பொது செய்தி

தமிழ்நாடு

ஆரணி பகுதியில் பட்டு பூங்கா: ஏழுமலை எம்.பி., கோரிக்கை

Added : ஏப் 29, 2015
Share
Advertisement
செஞ்சி: ஆரணியில் பட்டு பூங்கா அமைத்து ஆயிரக்கணக்கான பட்டு நெசவாளர்களை பாதுகாக்க வேண்டும் என எம்.பி., ஏழுமலை கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த 27ம் தேதி மக்களவையில் நடந்த விவாதத்தின் போது ஆரணி தொகுதி எம்.பி., ஏழுமலை கலந்து கொண்டு பேசியதாவது : எனது தொகுதிக்கு உட்பட்ட ஆரணியில் பட்டு பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. காஞ்சிபுரத்திற்கு

செஞ்சி: ஆரணியில் பட்டு பூங்கா அமைத்து ஆயிரக்கணக்கான பட்டு நெசவாளர்களை பாதுகாக்க வேண்டும் என எம்.பி., ஏழுமலை கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த 27ம் தேதி மக்களவையில் நடந்த விவாதத்தின் போது ஆரணி தொகுதி எம்.பி., ஏழுமலை கலந்து கொண்டு பேசியதாவது : எனது தொகுதிக்கு உட்பட்ட ஆரணியில் பட்டு பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. காஞ்சிபுரத்திற்கு அடுத்த நிலையில் பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்ற நகரமாக ஆரணி உள்ளது. இங்குள்ள 60 ஆயிரம் மக்கள் தொகையில் 35 ஆயிரம் பேர் பட்டு நெசவா ளர்களாக உள்ளனர். முதல் சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசிய கொடியை நெய்து தந்து நாம் பாரத நாட்டின் வரலாற்றில், ஆரணி பட்டு நெசவாளர்கள் பங்கேற்றுள்ளனர். நாடு 68 வது சுதந்திர தினத்தை நெருங்கி உள்ள நிலையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர், ஆரணியில் பட்டு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைவதுடன், இப்பகுதியில் பட்டு உற்பத்தியையும் பாதுகாக்க முடியும். இவ்வாறு ஆரணி எம்.பி., ஏழுமலை பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X