கேட்டுப்போனது துட்டு... கேக்காம கிடைச்சது திட்டு!| Dinamalar

கேட்டுப்போனது துட்டு... கேக்காம கிடைச்சது திட்டு!

Added : ஏப் 28, 2015
Share
''என்னடி மித்து...எப்பக் கூப்பிட்டாலும், 'ஐ எம் இன் மீட்டிங்'னு மெசேஜ் வருது...கார்ப்பரேஷன்ல உனக்கு வேலை கிடைச்சிருச்சா...அதான்...நேர்ல பார்க்கலாம்னு வந்தேன்'' என்று மித்ராவின் வீட்டிற்குள் புயலாய் நுழைந்தாள் சித்ரா.''வா...க்கா...காலங்காத்தால...அதுவும் மழையில...சர்ப்ரைஸ்சா இருக்கு. திடீர்னு கார்ப்பரேஷன்ல வேலை கிடைச்சிருச்சான்னு வேற கேக்குற?'' என்றாள்
கேட்டுப்போனது துட்டு... கேக்காம கிடைச்சது திட்டு!

''என்னடி மித்து...எப்பக் கூப்பிட்டாலும், 'ஐ எம் இன் மீட்டிங்'னு மெசேஜ் வருது...கார்ப்பரேஷன்ல உனக்கு வேலை கிடைச்சிருச்சா...அதான்...நேர்ல பார்க்கலாம்னு வந்தேன்'' என்று மித்ராவின் வீட்டிற்குள் புயலாய் நுழைந்தாள் சித்ரா.''வா...க்கா...காலங்காத்தால...அதுவும் மழையில...சர்ப்ரைஸ்சா இருக்கு. திடீர்னு கார்ப்பரேஷன்ல வேலை கிடைச்சிருச்சான்னு வேற கேக்குற?'' என்றாள் மித்ரா.''கார்ப்பரேஷன் ஏ.இ.,லயிருந்து சி.இ.,வரை, யாரைக் கூப்பிட்டாலும், 'ஐ எம் இன் மீட்டிங்'னு தான் மெசேஜ் அனுப்புறாங்க. போன்ல பேசுனா, 'நேர்ல வாங்க'ன்னு சொல்றாங்க. ஏதாவது 'ரிக்கார்டு' பண்ணி, 'வாட்ஸ் ஆப்'ல போட்டு விட்ருவாங்களோன்னு பயம் போலயிருக்கு.'' என்றாள் சித்ரா.''எல்லாரையும் நேர்ல பார்த்து, 'டீலிங்' முடிக்கிறதுன்னா, ரொம்ப கஷ்டமாச்சே. பாவம் நம்ம ஆபீசர்ஸ்...!'' என்று சிரித்தாள் மித்ரா.''மித்து! வீடு மாத்தப்போறதா சொல்லிட்டு இருந்தீங்க. இன்னமும் வீடு கிடைக்கலையா?'' என்றாள் சித்ரா.''நானென்ன கை நிறைய காந்தி நோட்டு வச்சிருக்கனா...இல்லேன்னா, கார்ப்பரேஷன்ல 'ஆக்டிங் கமிஷனரா' இருக்கேனா... நினைச்சவுடனே வீடு மாத்துறதுக்கு.'' என்றாள் மித்ரா.''ஏய்...என்னடி...ஏதோ பொடி வச்சுப் பேசுற?''''பொடியும் வைக்கலை. வெடியும் வைக்கலை...தெரிஞ்சதைச் சொல்றேன். கார்ப்பரேஷன்ல இருக்கிற ஆபீசர் மேடம், இன்ஜினியருக்கான வீட்டுல குடியிருந்தாங்க. அங்க... பல லட்ச ரூபா செலவு பண்ணி, காம்பவுண்டை உயர்த்தி, ஏகப்பட்ட வேலை பண்ணுனாங்க. இப்போ, அவுங்க பங்களாவே கிடைச்சிருச்சு. இப்போ, அதுலயும் ஏகப்பட்ட செலவு பண்ணி, வேலை நடந்துட்டு இருக்கு. எல்லாம் மக்களோட காசு!''''இவுங்களாவது கார்ப்பரேஷன் ஆபீசர். அந்த பங்களாவும், கார்ப்பரேஷனோடது. அதுக்காக, செலவு பண்றாங்கன்னு வச்சுக்கலாம். ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல முக்கியமான பொறுப்புல இருக்கிற மேடம் வீடும், கார்ப்பரேஷன் காசுல தான் 'பளபள' ஆயிருக்கு.'' என்றாள் சித்ரா.''ஓ...அந்த திருவளர்ச்செல்வியா...? அக்கா...அந்த கார்ப்பரேஷன் மேடம், வீட்டை மட்டும் மாத்தலை. அவுங்க ஆபீஸ்ல இருந்த 'ஸ்டாஃப்' அத்தனை பேரையும் கூண்டோட மாத்திட்டாங்க. என்ன 'சீக்ரெட்'டோ தெரியலை.'' என்றாள் மித்ரா.''மித்து! ஊர்ல ஏதோ நல்லதும் நடக்குது போல...நாலு, அஞ்சு திட்டச்சாலைகளை அமைக்கிறதுல, மேயரும், கமிஷனரும் தீவிரமா இருக்காங்களாம். திருச்சி ரோட்ல இருந்து, ஏர்போர்ட்டுக்கு, சவுரிபாளையத்துக்கு ரெண்டு திட்டச்சாலை அமைக்கப்போறாங்க. உடையாம்பாளையம் ரோட்டை, 40 அடி திட்டச்சாலையா மாத்துறதுக்கு 28 சென்ட் இடத்தை, ஒருத்தர் தானமா கொடுத்திருக்காரு.''''பரவாயில்லையே... கேக்கவே சந்தோஷமா இருக்கு. இதே மாதிரி, இந்த ஊர்ல இருக்கிற பெரிய மனுஷங்க எல்லாம் முன் வந்தா, நம்ம ஊரை சிங்கப்பூர் மாதிரி மாத்திரலாமே!''''அதென்னவோ உண்மை தான். ஆனா, நம்ம ஊருல ரிசர்வ் சைட், புறம்போக்கு லேண்ட்களை ஆக்கிரமிக்கிற ஆளுங்க தானே, பெரிய ஆளா இருக்காங்க.'' என்றாள் சித்ரா.''நீ இப்போ, பொடி வச்சுப் பேசுற மாதிரி இருக்கே...!,'' என்றாள் மித்ரா.''சிங்காநல்லுார்ல இருக்கிற 'சின்ன' மக்கள் பிரதிநிதி, பல கோடி ரூபாயில பிரமாண்டமா வீடு கட்டிருக்காரு. அதுல ரெவின்யூ புறம்போக்கு இடத்தையும் வளைச்சுக் கட்டிருக்காராம். கவர்மென்ட் மாறுனா, 'டமால் டுமீல்' ஆகுறது உறுதிங்கிறாங்க.''''அங்க அப்பிடியா? சேரன் மாநகர்ல, 'ரிசர்வ் சைட்' இடத்தை நிரந்தரமாயாக சாலையாவே மாத்திட்டாரு, சேர்மன் ஒருத்தரு.'' ''அந்த மண்டல 'பார்ட்டி'யா...அவரும், அவரை ஊட்டி வளர்த்த பழைய 'டவுன் டாடி'யும், இப்போ பெருசா ஒரு சிக்கல்ல மாட்டிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன்'' என்றாள் சித்ரா.''என்னாச்சு...ஏதாவது 'லேண்ட் கிராபிங்'ல மாட்டிக்கிட்டாங்களா?,'' என்று குறுக்கிட்டாள் மித்ரா.''அதெல்லாம் இல்ல...சரவணம்பட்டியில, ஒரு பெரிய 'ஷாப்பிங் மால்', அப்பார்ட்மென்ட் எல்லாம் சேர்த்து ஏழரை லட்சம் சதுர அடியில கட்றாங்க. அதுக்கு 'அப்ரூவல்' கொடுக்கிறதாச் சொல்லி, சதுர அடிக்கு 20 ரூபா வீதமா, ஒரு கோடியே 60 லட்ச ரூபா வாங்கிருக்காங்க. ஆனா, 'அப்ரூவல்' கொடுக்கலை. அதுக்குள்ள பதவி போயிருச்சு.''''அச்சச்சோ...பணமெல்லாம் போச்சா?''''போன மாதிரி தான். அதே கட்டிடத்துக்கு, 'அப்ரூவல்' வாங்குறதுக்கு அந்த 'குரூப்' இப்போ அலையுது. நம்ம 'மன்னர் மகன்' காசு கேக்கலையாம். ஆனா, மத்தவுங்களைக் கவனிக்க வேண்டியிருக்காம். அதனால, பழைய ஆள்ட்ட கொடுத்த காசைக் கேட்ருக்காங்க. அதுக்கு அவரு, தன்னோட பாணியில வசை மாரி பொழிஞ்சுட்டாராம்.''''திட்டு கிடைச்சது...துட்டு கிடைச்சுதா?''''ம்ஹூம்...அந்த 'குரூப்' கொஞ்சம் 'பவர்ஃபுல்'லான ஆளுங்க தான்... இப்போ, சி.எம்.,ட்ட இந்த மேட்டரைக் கொண்டு போறாங்களாம். எந்த 'சி.எம்'ட்டன்னு தெரியலை'' என்றாள் சித்ரா.''இன்னமும் நம்பிக்கையோட ரெண்டு 'மாவட்டத்துக்கும்' பணம் கட்டிருக்காரே'' என்றாள் மித்ரா.''இதுக்குப் பேரு தான்...செம 'தில்'லு!'' என்று பலமாய்ச் சிரித்தாள் சித்ரா.''ஆனா, உண்மையான 'தில்'லு, நம்ம ஊரு பாரஸ்ட் ஆபீசருக்கு தான்கிறாங்க. காட்டுக்குள்ள புதுசா ரோடு போடுறது, தேவையில்லாம தடுப்பணை கட்றதுன்னு ரெண்டு மூணு கான்ட்ராக்ட் வேலைங்களுக்கு அனுமதி தரவே முடியாதுன்னு நெத்தியடியா கலெக்டர்ட்டயே சொல்லிட்டாராம். அவரால தான், காட்டை ஒட்டி இருக்கிற காலேஜ்க்கும் 'சீல்' வச்சதா பேசிக்கிறாங்க.'' என்றாள் மித்ரா.''அதான்...அவரோட பேர்லயே 'தில்' இருக்கே!''''அவரை விட 'தில்'லானவரு, நம்ம சிட்டிக்கு நடுவுல இருக்கிற மண்டல அண்ணாச்சி தான்''''ஏன்டி...அவரும் யாருக்காவது நெத்தியடி கொடுத்திருக்காரா?'' என்று கேட்டாள் சித்ரா.''இல்லக்கா... அவரோட வார்டுல, ஒரு கட்டிடத்தை இடிக்கிறதுக்கு கோர்ட் டைரக்ஷன் கொடுத்த பிறகும், அதை இடிக்காம இருக்கிறதுக்கு 20 லட்சம் கேக்குறாராம்.'' என்றாள் மித்ரா.''தைரியம் தான்... கரும்புக்கடை ஏரியாவுல இருக்கிற ஒரு லேடி கவுன்சிலரோட ஹஸ்பெண்ட், பெரிய 'சீட்டாட்ட க்ளப்' நடத்துறாராம். ஸ்டேஷனுக்கு கரெக்டா 'மாமூல்' அடிச்சு விட்றதால, ஸ்பெஷல் டீம் வர்றத, போலீஸ்காரங்களே தகவல் கொடுத்துர்றாங்களாம்.''''அக்கா! அந்த ஸ்பெஷல் டீம் மேல, சிட்டியில இருக்கிற பல இன்ஸ்பெக்டர்களும், ஏ.சி.,க்களும் பயங்கர கடுப்புல இருக்காங்க. குறிப்பா... அந்த இளம் எஸ்.ஐ.,யை எங்கேயாவது துாக்கி விடணும்னு துடிக்கிறாங்க. பீளமேட்டுல அவர் இருந்தப்ப, ஒரு இன்ஸ்பெக்டருக்கு மட்டும் தான் பிரச்னை. இப்போ, எல்லாருக்கும் தலைவலின்னு 'மீட்டிங்' போட்டு புலம்புறாங்க.'' என்றாள் மித்ரா.''ஆமா மித்து...! நானும் கேள்விப்பட்டேன்...இந்த வருஷம் ரிட்டயர்டு ஆகப்போற ஏ.சி.,ஒருத்தரு, 'எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை. அவனை இந்த ஊர்லயிருந்து மாத்தணும்'கிறாராம்.'' என்றாள் சித்ரா.''ஆனா...சி.டி.சி.,ல புதுசா வேலைக்குச் சேர்ந்த டிரைவர், கண்டக்டர்களை மாத்தாம இருக்கிறதுக்கு, 20, 30 ஆயிரம்னு கலெக்ஷன் பண்றாங்களாம். வேலைக்குச் சேர்றப்ப ரெண்டு, மூணு லட்சம்னு ஆளும்கட்சிக்காரங்க வாங்கிட்டாங்க. இப்போ 'ஆபீசர்ஸ்' டர்ன்...!''''நல்லவேளை ஞாபகப்படுத்துன...போலி கல்விச்சான்றிதழ் கொடுத்து, 100 கோடி ரூபா மோசடி பண்ணுன பா.ம.க.,லேடிட்ட தான், இந்த டிரைவர், கண்டக்டர்க நிறைய்யப்பேரு, சர்ட்டிபிகேட் வாங்கிருக்காங்களாம். எச்.ஆர்.என்.சி.,யிலயும் பல பேரு, இந்த சர்ட்டிபிகேட்டை வச்சு, வேலையில சேர்ந்திருக்காங்க. எல்லாத்தையும் 'வெரி ஃபை' பண்ணுனா, விஷயம் வெளிய வரும்.''''இப்பல்லாம், சில லேடீஸ் பண்ற ஏமாத்து வேலைகளை கற்பனையே பண்ண முடியுறதில்லை'' என்றாள் மித்ரா.''நிஜம் தான் மித்து. வீரகேரளத்துல ஹவுசிங் போர்டு இடத்தை வாங்கி, பணம் கட்டாதவுங்களை தேடிக் கண்டு பிடிச்சு, அவுங்ககிட்ட ஒரு அமவுண்டைக் கொடுத்து எழுதி வாங்கிட்டு, அந்த இடத்தை லட்சக்கணக்குல விக்குது ஒரு கும்பல். கோயம்புத்துார் ஆபீசுல வேலை பாக்கிற, ஒரு லேடி தான் இதுக்கு லீடர். புரோக்கர்களை வச்சு, இதுல அவுங்க சம்பாதிச்சது ஒரு கோடியைத் தாண்டுமாம்.'' என்றாள் சித்ரா.''அந்த லேடி கவுன்சிலரோட நாத்தனாரா...இவ்ளோ 'கம்பிளைன்ட்' வருது...அவுங்களை மாத்தவே மாட்டேங்கிறாங்களே!'' என்றாள் மித்ரா.''இப்போதைக்கு எதுவுமே மாறாது. சரி...க்ளைமேட் சூப்பரா இருக்கு. சுடச்சுட ஒரு ஃபில்டர் காபி போட்டுக் கொண்டு வா...!'' என்று சித்ரா அன்புக்கட்டளை பிறப்பிக்க, சிட்டாய்ப் பறந்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X