திண்டுக்கல் : திண்டுக்கல்லில் எஸ்.ஐ., வீட்டு திருமணத்தில் 60 பவுன் நகை திருட்டு போனதால், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,ராஜூ. இவரது மகன் கார்த்திக்கிற்கும்(22), இடையகோட்டை நாரப்பநாயக்கன் பட்டியை சேர்ந்த லட்சுமி(எ) லாவண்யாவிற்கும்(20) நேற்று திண்டுக்கல் -தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது. மணமேடையில் மணப்பெண்ணிற்கு சில சடங்குகள் நடந்தபோது, மணப்பெண் அறையில் இருந்த சூட்கேசை திறந்து 60 பவுன் நகையை யாரோ திருடி சென்றுள்ளனர். இதையறிந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த பிரச்னைகிடையே திருமணம் நடந்து முடிந்தது. இது குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இன்ஸ்பெக்டர் பொன்னி வளவன் கூறியதாவது: நகைகளை அணியாமல் மணப்பெண்ணை மேடையில் அமர்த்தி சடங்குகள் செய்ததாக கூறப்படுகிறது. முதலில் 60 பவுன் என்றனர்; தற்போது 16 பவுன் தான் காணவில்லை, என்கிறனர். இது குறித்து வழக்குபதிவு செய்யப்படும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE