அரசியல் செய்தி

தமிழ்நாடு

கிரீமி லேயர் உச்சவரம்பு பரிந்துரையை ஏற்க கருணாநிதி கோரிக்கை

Updated : மே 08, 2015 | Added : மே 07, 2015 | கருத்துகள் (69)
Share
Advertisement
சென்னை: 'கிரீமி லேயர் உச்சவரம்பை உயர்த்த, தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் பரிந்துரையை, மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய கமிஷன், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், கிரீ மிலேயர் உச்ச வரம்பை, தற்போதுள்ள ஆறு லட்சம் ரூபாய்
கிரீமி லேயர் உச்சவரம்பு பரிந்துரையை ஏற்க   கருணாநிதி கோரிக்கை

சென்னை: 'கிரீமி லேயர் உச்சவரம்பை உயர்த்த, தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் பரிந்துரையை, மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய கமிஷன், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், கிரீ மிலேயர் உச்ச வரம்பை, தற்போதுள்ள ஆறு லட்சம் ரூபாய் என்பதிலிருந்து, பத்தரை லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என, மத்திய
அரசுக்கு வரவேற்கத்தக்க பரிந்துரை ஒன்றை செய்துஉள்ளது.

இந்தப் பரிந்துரையை, மத்திய பா.ஜ., அரசு ஏற்றுக் கொண்டால், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை சேர்ந்த, கோடிக்கணக்கானவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளில் வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் மேலும் கூடுதல் இடஒதுக்கீடு பலன்கள் கிடைக்கும். மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் மட்டும், 27 சதவீத இடஒதுக்கீடு, வி.பி.சிங் முயற்சியால் கிடைத்தது. இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கீரன் கோவை - Coimbatore,இந்தியா
08-மே-201502:01:40 IST Report Abuse
கீரன் கோவை தலீவா உங்க கணக்குப் படி மாதம் 83 ஆயிரம் ஊதியம் வாங்குபவர்கள் ஏழை பாழைகள். அவர்களால் தினம் நூறு ரூபாய் கூலி வாங்கும் குடும்பப் பிள்ளைகள் பாதிக்கப்பட்டாலும் சரி, நமக்கு ஜாதி ஓட்டும் ஜாதி அரசியலும் முக்கியம். ஆகையால் கொளுத்திப் போட்டுட்டு குளிர் காயுங்கள்..........ஆனா தலிவா உச்ச வரம்பை 20 லட்சம் ஆக்கிப் புடலாம். அப்பத்தான் மாதத்திற்கு நமது அதிர்ஷ்ட எண்ணாக மாதம் ரூபாய் 1.74 லட்சம் வாங்கி ஏழையாக இருப்பவர்கள் பயன் பெறுவார்கள்.
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-மே-201513:32:49 IST Report Abuse
Sriram V As per Original constitution, the reservation is only for needy, otherwise only creamy layer people will be getting the benefits and not the needy people. Central government must reject this recommendation. Reservation is required only for down trodden people. Otherwise son of BC/SC/ST IAS officer will become IAS officer.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
07-மே-201512:33:53 IST Report Abuse
Chandramoulli தமிழ் நாட்டை குட்டி சுவராக்கி , ஜாதி அரசியல் செய்து , தமிழகத்தில் உள்ள தமிழ் மக்களையே அவர்களுக்குள் ஜாதி வெறியை உண்டாக்கி , எவரையும் முன்னேற விடாமல் செய்தது கருணாநிதி குடும்பம் . மற்றும் அவர் கட்சியின் ஜால்ரா தலைவர்கள் குடும்பம் மட்டும் எல்லாவற்றிலும் மிகவும் முன்னேற்றம் அடைந்த பணக்காரர்கள் பட்டியலில் உள்ளனர் . என்றைக்கு பொருளாதாரத்தின் அடிப்படையில் ஒதுக்கிடு ஆரம்பம் ஆகிறதோ அன்று தான் இந்திய முன்னேறும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X