ஒரே செடியில் 500 காய்கள் காய்க்கும்"லக்னோ' கொய்யா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே செடியில் 500 காய்கள் காய்க்கும்"லக்னோ' கொய்யா

Added : மே 07, 2015
Advertisement

திண்டுக்கல் : ஒரே செடியில் 500 காய்கள் காய்க்கும் "லக்னோ 49' கொய்யாவை சாகுபடி செய்வதில் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த கொய்யா உத்திரபிரதேசம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டது. எந்த காலத்திலும் சாகுபடி செய்யலாம். இவை 3 மாதத்தில் காய்க்க துவங்கும். ஆண்டு முழுவதும் காய்க்கும். அதிகபட்சம் 3 அடி வளரும். ஒரே செடியில் ஆண்டிற்கு 500 காய்கள் காய்க்கும். ஒரு பழம் 750 கிராம் வரை இருக்கும். அடர்வு முறையில் ஒரு ஏக்கருக்கு 800 செடிகள் வரை நடலாம். ஏக்கருக்கு மூன்று லட்சம் கிலோ கிடைக்கும். அதிக லாபம் கிடைப்பதால் "லக்னோ 49' கொய்யாக்களை சாகுபடி செய்வதில் திண்டுக்கல், பழநி, ரெட்டியார்சத்திரம், பலக்கனூத்து விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். பலக்கனூத்து விவசாயி எம்.மனோஜ் கூறியதாவது: பழம் சுவையாக இருக்கும். கிலோ ரூ.60 க்கு விற்கலாம். இதனால் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் லாபம் கிடைக்கும். பராமரிப்பு செலவு குறைவு. கொய்யா கன்றுகளை ஒட்டு முறையில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு தருகிறோம். ஒரு செடி ரூ.50 விற்கிறோம், என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X