திண்டுக்கல்: தண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிளை திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி, ஆட்டோமொபைல் பேராசிரியர் லட்சுமணன் தலைமையில் மாணவர்கள் யோவன் பிரதீஷ்ராஜா, துர்கா பிரசாத் இணைந்து பெட்ரோலும், தண்ணீரும் சேர்ந்து இயங்கும் 'பைக்' வடிவமைத்துள்ளனர். இந்த 'பைக்கில்' தண்ணீர் 'டேங்கும்,' துருபிடிக்காத இரும்பால் ஆன கருவியும் தனியாக உள்ளது. இக்கருவி, நீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து பெட்ரோல் 'டேங்கிற்கு' அனுப்புகிறது. 400 மி.லி., நீரை 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். சாதாரணமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 60 கி.மீ., செல்ல கூடிய வாகனத்தை 120 கி.மீ., வரை இயக்கலாம்.
பேராசிரியர் லட்சுமணன் கூறியதாவது:
ஹைட்ரஜனை பிரிக்க பிளாட்டினம் பயன்படுத்துகின்றனர். இதற்கு லட்சம் ரூபாய் வரை செலவாகும். நாங்கள் துருப்பிடிக்காத இரும்பை பயன்படுத்துவதால் ரூ.2 ஆயிரம் போதும். 'பைக்கை' ஓட்டும்போது மாசு இருக்காது. தற்போது 50 சதவீத பெட்ரோல் தேவை உள்ளது. அதையும் குறைக்க முயற்சி செய்கிறோம், என்றார். மாணவர்களை கல்லூரி இயக்குனர் சரவணன், துறைத்தலைவர் வேல்முருகன் பாராட்டினர். வாழ்த்த 94455 88218.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE