சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து துவங்கிய மூன்றாவது நாளில் பழநி - கொடைக்கானல் ரோட்டில் மீண்டும் சரிவு

Added : நவ 11, 2010
Share
Advertisement
பழநி : ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக, பழநி - கொடைக்கானல் ரோட்டில் நேற்று அதிகாலை மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. பழநி - கொடைக்கானல் ரோட்டில், பல இடங்களில் மழை நீர் கடக்க வழி இல்லை. ஏற்கனவே இரண்டு முறை லேசான நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், நவ., 3ல், நான்காவது கொண்டை ஊசி வளைவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பழநியில் இருந்து 20 கி.மீ., தூரத்தில், வட்டமலை - சவரிக்காடு
போக்குவரத்து துவங்கிய மூன்றாவது நாளில் பழநி - கொடைக்கானல் ரோட்டில் மீண்டும் சரிவு

பழநி : ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக, பழநி - கொடைக்கானல் ரோட்டில் நேற்று அதிகாலை மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. பழநி - கொடைக்கானல் ரோட்டில், பல இடங்களில் மழை நீர் கடக்க வழி இல்லை. ஏற்கனவே இரண்டு முறை லேசான நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், நவ., 3ல், நான்காவது கொண்டை ஊசி வளைவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால், பழநியில் இருந்து 20 கி.மீ., தூரத்தில், வட்டமலை - சவரிக்காடு இடையே, 25 மீட்டர் நீளத்திற்கு ரோடு சேதமடைந்தது. இந்த இடத்தில், மணல் மூட்டைகளை அடுக்கி, தற்காலிக ரோடு அமைக்கப்பட்டு நவ., 8ல் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டது. பழநியில் கனமழை பெய்ததால், கொடைக்கானல் ரோட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு மீண்டும் அதே இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட ரோடு, ரோட்டோர இரும்பு தடுப்புகள், மணல் மூட்டைகள், 60 அடி ஆழத்திற்கு அடித்துச் செல்லப்பட்டன. கடந்த வாரம் ஏற்பட்ட சரிவை விட இது அதிகமாக இருந்தது. சம்பவத்தின் போது வாகனங்கள் ரோட்டை கடக்காததால், விபத்து நிகழவில்லை. மலைக்கிராம விவசாயிகள், விளை பொருட்களை கொண்டு வர முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ஜெயராஜ் கூறுகையில், ""சேதமடைந்த பகுதியில் ஏற்கனவே தற்காலிக ரோடு தான் அமைக்கப்பட்டிருந்தது. மழைநீர் செல்வதற்கான வாய்க்காலை விட அதிகளவு தண்ணீர் கடந்து சென்றுள்ளது. தற்காலிக ரோட்டின் இருபுறமும் உள்ள, முந்தைய ரோட்டின் இணைவு பகுதி மழைநீரால் பாதித்துள்ளது. எனவே தற்போது சேதத்தின் அளவு அதிகரித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. தற்காலிக ரோடு பணி நான்கு நாட்களில் முடியும்,'' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X