'வெள்ளாவி வைச்சுத்தான் வெளுத்தாய்ங்களா இல்லை வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா, ஆடி ஆத்தி ஆத்தி ஆத்தி என்னாச்சோ' என ஆடுகளத்தில் அழகான ஆரம்பமாய் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பொழிந்த ஐஸ் கிரீம் மழை, இளமை, இனிமை, புதுமை என முப்பரிமாணம் காட்டும் கண்ணாடிச் சிலை.'காஞ்சனா 2'வில் 'கெட்ட சிவா மொட்டை சிவா' என, 'டெரர் டயலாக்' பேசி ரசிகர்களின் இதயத்தில் சீறிப் பாய்ந்த அழகான அலை, டில்லி பொண்ணு... டாப்ஸி பன்னு மதுரையில் தினமலர் வாசகர்களுக்காக பேசிய கலகல நிமிடங்கள்...* இளைஞர்களை 'ஆத்தி ஆத்தி' என ஆட வைத்தீர்களே?ஆடுகளம் படத்துக்கு முன் டில்லியை விட்டு வேறு எங்கும் போனதில்லை. நடிப்பு, மொழி என எதுவுமே தெரியாமல் வந்து நின்றேன். சூட்டிங் ஸ்பாட் போகும் போது கிளாஸ் ரூம்க்குள்ள போறமாதிரியே பீல் பண்ணினேன். இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் நேஷனல் அவார்டு வாங்கிய படம். மறக்கவே முடியாது.* ஆடுகளத்திற்கு பின் ஆளை காணோமே?ஆடுகளம் படம் நடிக்கும் போதே தெலுங்கு படம் ஒன்றில் நடித்தேன். அதற்கு பின் ஜீவாவுக்கு ஜோடியாக 'வந்தான் வென்றான்' படத்தில் நடித்தேன். என்னோட கேரக்டர், ரசிகர்கள் மனசுல நிற்கனும். அந்த மாதிரி ஒரு படத்திற்காக காத்திருந்தேன்.* 'வெள்ளாவி வைச்சுத்தான்' பாட்டு உங்களுக்காக எழுதியதா?இல்லை, நான் ஆடுகளம்ல நடிக்க வரதுக்கு முன்னாடியே இந்த பாட்டை எழுதிட்டாங்க. படம் ரிலீஸ் ஆன பின்னாடி தான் உணர்ந்தேன், எனக்காகவே எழுதுன மாதிரி இருக்குன்னு. எங்க போனாலும் இந்தப் பாட்டை பாடி தான் என்னை வரவேற்கிறார்கள்.* 'ஆரம்பம்' படத்தில் அஜித், ஆர்யாவுடன் நடித்தது?அஜித் என்னை பார்த்ததுமே இந்தப் படத்துல நடிக்க வந்ததுக்கு 'தேங்க்ஸ்'ன்னு சொன்னார். இயக்குனர் முதல் புரடக்ஷன் பாய் வரை குட்மார்னிங் சொல்வார், அருமையான மனிதர். சூட்டிங் ஸ்பாட்டே கலகலன்னு இருக்கும் இன்னொரு சான்ஸ் கிடைச்சா இந்த டீம் கூட ஒரு படம் பண்ணணும்.* ஆர்யா அடிக்கடி காமெடி பண்ணுவாராமே?ஆமா, ரியல் லைப்ல அவர் ஒரு காமெடியன் தான். அவ்வளவு ஜாலியா பேசுவார். நயன்தாராவும் ரொம்ப நல்ல டைப். இப்பக்கூட நயன் கூட டைம் கிடைக்கும் போது பேசுவேன்.* என்டர்டெயின்மென்ட் பேய் காஞ்சனா பற்றி...எனக்கு பேய் படமே பிடிக்காது. லாரன்ஸ் தான் உங்களால முடியும் நடிங்கன்னு நடிக்க வைச்சார். என் மேல என்னை விட அவர் தான் அதிக நம்பிக்கை வைச்சிருந்தார். அவர் கூட டான்ஸ் ஆடுறது கொஞ்சம் கஷ்டம் தான்; இருந்தாலும் நல்லா ஆடியிருக்கேன்.* அடுத்து என்ன படம் நடிக்கிறீங்க?இயக்குனர் திரு படத்தில் கும்பகோணம் கிராம பெண்ணாகவும், செல்வ ராகவன் இயக்கத்தில் ஆக்ஷன் ரோலில் மீண்டும் ஆங்கிலோ இந்தியனாகவும் நடிக்கிறேன்.* பிடித்த ஹீரோ, ஹீரோயின்?ரஜினி கூட ஒரு படமாவது நடிக்கனும். 'காஞ்சனா 2' வில் நித்யா மேனன் நடிப்பை பார்த்து அசந்துட் டேன்.* மதுரை பற்றி என்ன சொல்றீங்க?'நைட்' 2 மணிக்கு சூட்டிங் நடந்தப்போ கூட ரசிகர்கள் வந்து பார்த்தாங்க. நடிகர்களுக்கு நல்ல மரியாதை கொடுக்கும் மக்கள். 'ஆடுகளம்' படத்தில் 'அய்யயோ நெஞ்சு அலையுதடி' பாட்டுல புரோட்டா சாப்பிட்டு, மதுரை புரோட்டாவிற்கு தீவிர ரசிகையாகிட்டேன்ங்க.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE