒரு குற்றத்துக்கு, பதில் குற்றம் நீதியாகாது. அதற்காக, இயேசுபிரான் போல, அவர்களை மன்னித்தருளச் சொல்லவில்லை. திருக்குர்ரான் போல கண்ணுக்கு கண் எடுக்கச் சொல்லவில்லை. நீதியின் முன் அவர்களை நிறுத்தியிருக்க வேண்டும் என்றே சொல்கிறேன்.


"ஹ! பொல்லாத நீதி' என சலிப்பு ஏற்படுகிறதா? அது சட்டத்தின் குற்றமல்ல. அதை அமல்படுத்துபவர்களின் குற்றம். சட்டத்தின் சகல முனைகளிலும் ஓட்டைகளை ஏற்படுத்திவிட்டு, சகல சவுபாக்கியங்களுடன் வாழ்பவர்களைப் பார்த்து வணக்கம் வைத்துவிட்டு, இந்த என்கவுன்டரை வாழ்த்துகிறோம் என்றால், நாம் செய்வது நியாயமான காரியமல்ல.


மோகனகிருஷ்ணனும், மனோகரனும் மரண தண்டனைக்கு உரியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதை நீதிமன்றம் தான் விதித்திருக்க வேண்டுமே தவிர, போலீசாரின் தோட்டாக்கள் தீர்மானித்திருக்கக் கூடாது.


நண்பர்களே! என் பாச மகள் முஸ்கனின் மரணம் மட்டுமல்ல; மோகனகிருஷ்ணனின் என்கவுன்டரும் சுட்டிக்காட்டுவது: இங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதைத் தான். முஸ்கனைக் கடத்தும் துணிச்சல் இந்தக் கொடூரர்களுக்கு ஏற்பட்டு இருக்கவே கூடாது. சட்டம் நம்மை கடுமையாக தண்டிக்கும் என்ற பயம் இருந்திருந்தால், அந்தத் துணிச்சல் ஏற்பட்டும் இருக்காது. மாறாக, சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பித்துவிட முடியும் என்ற துணிச்சல் அவர்களுக்கு ஏற்பட்டதற்கு காரணம், "தலைவா' என நாம் தலைவணங்கும் அரசியல்வாதிகள் தான்.


ஆள் கடத்தல் செய்தவர்கள்; குடும்பத்தையே கட்டிவைத்து மிரட்டியவர்கள், மீண்டும் மாவட்டச் செயலர்கள் ஆவதைக் காண்கிறோம். மூன்று மாணவிகளை உயிரோடு எரித்தவர்களுக்கு கட்சி சார்பாகவே கருணை மனு அனுப்பப்படுவதைக் காண்கிறோம். இவை இரண்டையுமே சகிக்கிறோம். இதைக் கண்ணுறும் மோகனகிருஷ்ணன்கள், "நாமும் தப்பிவிடலாம்' என நப்பாசை கொள்கின்றனர்.


மேற்கோள் காட்டப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டிருந்தால், மோகனகிருஷ்ணன்கள் துணிந்திருக்க மாட்டார்கள். சட்டத்தின் ஆட்சி ஒருக்காலும் சாத்தியமில்லை என நாமே முடிவுக்கு வந்துவிட்டால், கொலைகளும் கற்பழிப்புகளும் தொடர்வதைத் தடுக்க முடியாது


மோகனகிருஷ்ணனோடு இருந்தது மூன்று பேர் என்கிறது புலனாய்வுத் தகவல். ஒருவனை போட்டுத் தள்ளியாகிவிட்டது. இன்னொருவனும் சாக வேண்டியவனே. இருவரையும் அவசர அவசரமாக கொன்றுவிட்டு, என்ன செய்யப்போகிறீர்கள்? மற்ற இருவரை, எந்தத் தண்டனையும் இன்றி நடமாட விடப்போகிறீர்களா?


உன் குடும்பத்தில் இதுபோல் நேர்ந்திருந்தால், இப்படி தத்துவம் பேசுவாயா? என்பதே உங்கள் பிரதான கேள்வியாக இருக்கக் கூடும். "முஸ்கனோடு சேர்த்து எனக்கு மூன்று மகள்கள்' என பதிவு செய்வதோடு இதற்கான பதிலை நிறுத்திக்கொள்கிறேன்


கொலை, கொள்ளை மட்டுமல்ல; என்கவுன்டரும் எதிர்க்கப்பட வேண்டியது தான். இன்று என்கவுன்டரை நியாயப்படுத்தினால், நாளை லாக்-அப் சாவையும் கேள்வி கேட்க முடியாமல் போகும் என்பதை உணருங்கள். பனையூர் இரட்டைக் கொலை வழக்கில் நடந்தது என்ன? வீடு புகுந்து இரண்டு பேரைக் கொன்றவனை, பொதுமக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அன்று இரவே அவன் மர்மமான முறையில் மரணமடைகிறான். சம்பிரதாயத்துக்கு கூட, சம்பந்தப்பட்ட போலீசார் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. பலன் என்ன? அந்த இரட்டைக் கொலைகளுக்குப் பின்னணியில் இருந்தது யார் என்பது உலகத்துக்குத் தெரியாமலேயே போய்விட்டது.


இது தான் நாளையும் நடக்கும். பல பிரச்னைகளின் பின்னணியே தடம் தெரியாமல் அழிக்கப்படும். வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு, போலீசாரின் ஆத்திரம் மட்டுமா காரணம்? அவனுடனான தொடர்பு அம்பலமாகிவிடக் கூடாது என்ற அரசியல்வாதிகளின் அச்ச உணர்வும் தானே காரணம்! அவன் செய்த கொடூரச் செயல்களுக்கு, நிச்சயம் மரண தண்டனை தான் கிடைத்திருக்கும். விசாரணையின் ஊடே, அவனுக்கு பால் வார்த்தோரின் முகத்திரையுமல்லவா கிழிந்திருக்கும்! அதற்கு வாய்ப்பில்லாமல் போனதற்கு என்கவுன்டர் தானே காரணம்.


இதுபோல என்கவுன்டர் செய்தால் தான் அடுத்தவர்களுக்கு பயம் வரும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. சரி, மோகனகிருஷ்ணன் கொல்லப்பட்டுவிட்டான். இனிமேல் ஆள் கடத்தலே நடக்காதா?


இன்று குற்றவாளியை போலீசார் கொன்றது நியாயம் என்றானால், நாளை திருடனை பொதுமக்கள் கல்லால் அடித்துக் கொல்வதும் நியாயம் என்றாகும். அப்புறம், திருடன் என நினைத்துக் கொன்றுவிட்டோம் என மாறும். கடைசியில், பிடிக்காதவனை எல்லாம் போட்டுத்தள்ளிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.


சேலம் அருகே ஆறு பேர் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவரை, ஓர் அமைச்சரே பார்த்து ஆறுதல் கூறிவிட்டு வருகிறாரே. அந்த நபரை என்கவுன்டர் செய்ய வேண்டும் என யாராவது கேட்டீர்களா?


இதற்குப் பெயர் சட்டத்தின் மாட்சி அல்ல; காட்டாட்சி. இது உணர்ச்சிவசப்பட வேண்டிய விஷயம் அல்ல. அப்படியே இருந்தாலும், பொதுமக்கள் உணர்ச்சிவசப்படலாமே தவிர, போலீசாரும் அரசாங்கமும் அப்படிச் செய்யலாகாது. உணர்ச்சிவசப்பட்டதன் காரணமாகத் தான் மோகனகிருஷ்ணன் பெரும்பிழை செய்தான். அதையே போலீசாரும் செய்வது சரியாகுமா?


Advertisement
வாசகர் கருத்து (118)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R..Venkatraman - Karur,இந்தியா
29-நவ-201012:06:21 IST Report Abuse
R..Venkatraman the encounter was conducted only in self defence as per news paper reports. assuming these criminals are given life sentence after a trial for ten years let us say, the period already spent in jail as trial detenus will be deducted from the awarded sentence. the sanctity of a jail sentence is correction of a person who has deviated from the normal decent living( having respect for human values, life and property.) In certain rarest of the rare cases apart from the emotional cry of the people calling for maximum punishment even judiciary feels the criminals are unfit for existence and awards death sentence. The subject matter under reference really appears to be one of self defence in as much as the pictures of the wounded policemen appeared in the newspapers and visual media. So blaming the police entirely for the incident will be totally unjustified.
Rate this:
Cancel
nilavan - singapore,இந்தியா
25-நவ-201000:19:17 IST Report Abuse
nilavan நன்றி நல்ல கருத்துக்கள், தயவுசெய்து நடைமுறைக்கு வாருங்கள்.
Rate this:
Cancel
Truth Alone Triumphs - Boston,யூ.எஸ்.ஏ
22-நவ-201009:34:57 IST Report Abuse
Truth Alone Triumphs First of all this guy should have written this article for some other tragedy, so we can sit and listen. But the news writer who writes this kind of article for such incidents is not at all a human. I think this news writer is an anti-social. How dare he would be to write such a non-sense article and that too publish it in Dinamalar? If that criminal has lived, it looks like this guy will buy story books for those criminals and dance kummi-aatam around them.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X