இது நமது ஜனநாயக கடமை| Dinamalar

இது நமது ஜனநாயக கடமை

Added : மே 08, 2015
Advertisement

இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு அம்சமாகவும், தனித்துவம் மிக்கதுமாக இருப்பது தேர்தல். தற்போது தேர்தல் நடத்துவதற்கு உதவியாக இருப்பது இன்றைய நடைமுறையிலுள்ள புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் பட்டியல். இருப்பினும் இந்த புகைப்பட வாக்காளர் பட்டியலிலும் மேலும் சிறப்பு சேர்க்க ஆதார் எண்ணை இணைப்பது என்பது இக்கால சூழ்நிலையில் மிக அத்தியாவசியம்.சோழர் காலத்தில் குடவோலை முறையில் நடந்த தேர்தலானது மேலும் மேலும் மெருகூட்டப்பட்டு பல வளர்ந்த, வளர்ந்து விட்ட நாடுகளும் கூட நம் நாட்டை பார்த்து வியந்து போகிற வகையில் தற்போதைய தேர்தல் நாட்டில் நடக்கிறது. தற்போதும் கூட இறந்த வாக்காளர்கள், இடம் பெயர்ந்து சென்ற வாக்காளர்களை நீக்காமல் இருப்பதாலும் ஒரே வாக்காளரின் பெயர்கள் இரு இடங்களில் இடம் பெற்றிருப்பதாலும் ஓட்டுப்பதிவு சதவீதத்தை 100 சதவீதம் இதுநாள் வரை அடையமுடியவில்லை. தற்போது நடைமுறையிலுள்ள புகைப்பட வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் பட்சத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவு என்ற இலக்கை அடையலாம்.எண்ணற்ற பயன்கள் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் பட்சத்தில் ஒரே வாக்காளர் இரு வெவ்வேறு இடங்களில் வாக்காளராக பதிவு செய்வதை முற்றிலும் தவிர்க்க முடியும். ஏற்கனவே நம் கண்ணின் கருவிழியும், கைரேகையும் ஸ்கேன் மூலம் ஆதார் பதிவில் உள்ளதால் தற்போது அது வாக்காளர் பட்டியலிலும் பதிவு செய்யப்படும் போது ஒரு நபரை பற்றி கூடுதலான தகவல்களை நம்மால் பெற முடியும். ஆதார் எண்ணை கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எங்கு வசித்து வந்தார் என்பதையும், வாக்காளர் பட்டியலினை கொண்டு அந்த நபர் தற்போது எங்கு வசித்து வருகிறார் என்பதையும் அறிந்து கொள்ள முடியும். நம் எதிர்கால சந்ததியருக்காக இப்பணி மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது. ஆதார் எண்ணையும், வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணையும் இணைக்கிற பட்சத்தில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுமேயானால் ஓர் இடத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபர் இறந்து விட்டால் அவரது கண் விழியினை அல்லது அவரது கைரேகையினை ஸ்கேன் செய்து ஸ்மார்ட் கார்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்பட்சத்தில் அவர் நிரந்தரமாக எந்த ஊரை சேர்ந்தவர் என்று அறியலாம். தற்போது அவர் எந்த பகுதியில் வசித்து வருபவர் என்றும், அவரது உறவினர்கள் யார் எனவும் ஒரிரு வினாடிகளில் அறிந்து கொள்வதுடன், அவர்களை அலைபேசியில் உடன் தொடர்பு கொள்ள முடியும்.தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி நாடு சந்தித்து வரும் பிரச்னைகளில் முக்கிய பிரச்னை தீவிரவாதம். ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும்பட்சத்தில் தீவிரவாதத்திற்கு நம்மால் முற்றுப்புள்ளி வைக்க வாய்ப்பாக அமையும். ரயில்வே ஸ்டேஷன், வழிபாட்டு தலங்களுக்குள் உள்ளே செல்பவர்களின் ஸ்மார்ட் அட்டையினை பதிவு செய்து விட்டு, உள்ளே அனுமதிக்கும்பட்சத்தில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், குடியிருப்பு விவரங்களை எளிதில் அடையாளம் காணலாம். நாட்டின் ஜனநாயகத்திற்கும், நம் எதிர்கால சந்ததியினருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைய போகும் இப்பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். இது நம் ஜனநாயக கடமை என உணர்த்தல் வேண்டும்.எதற்காக விண்ணப்பங்கள் l 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதுவரை எந்தவொரு வாக்காளர் பட்டியலிலும் இடம் பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று ஏதோ ஒரு காரணத்திற்காக நீக்கம் செய்யப்பட்டவர்கள் விண்ணப்பம் 6ஐ பூர்த்தி செய்து ஓட்டுசாவடி மைய அலுவலர் அல்லது தாசில்தாரிடம் வழங்கலாம்.l இறந்தவர் பெயரோ அல்லது இரு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருப்போர், திருமணம் செய்து வேறிடங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள், வாக்காளர் பட்டியலிலுள்ள பெயரை நீக்க விண்ணப்பம் 7ஐ பூர்த்தி செய்து ஒப்படைக்கலாம்.l தற்போதைய பட்டியலில் பெயரோ, தந்தை அல்லது கணவரின் பெயரோ, பாலினமோ, புகைப்படமோ மாறியிருந்தால் விண்ணப்பம் 8ஐ வழங்கலாம்.l ஒரே தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் பாகத்தில் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் விண்ணப்பம் 8 ஏ ஐ வழங்கலாம்.l ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு இடம் பெயர்ந்தவர்கள் இரு தொகுதிகளிலும் தங்கள் பெயர்கள் இடம் பெறாத வகையில் தங்கள் பெயர் ஏற்கனவே இடம் பெற்றிருந்த தொகுதியில் பெயரினை நீக்க விண்ணப்பம் 7யையும், தற்போது வசிக்கும் தொகுதியில் விண்ணப்பம் 6யையும் வழங்கலாம்.சட்டப்படி குற்றம் ஒரு நபரின் பெயர் இரு வாக்காளர் பட்டியலிலோ அல்லது ஒரே வாக்காளர் பட்டியலில் இரு இடங்களிலோ இடம் பெற்றிருப்பது சட்டப்படி குற்றமாக கருதப்படும்.இதற்காக மாவட்டங்களில் ஓட்டுச்சாவடி மைய அலுவலர்கள் வீடுவாரியாக சென்று பட்டியலில் ஆதார் எண், அலைபேசி எண், இமெயில் முகவரியை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதற்காக ஏப்., 26, மே 10, 24ல் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.வாக்காளர் அட்டையை தொலைத்தவர்கள் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பம் 001ஐ உரிய முறையில் புகைப்பட பிரதியுடன் பூர்த்தி செய்து ரூ.25ஐ செலுத்தி ரசீது பெற்று குறிப்பிட்ட காலத்திற்குள் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை நகல் பெறலாம். ஆதார் அட்டை இதுவரை எடுக்காதவர்கள் அல்லது எடுத்து கிடைக்கப் பெறாதவர்கள் அது குறித்து கலக்கமோ, பதட்டமோ அடைய தேவையில்லை. இவர்களுக்கு வழங்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.ஜனநாயக கடமையாற்றுவோம் நமக்கும் நம் சந்ததியினருக்கும் மிக பயனுள்ளதாக அமையும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நாம் அனைவரும் பங்கேற்று, நுாறு சதவீத ஆதார் எண்ணுடன் இணைந்த புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். இதன் மூலம் நாட்டை தலைநிமிர செய்ய வேண்டும். இது நம் ஜனநாயக கடமை.''நாடு அதை நாடு அதை நாடாவிட்டால்ஏது வீடு''...-கோ.சிவக்குமார்,துணை தாசில்தார்(தேர்தல்),வருவாய்த்துறை,மதுரை.93658 70201.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X