பொது செய்தி

தமிழ்நாடு

அலவாய்மலை நீர் வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Added : நவ 11, 2010
Advertisement

நாமக்கல்: ராசிபுரம் அருகே அலவாய் மலை சித்தேஸ்வர் கோவில் அருகே உள்ள சிறிய நீர்வீழ்ச்சியில் தொடர் மழைப்பொழிவால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அருவி மற்றும் மலை அழகை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பாலப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற அழியா  இலங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஐப்பசியில் வெகு விமரிசையாக கோவில்  திருவிழா கொண்டாப்படுவது வழக்கம். தற்போது கோவில் திருவிழா துவங்கியுள்ளது.  கோவிலுக்கு வரும் மக்கள் அங்கிருந்து இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள அலவாய் மலை சித்தேஸ்வர் கோவிலுக்கு செல்வதும் வழக்கம். அந்த கோவில் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது. தவிர, கோவில் அருகில் சிறிய நீர்வீழ்ச்சியும் உள்ளது. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அருவியில் குளித்து மகிழ்வது வழக்கம். ஆண்டு முழுவதும் அந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து இருக்கும். சில வாரங்களாக மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தொடர் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், அந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.


அதனால் சித்தேஸ்வர் கோவில் மற்றும் அருகே உள்ள நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ சேலம், ராசிபுரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத்துவங்கியுள்ளனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் கூறுகையில், ""பாலப்பாளையம் அழியா இலங்கை கோவிலில் இருந்து இரண்டு கி.மீ., தூரத்தில் அலவாய் மலையில் சித்தேஸ்வர் கோவில் உள்ளது. கோவிலுக்கு செல்ல பாதுகாப்பான பாதை வசதி உள்ளது. அந்த கோவிலைச் சுற்றிலும் மலைகள் சூழ்ந்துள்ளது. ""மேலும், கோவிலைச் சுற்றிலும் உள்ள பாறைகளின் இடுக்கு குகை போல் உள்ளது. பல ஆண்டுக்கு முன் அக்குகைக் பகுதியினுள் சித்தர்கள் அமர்ந்து தியானம் செய்து வந்ததாக, இங்குள்ளோர் தெரிவித்தனர். கோவில் அருகில் சிறிய அளவிலான நீர் வீழ்ச்சி உள்ளது. தற்போது பெய்து வரும் மழைப்பொழிவால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ""அதனால் விடுமுறை தினத்தில் குழந்தைகளுடன் இங்கு வந்துள்ளோம். பாதுகாப்பு நிறைந்த இடமாக உள்ளதால் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து அருவி நீரில் குளித்து குதூகளிக்கலாம்,'' என்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X