பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் அமைகிறது 'எய்ம்ஸ்' மருத்துவமனை? செங்கல்பட்டு நிராகரிப்பு

Updated : மே 05, 2015 | Added : மே 04, 2015 | கருத்துகள் (4)
Share
Advertisement
மத்திய குழு ஆய்வு முடிந்துள்ள நிலையில், தமிழகத்தில், செங்கல்பட்டில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைய, வாய்ப்பில்லை எனவும், மதுரைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.டில்லியில் உள்ள, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான, 'எய்ம்ஸ்' மருத்துவமனை மிக பிரபலமானது. அனைத்து வகையான சிகிச்சை வசதிகள் இடம் பெற்ற மருத்துவமனை இது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய
Madurai, AIIMS, hospital, மதுரை, 'எய்ம்ஸ்', மருத்துவமனை, செங்கல்பட்டு, நிராகரிப்பு

மத்திய குழு ஆய்வு முடிந்துள்ள நிலையில், தமிழகத்தில், செங்கல்பட்டில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைய, வாய்ப்பில்லை எனவும், மதுரைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.டில்லியில் உள்ள, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான, 'எய்ம்ஸ்' மருத்துவமனை மிக பிரபலமானது. அனைத்து வகையான சிகிச்சை வசதிகள் இடம் பெற்ற மருத்துவமனை இது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பொறுப்பேற்றவுடன், 'தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படும்; அதற்கான நிலத்தை தேர்வு செய்து தர வேண்டும்' என, தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து, மதுரை - தோப்பூர்; ஈரோடு - பெருந்துறை; காஞ்சிபுரம் - செங்கல்பட்டு; தஞ்சை - செங்கிப்பட்டி; புதுக்கோட்டை என, ஐந்து இடங்களில், தலா, 200 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு, தமிழக அரசு அனுப்பியது. இதை தொடர்ந்து, மத்திய சுகாதாரத் துறை இணை செயலர் தலைமையிலான, ஐந்து பேர் குழு, கடந்த வாரம், தமிழகம் வந்தது. இந்த குழு, இரு தினங்கள் தங்கி, ஐந்து இடங்களையும், அவற்றின் வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தது. இது தொடர்பான அறிக்கை, சில நாட்களில், மத்திய அரசிடம், வழங்கப்பட இருக்கிறது. இந்த சூழ்நிலையில், எந்த இடத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைய உள்ளது என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் எழுந்துள்ளது. குறிப்பாக, தென் மாவட்ட மக்களுக்கு வசதியாக, மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைய வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைய சாத்தியமில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில், செங்கல்பட்டில், தமிழக அரசு தேர்வு செய்து வழங்கிய, 200 ஏக்கர் நிலம், ஒரே இடத்தில் இல்லை. மருத்துவக் கல்லூரியை ஒட்டி ஒரு இடம், 2 கி.மீ., தொலைவில் மற்றொரு இடம் உள்ளதால், ஒருங்கிணைப்பு பணியில் சிக்கல் ஏற்படும் என, கருதப்படுகிறது. எனவே, செங்கல்பட்டு நிராகரிக்கப்படும் என, தெரிகிறது. புதுக்கோட்டையில், தேர்வு செய்யப்பட்ட நிலம், ஒரே இடத்தில் இருந்தாலும், பல மாவட்டங்களில் இருந்து, மக்கள் வந்து செல்லும் வகையில் ரயில் போக்குவரத்து வசதி இல்லாதது குறையாக உள்ளது. இதன் காரணமாக, மதுரை அல்லது ஈரோட்டில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைய வாய்ப்புள்ளது. இவற்றில், தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள மதுரைக்கு, முக்கியத்துவம் கிடைக்க வாய்ப்புள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இம்மாதத்திற்குள், 'எய்ம்ஸ்' மருத்துவமனை எந்த இடத்தில் அமையும் என்பது உறுதியாகிவிடும்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajarajeswari - madurai,இந்தியா
22-செப்-201511:59:15 IST Report Abuse
rajarajeswari ஈயிம்ஸ் மதுரைல அமைந்த எல்லாருக்கும் பயண இருக்கும் எல்லா வசதிகளும் உள்ள மருத்துவமனை மதுரை மக்கள் அவளோடு இருக்குறோம் அம்மாதான் தெரிவிக்கணும் ...மனசுவைஇகனும் ...
Rate this:
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
05-மே-201502:36:11 IST Report Abuse
Sekar Sekaran நல்லதோர் முயற்சியில் மத்தியில் இருப்போரும்..மாநில அரசாங்கமும் இணைந்து செய்திடும் அற்புதமான முயற்சி இது. மதுரையில் அமைவது சாலச்சிறந்தது. சென்னையில்தான் ஏற்க்கனவே தண்ணி தொட்டி போல கட்டப்பட்டுள்ள சட்டமன்ற கட்டிடம் என்று சொல்லி 1500 கோடியை சுளையாய் முழுங்கிய திமுக ஆட்சி ஊழல் கட்டிடத்தில்தான் ஓர் மருத்துவமனை இயங்க ஆரம்பித்துவிட்டதே..அதனால் மதுரையில் அமைவதே சிறந்த ஒன்று. இந்த மருத்துவமனையை பா ம க அன்புமணியும் அவர்தம் ராமதாஸ் அவர்களும் சுளையாய் முழுங்க நினைத்தமாதிரி அடுத்த முறை அப்படி யாரும் நினைத்திடாத வகையில் இந்த மருத்துவமனை அமைந்திட வாழ்த்துக்கள். லேடி ஆட்சியையும்..மோடி ஆட்சியும்..இணைந்து இப்படி நல்ல நல்ல காரியங்களை செய்துவந்தால்...இனி இங்கே அம்மாவின் ஆட்சிக்கு எதிராக எந்த எதிர்ப்புமே இல்லாமல் காணாமல் போவார்கள்..வாழ்த்துக்கள்.. எங்கே இந்த மருத்துவமனை தமிழகத்தில் அமைந்தாலும்..
Rate this:
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
05-மே-201501:49:31 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை மதுரைலதான் ஆயுதங்கள் அதிகமா புழங்குற இடம் அதனால மதுரைலதான் எய்ம்ஸ்' மருத்துவமனை வரணும் டாக்ட்டரே வீச்சருவாலதான் ஆபரேசன் செய்வார்
Rate this:
Veluswamy Aravintraj - Srivilliputtur,இந்தியா
05-மே-201506:37:53 IST Report Abuse
Veluswamy Aravintraj"குஞ்சு" மணி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X