Water plants with urine to make them grow bigger, says Gadkari | 'சிறுநீர் ஊற்றினால் பயிர்கள் செழிக்கும்': கட்காரி| Dinamalar

'சிறுநீர் ஊற்றினால் பயிர்கள் செழிக்கும்': கட்காரி

Updated : மே 07, 2015 | Added : மே 05, 2015 | கருத்துகள் (67)
Advertisement
'சிறுநீர் ஊற்றினால் பயிர்கள் செழிக்கும்': கட்காரி

புதுடில்லி: ''சிறுநீரை பயிர்களுக்கு பாய்ச்சினால், செழிப்பாக வளரும் பயிர்கள், அமோக விளைச்சலையும் கொடுக்கின்றன; இது, சொல்றதுக்கு அசிங்கமாக இருக்கலாம்; ஆனால், பலன் தரக்கூடியது,'' என, மத்திய அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, நிதின் கட்காரி கூறினார்.

பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றில், நிதின் கட்காரி பேசியதாவது: நாட்டில் பல இடங்களில் வறட்சி, தண்ணீர் இல்லை என்கின்றனர்; தண்ணீரின்றி, பயிர்கள் நாசமாகிப் போனதாக பலரும் கூறுகின்றனர். அவர்களுக்கு, நான் ஒரு யோசனை சொல்வேன். தண்ணீர் இல்லை என்றால் என்ன, சிறுநீரை பயன்படுத்திப் பாருங்கள்; நான் இதை விளையாட்டாக சொல்லவில்லை; உண்மையிலேயே பரிசோதனை செய்து பார்த்துள்ளேன். டில்லியில், நான் இருக்கும் பங்களா, பல ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் இருக்கிறது. அதில் இருக்கும் தோட்டத்தில், சிறுநீர் சோதனை செய்தேன்; சிறுக, சிறுக சிறுநீரை சேகரித்து வந்தேன்; ஒரு பிளாஸ்டிக் கேனில், 50 லிட்டர் சேர்ந்ததும், தோட்டக்காரனை கூப்பிட்டு, இதை, மரங்களுக்கு பாய்ச்சு என்றேன்.அதன்படி, சிறுநீர் பாய்ச்சப்பட்ட மரங்கள் வேகமாக வளர்ந்தன; அவற்றில் மகசூலும் அதிகமாக இருந்தது. இதை சொல்வதற்கு வேண்டுமானால், அருவருப்பாக இருக்கலாம்; ஆனால், நல்ல பலன் தரக்கூடியது.இவ்வாறு, அவர் கூறினார்.


கரித்து கொட்டிய 'நெட்டிசன்கள்':

கட்காரியின், சிறுநீர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இணையதளங்களில், ஏராளமானோர் அவரை, கரித்துக் கொட்டிவிட்டனர்.
*கட்காரி வீட்டிலிருந்து பழம், காய்கறி ஏதும் கொடுத்தால், வாங்கி சாப்பிட்டு விடாதீங்க!
*கட்காரி நம் மீது, சிறுநீர் கழிக்கிறார்.
*கட்காரி வீட்டுக்கு விருந்துக்கு சென்ற, அமெரிக்க அதிகாரி ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட பழக்கலவை (சாலட்) சிறுநீர் மரத்தில் விளைந்ததா என, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுள்ளார்.இவ்வாறு, ஏராளமானோர், கட்காரிக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


அஜித் பவார் - நிதின் கட்காரி:

நிதின் கட்காரியின் சொந்த மாநிலமான, மகாராஷ்டிராவில், கடந்த முறை, காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சியில், துணை முதல்வராக இருந்த, தேசியவாத காங்கிரசை சேர்ந்த, அஜித் பவார், 'அணைகளில் தண்ணீர் இல்லை என்பதற்காக, மூத்திரம் பெய்தா நிரப்ப முடியும்?' என்றார். அதுபோல, கட்காரியும், சிறுநீர் பற்றி பேசியுள்ளார்.வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhu - Trichy,இந்தியா
10-மே-201510:08:21 IST Report Abuse
 Madhu 'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருளில் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு. கருத்து சொல்பவர் நமக்கு எதிரணியில் இருப்பவர் அல்லது மத சார்புடைய கட்சியைச் சார்ந்தவர் என்பதற்காக மட்டும் எதிப்பு கருத்துக்களை பதிவிடுவது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. எவருமே 100% சுத்த தண்ணீரில் விவசாயம் செய்வதில்லை. சுத்தமான மினரல் வாட்டரில் விவசாயம் செய்பவரைக் காட்ட முடியுமா? வாய்க்கால் வரப்புகளின் ஊடே பாயும் நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல. விவசாயத்திற்குத்தான் ஏற்றது. அதேபோல வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நிரில்தான் (நீங்கள் வெளியேற்றும் சிறுநீரும்தான்) உங்கள் வீட்டுக் கொல்லையில் தென்னையும், வாழையும், பல பூச்செடிகளும் வளர்கின்றன. மண்ணானது தண்ணீரை மட்டும் உறிஞ்சிக் கொள்கிறது. ஒரு 10 கன அடி மண் இதை வடிகட்டி கீழே அனுப்புகிறது என வைத்துக் கொள்வோம். இப்படி வடிகட்டப்பட்ட நீர் நம் கண்ணுக்குத் தெரியாது. ஆனால், தென்னை மரத்திற்கும், வாழை மரத்திற்கும் நுண்ணிய வேர்கள் மூலம் இது தெரியும் அவைகளைக் கிரகித்துக் கொள்ளும். கோடை காலங்களில் வயலைக் காய விடுவார்கள். பின்னர் ஆடு மாடுகளை அங்கே கட்டி வைப்பார்கள். வாத்துகளைக் கூட்டமாக இரவில் அடைத்து வைத்துக் காவல் காப்பார்கள். எதற்காக? இயற்கை உரத்திற்காக. மக்கிப்போன குப்பைகளையும், இல்லை தழை போன்றவைகளையும் மண்ணுடன் சேர்த்து குவியல் குவியலாக சேர்ப்பார்கள். மனித கழிவுகளும் இதில் சேர்வதுண்டு. இதன் பிறகு மேல் மண் கீழ் மண்ணாகவும், கீழ் மண்ணாகவும் மாறும்படி கொத்துவார்கள், புறட்டுவார்கள், கலப்பார்கள் . மழை பெய்யும். அல்லது நீர் பாய்ச்சுவார்கள். பிறகுதான் உழவு ஆரம்பிக்கும். விதை விதைப்பார்கள். இப்போது சொல்லுங்கள். நீங்கள் உண்ணும் உணவின் ஒரு மூலப் பொருளாக நமது கழிவுகளே அமைகின்றனவா இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
sp kumar - Chennai,இந்தியா
06-மே-201512:36:49 IST Report Abuse
sp kumar நாவலர் நல்ல தமிழ், ஆங்கிலப் புலமை உள்ளவர் . சிறு நீர்பாசனம் சிறுநீர்ப்பாசனம் என்று பிரித்துப் படித்தால் அர்த்தம் வேறு . குடிசைத்தொழில் என்றால் குடிசை கட்டும் தொழில் அல்ல குடிசைக்குள் செய்யும் சிறு தொழில் . பெரிய கட்டடம் தேவையில்லை என்று பொருள் .நாம வெளங்கிக்காமலே விமர்சனம் செய்பவர்கள் .கத்காரி அவர் தோட்டத்துக்கு வேண்டுமானால் பாய்சட்டும் நாடு நாறிப் போயிடும் ..
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
06-மே-201512:11:17 IST Report Abuse
Nallavan Nallavan சிறுவயதில் நான் விளையாட்டாக தொடர்ந்து சில தடவைகள் ஒரு செடியில் இவ்வாறு செய்து அது பட்டுப் போனது ..... பின்னாளில் மிகவும் வருந்தினேன் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X