மோடியின் ஜாதி பெருமை பிரம்மாண்ட 'சீரியல்' தயாரிப்பு

Added : மே 06, 2015 | கருத்துகள் (7) | |
Advertisement
ஆமதாபாத்: பிரதமர் மோடி சார்ந்துள்ள ஜாதியின் பெருமையை பேசும் விதத்தில், 'தூர்தர்ஷன்' 'டிவி'க்காக, பிரம்மாண்ட தொடர்தயாரிக்கப்பட உள்ளது. ஓ.பி.சி., எனப்படும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள, கான்சி ஜாதியை சேர்ந்தவர், பிரதமர் மோடி. இந்த ஜாதியினரின் குலத்தொழில், எண்ணெய் எடுப்பது.இந்த சமுதாயத்தை சேர்ந்த, மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த, சுரேஷ் சவுதாரி
 மோடியின் ஜாதி பெருமை பிரம்மாண்ட 'சீரியல்' தயாரிப்பு


ஆமதாபாத்: பிரதமர் மோடி சார்ந்துள்ள ஜாதியின் பெருமையை பேசும் விதத்தில், 'தூர்தர்ஷன்' 'டிவி'க்காக, பிரம்மாண்ட தொடர்தயாரிக்கப்பட உள்ளது. ஓ.பி.சி., எனப்படும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள, கான்சி ஜாதியை சேர்ந்தவர், பிரதமர் மோடி. இந்த ஜாதியினரின் குலத்தொழில், எண்ணெய் எடுப்பது.
இந்த சமுதாயத்தை சேர்ந்த, மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த, சுரேஷ் சவுதாரி என்பவர், தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக, 'தியே ஜல்தி ஹெய்ன்' என்ற பெயரில், தொடர் ஒன்றை தயாரிக்க, பூஜை போட்டுள்ளார்.இதில், சாதாரண ஜாதியில் பிறந்தாலும், உயர்ந்த நிலையை அடையலாம் என்பதற்கு உதாரணமாக, சந்திரகுப்த மவுரியர், மாவீரர் அசோகர் ஆகியோருடன், பிரதமர் மோடியும் காட்டப்பட உள்ளார்.
சந்திரகுப்த மவுரியர், 'மொரியா' என்ற பழங்குடியினத்தை சேர்ந்தவர். போர்க்கலையில் வல்லவரான அவர், மாபெரும் மன்னராக விளங்கினார். அதுபோல, அவரின் பேரன் அசோகரும், சிறந்த போர் வீரர்.
பிரதமர் மோடியும், சாதாரண, எண்ணெய் எடுக்கும் தொழிலை செய்யும் ஜாதியை சேர்ந்தவர்; நாட்டின் உயரிய பிரதமர் பதவியை அடைந்தவர் என, அந்த, 'டிவி' தொடரில் காட்டப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
18-ஜூலை-201908:01:56 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நல்லவர் நீடு வாழனும். திறமையை வைத்து இறைவன் ஜாதியை படைக்கிறானா அல்லது ஜாதியினால்தான் திறமை வெளிப்படுகிறாதா இறைவன் படைப்பில் .
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
06-மே-201519:09:56 IST Report Abuse
Sandru எண்ணெய் எடுப்பது , டீ போடுவது எல்லாம் மிகவும் கவுரவமான தொழில்கள். ஆனால், விவசாயிகள் நிலங்களை பிடுங்குவது முறையான செய்கை அல்லது தொழில் அல்ல.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-மே-201518:25:32 IST Report Abuse
Malick Raja மேக் இன் இந்தியா தொடரையும் இதோடு சேர்த்தல் நல்லது. மோடியின் வாழ்கையை புத்தகமாக செய்து கல்வித்துறைக்கு சேர்ப்பதும் நல்லது. டீக்கடை, ஆகா என்ன பொருத்தம் எடுங்கப்பா நாடு சுபிட்சமாகும் வெகு விரைவில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X