டீ கடை விஜயனின் அமெரிக்க அனுபவங்கள்...

Updated : மே 15, 2015 | Added : மே 13, 2015 | கருத்துகள் (3)
Advertisement
டீகடை விஜயனின் அமெரிக்கபயண அனுபவங்கள்...டீகடை விஜயன் யார் என்பதை முதலில் சொல்லிவிட்டு பிறகு அவரது அமெரிக்க பயணத்தை பற்றி பிறகு சொல்கிறேன் தற்போது 64 வயதாகும் விஜயன் கேரளா மாநிலம் கொச்சியில் கடலங்கரா என்ற இடத்தில் ஸ்ரீபாலஜி காபி ஹவுஸ் என்ற பெயரில் சிறிய அளவில் டீகடை நடத்திவருகிறார்.காலை மாலையில் இட்லி தோசை பூரி உப்புமா போன்ற பலகாரங்களும் நாள் முழுவதும் டீயும்
டீ கடை விஜயனின் அமெரிக்க அனுபவங்கள்...


டீகடை விஜயனின் அமெரிக்கபயண அனுபவங்கள்...

டீகடை விஜயன் யார் என்பதை முதலில் சொல்லிவிட்டு பிறகு அவரது அமெரிக்க பயணத்தை பற்றி பிறகு சொல்கிறேன்

தற்போது 64 வயதாகும் விஜயன் கேரளா மாநிலம் கொச்சியில் கடலங்கரா என்ற இடத்தில் ஸ்ரீபாலஜி காபி ஹவுஸ் என்ற பெயரில் சிறிய அளவில் டீகடை நடத்திவருகிறார்.காலை மாலையில் இட்லி தோசை பூரி உப்புமா போன்ற பலகாரங்களும் நாள் முழுவதும் டீயும் விற்றுவருகிறார்,இவருக்கு உதவியாக இருப்பவர் இவரது 63 வயதான மணைவி மோகனாதான்.இருவரும் பள்ளி படிப்பைக்கூட தாண்டாதவர்கள். இரண்டு பெண் குழந்தைகள் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள்.

அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து இரவு ஒன்பது மணிவரை தம்பதிகள் கடுமையாக உழைப்பார்கள் மகள்கள் திருமணத்திற்கு உழைத்து உழைத்து களைத்துப்போன தம்பதிகளுக்கு வயதான காலத்தில் எங்காவது வெளியூர் போய் கொஞ்ச நாளைக்கு மகிழ்ச்சியாக இருந்துவிட்டு வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

இதில் விஜயனுக்கு ஊர் சுற்றுவதில் நிறைய ஆர்வம் உண்டு ஆனால் பொருளாதாரம் காரணமாக அந்த ஆர்வத்திற்கு அணைபோட்டு வைத்திருந்தார்.மகள்கள் திருமணத்திற்கு பிறகு சிறிது சிறிதாக சேர்த்துவைத்திருந்த பணத்தை மணைவி மோகணா கொடுக்க உள்ளூர் டிராவல்ஸ் மற்றும் பாங்க் கடன் உதவியுடன் 2007-ம் ஆண்டு எகிப்து இஸ்ரேல் ஜோர்டன் பாலஸ்தீன் துபாய் உள்ளீட்ட நாடுகளுக்கு 18 நாள் பயணம் சென்று வந்தனர்.

பாங்க் கடனை சிறுக சிறுக அடைத்து முடித்த போது அடுத்த எந்த நாட்டிற்கு போகிறீர்கள் எவ்வளவு பணம் வேண்டும் என்று பாங்க் கேட்கவே அடுத்து சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்கு பயணம் சென்று வந்தனர்.

இப்படியே இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வெளிநாட்டு பயணம் என்ற அளவில் லண்டன்,ஜெர்மன்,ரோம் உள்ளீட்ட பல நாடுகளுக்கு போய்விட்டு வந்துவிட்டனர்.

வெளிநாடு போகும் போது இவரது கடையை மூடிவிடுவார் திரும்பிவந்து கடையை திறந்ததும் பழையபடி இவரது வாடிக்கையாளர்கள் இவரை தேடிவந்துவிடுவர் காரணம் குறைந்த விலையில் தரமான உணவு பொருள் கொடுப்பதால்.விஜயன் அடிக்கடி சொல்வதே என் கடைக்கு வந்து சாப்பிடுபவர்களுக்கு வயிறு மட்டுமல்ல மனசும் நிறைஞ்சு இருக்கும் என்பதே.

இப்படி வெளிநாட்டு பயணத்திற்கு செலவு செய்வதை நிலத்தில் நகையில் முதலீடு செய்தால் எதிர்காலம் நன்றாக இருக்குமே என்று சொல்பவர்களை பார்த்து இவர் நிகழ்காலத்தில் வாழ்க்கையை அனுபவிக்க பாருங்கள் எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தை விட்டுவிடாதீர்கள் என்பதே.இங்கெல்லாம் போகமுடியுமா? என்று யோசித்தால் எதுவும் நடக்காது முடியும் என்று முயற்சித்தால் எதுவும் முடியும் ஒரு டீ கடைகாரனால் இவ்வளவு முடியும்போது மற்றவர்களால் எவ்வளவோ முடியும்தானே.

இப்படியே பல நாடுகளுக்கு போய்வந்த விஜயன் தம்பதியினர் நீண்ட கால கனவான அமெரிக்காவிற்கும் போய்விட்டு வந்துவிட்டனர்.இவர்கள் சமீபத்தில் சென்னை வந்தபோது அவர்களை வைத்து இன்விசிபிள் விங்ஸ் என்ற குறும்படத்தை எடுத்துள்ள ஹரி என்பவர் மூலம் சந்திக்க முடிந்தது.

மிகவும் உற்சாகமாக தனது அமெரிக்க பயணத்தைபற்றி சொன்னவர் நாயகரா,ஹாலிவுட்,டைம்ஸ்கொயர்,வெள்ளை மாளிகை,சுதந்திராதேவி சிலை போன்ற இடங்கள் தந்த சந்தோஷத்தை பிரமிப்புடன் விவரித்தார்.

மலையாளம் மட்டுமே பேச படிக்க தெரியும், தமிழ் பேசினால் புரியும் ஸ்மார்ட் போன் கிடையாது இண்டர்நெட் மெயில் பற்றி தெரியாது ஆனால் சந்தோஷமாக இருக்க தெரியும் எனக்கு இல்லையில்லை எங்களுக்கு என்று மணைவியின் தோள்தொட்டு சொல்கிறார், வெட்கமும் சந்தோஷமும் மோகனாவிஜயனின் முகத்தில் பொங்குகிறது...

-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnamoorthy - chennai,இந்தியா
26-மே-201512:21:02 IST Report Abuse
krishnamoorthy அவர்கள் சொல்லாமல் விட்டது ஒன்று. அதாவது அவர்களது குழந்தைகள் திருமணத்தை நடத்தியபின்பே இந்த வெளிநாட்டு பயணங்களை தொடங்கினர். ஆக கடமையை செய்துவிட்டு தனக்கென வாழ்வது நிச்சயம் சரியான செயலே. வாழ்க இவர்களது வாழ்கை, மேலும் பல பயணங்கள் தொடரட்டும். அதிலும் உலகின் பலநாடுகளை விஞ்சும் நமது பாரதநாட்டை முழுதும் சுற்றிபார்க்கட்டும்.
Rate this:
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
17-மே-201514:39:56 IST Report Abuse
Krish Sami சபாஷ்
Rate this:
Cancel
Raja Subramanian - chennai,இந்தியா
17-மே-201514:11:05 IST Report Abuse
Raja Subramanian படிக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது..விஜயன் தம்பதிகள் வாழிய பல்லாண்டு இன்னும் இவர்களது வாழ்க்கை பயணம் மென்மேலும் மகிழ்ச்சியாக தொடரட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X