அழுகிய, காய்கறி கழிவுகளில் இருந்து எரிவாயு உற்பத்தி: தெரு விளக்குகளை எரிய வைக்க புதிய முயற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அழுகிய, காய்கறி கழிவுகளில் இருந்து எரிவாயு உற்பத்தி: தெரு விளக்குகளை எரிய வைக்க புதிய முயற்சி

Updated : மே 09, 2015 | Added : மே 08, 2015 | கருத்துகள் (1)
Advertisement
அழுகிய, காய்கறி கழிவுகளில் இருந்து எரிவாயு உற்பத்தி: தெரு விளக்குகளை எரிய வைக்க புதிய முயற்சி

பொன்னேரி: அழுகிய, காய்கறி, பழம் மற்றும் ஈரக்கழிவுகளில் இருந்து, எரிவாயு தயாரித்து, அதன் மூலம், தெரு விளக்குகளை எரிய வைக்கும் புதிய முயற்சியில், சிறுவாக்கம் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது.மீஞ்சூர் ஒன்றியம், சிறுவாக்கம் ஊராட்சி, குப்பையை பிரித்து கையாள்வதில், முன்மாதிரியாக இருந்து வருகிறது. இதற்காக, ஆங்காங்கே, மக்கும், மக்காத குப்பையை கொட்ட, தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.


ரூ.7 லட்சம்:

வீடு மற்றும் கடைகளில், இருந்து வெளியேற்றப்படும், கழிவுகளை கொண்டு, எரிவாயு தயாரித்து, தெரு விளக்குகளுக்கு பயன்படுத்தும் முறையை அறிந்த ஊராட்சி நிர்வாகம், அங்குள்ள தனியார் கன்டெய்னர் நிறுவனத்தின் உதவியை நாடியது. அந்நிறுவனத்தின், மூலம், ஏழு லட்சம் ரூபாய் நிதியில், காய்கறி, பழம் மற்றும் ஈரமான கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இதற்காக, எலவம்பேடு பகுதியில் உள்ள சுடுகாடு அருகே, எரிவாயு தயாரிக்கும் முனையம் அமைக்கப்பட்டு உள்ளது.


செயல்பாடு:

தினமும், வீடு மற்றும் கடைகளில் இருந்து பெறப்படும், காய்கறி, பழம் உள்ளிட்ட ஈரமான கழிவுகளை, அதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ள கிரைண்டர்களில் அரைத்து, கூழாக்கப்படுகிறது, கூழாக்கப்பட்ட கழிவு, பிளாஸ்டிக் உருளை வழியாக, அருகில் உள்ள இரண்டு பெரிய சிலிண்டர்களில் ஊற்றப்படுகிறது. அதிலிருந்து பெறப்படும் எரிவாயு, 1.5 கே.வி., ஜெனரேட்டருக்குள் செலுத்தி இயக்கப்படுகிறது. அதன் மூலம், பெறப்படும் மின்சாரத்தை, தெரு விளக்குகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தினமும், 100 கிலோ கழிவுகள் மூலம், 1,500 வோல்ட் மின்சாரம் பெறப்பட்டு, அதன் மூலம், எட்டு முதல், 10 மணி நேரம் வரை, 50 தெரு விளக்குகளை எரிய வைக்கலாம். தற்போது, மேற்கண்ட திட்டப்பணிகள் முழுமையடைந்து, சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளது. ஓரிரு நாளில், மேற்கண்ட திட்டம் மூலம், தெரு விளக்குகள் எரிய உள்ளன.


மேலும் திட்டம் விரிவு:

இதுகுறித்து, சிறுவாக்கம் ஊராட்சி தலைவர் திலகவதி பாளையம் கூறியதாவது: ஊராட்சியை குப்பை இல்லாமலும், சுகாதாரமாகவும் மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். மேற்கண்ட எரிவாயு உற்பத்தி மையத்தின் அருகில், 4.60 லட்சம் ரூபாய் செலவில், ஆண்கள் கழிப்பறை ஒன்று அமைக்கப்படுகிறது. அதிலிருந்து பெறப்படும் கழிவுகளின் மூலமும் மேலும் கூடுதலாக எரிவாயு உற்பத்தி செய்து, மூன்று கிலோவாட் ஜெனரேட்டரை இயக்கி அதன் மூலம், தெரு விளக்குகளுக்கு பயன்படுத்தும் வகையில் பணிகளை மேற்கொண்டு உள்ளோம். இதேபோன்று, மேலும் இரண்டு இடங்களில், எரிவாயு உற்பத்தி செய்யவும் திட்டமிட்டு வருகிறோம். ஊராட்சியில் உள்ள அனைத்து தெரு விளக்குகளையும் மேற்கண்ட திட்டம் மூலம் எரிய வைக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lakshmanan Narayanan - Chennai,இந்தியா
09-மே-201507:23:52 IST Report Abuse
Lakshmanan Narayanan அந்த காலத்தில் திருப்பும் இடம் எல்லாம் வயல்வெளிகலாக இருந்தன. ஆனால் இப்பொழு திரும்பும் இடம் எல்லாம் கழிப்பறைகள் ... அந்த காலத்தில் அழுகிய பொருட்களை உரமாக பயன்படுத்தி மரம் செடி கொடிகளை வளர்த்தனர். ஆனால் இன்று ? உங்களுக்கு எது தேவை அதிகமோ அதை நீங்கள் உற்பத்தி பண்ணுகிறீர்கள் ( மின்சாரத்தை தான் சொல்கிறேன் ) தயவு செய்து உங்கள் கவனத்தை விவசாயம் பக்கம் திருப்புங்கள். வீணாகும் அந்த கழிவுகளை உரமாக மாற்ற முயற்சி செய்யுங்கள். நீங்க உபயோக படுத்தும் மின்சாரத்தின் அளவை கம்மி பண்ணுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X