சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில் நிலையத்திற்கு குண்டு மிரட்டல் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கைது

Added : மே 04, 2015
Share
Advertisement
சென்னை:சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இன்ஜினியரிங் கல்லுாரி மாணவரை, ரயில்வே போலீசார் கைது செய்தனர்.சென்னை, வேப்பேரி யில் உள்ள, காவல் கட்டுப்பாட்டு அறையை, கடந்த, 27ம் தேதி மாலை, 6:10 மணிக்கு, தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், தன் பெயர் முகமது அலாவுதீன் என, தெரிவித்து உள்ளார். அதன்பின், 'சற்று நேரத்தில், எழும்பூர் ரயில் நிலையத்தில்

சென்னை:சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இன்ஜினியரிங் கல்லுாரி மாணவரை, ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சென்னை, வேப்பேரி யில் உள்ள, காவல் கட்டுப்பாட்டு அறையை, கடந்த, 27ம் தேதி மாலை, 6:10 மணிக்கு, தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், தன் பெயர் முகமது அலாவுதீன் என, தெரிவித்து உள்ளார். அதன்பின், 'சற்று நேரத்தில், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்க உள்ளது; முடிந்தால் தடுத்து பாருங்கள்' என, தெரிவித்துவிட்டு, தொடர்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து, ரயில் நிலையம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, சோதனை பணி நடந்தது. வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை; மிரட்டல் வெறும் புரளி என, தெரியவந்தது.மிரட்டல் வந்த மொபைல் போன் எண்ணின், 'சிம் கார்டு' ஓசூரைச் சேர்ந்த, காந்திமதி என்பவரது பெயரில் வாங்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. ஓசூருக்கு ரயில்வே போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.சென்னை, வண்டலுாரில் உள்ள காந்திமதி யின் உறவு பெண் ஒருவர், அந்த சிம் கார்டை பயன்படுத்தி உள்ளார். சமீபத்தில், சிம் கார்டு காணாமல் போயுள்ளது தெரிய வந்தது.
சென்னையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஹரீஷ், 20 என்பவர், அந்த சிம் கார்டை எடுத்து உள்ளார்.போதை பாக்கு போடும் பழக்கம் உள்ள அந்த மாணவர், சம்பவ தினத்தன்று முதலில், '108'க்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து உள்ளார். பின், '100'க்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து உள்ளார். அவரை ரயில்வே போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X