பொது செய்தி

இந்தியா

'தினமலர்' ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்திக்கு 'தொல்காப்பியர் விருது':ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு

Updated : மே 15, 2015 | Added : மே 14, 2015 | கருத்துகள் (25)
Advertisement
'தினமலர்' ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்திக்கு 'தொல்காப்பியர் விருது':ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு

புதுடில்லி: தமிழுக்கும் நாணவியல் துறைக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில்,2013ம் ஆண்டிற்கான தொல்காப்பியர் விருது, 'தினமலர்' ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது. விருதை, ஜனாதிபதி மாளிகையில், இன்று ஜனாதிபதி வழங்கினார்.
நாணயவியலில் தமிழ்த்தடம் பதித்த 'தினமலர்' டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி:1.பண்டைத் தமிழ் அரசர்கள் நாணயம் வெளியிட்ட உண்மை: பண்டைய தமிழ் வேந்தர்களான சேர, சோழ, பாண்டியருக்கு, நாணயம் வெளியிடும் பழக்கம் இல்லை என்பதே, வரலாற்று ஆசிரியர்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது. இக்கருத்து தவறானது என்றும், அவர்கள் நாணயம் வெளியிட்டனர் என்றும், அறிவியல் அடிப்படையிலான நாணயக் கண்டுபிடிப்புகள் மூலமும், அவற்றின் மேல் பொறித்திருந்த எழுத்துகளின் மூலமும், உருவங்களின் மூலமும், அவை கிடைத்த இடங்களின் வரலாற்றுப் பின்னணி மூலமும் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி உறுதிப்படுத்தினார்.
2. பெரியார் சீர்திருத்த எழுத்துகளைப் பரவலாக்கியவர்: பெரியார் அறிமுகப்படுத்திய எழுத்து சீர்திருத்தத்திற்கு பெரும் எதிர்ப்பு நிலவியிருந்தது. முறையான காரணங்களின் அடிப்படையில், பெரியார் எழுத்து முறையை, 'தினமலர்' நாளிதழில் அறிமுகப்படுத்தியவர், இரா.கிருஷ்ணமூர்த்தி. அவரைத் தொடர்ந்து எல்லா தமிழ் ஏடுகளும் இவ்வெழுத்தைப் பின்பற்றத் துவங்கின.

3. 'ஸ்ரீலிபி' கண்டுபிடித்து வடிவமைத்தவர்: கணினி என்றால், ஆங்கிலத்தில் மட்டும் தான் எழுத்து வடிவம் உண்டு என்ற விதியை தகர்த்தெறிந்து, தமிழ் தட்டச்சு வடிவமைப்பை, அப்படியே கணினிக்கு ஏற்ப உருமாற்றும் வகையில், நீண்ட ஆராய்ச்சி செய்து, 'ஸ்ரீலிபி' என்ற தமிழ் கணினி எழுத்தை வடிவமைத்தார். இன்று அவர் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய 'ஸ்ரீலிபி' கணினி எழுத்து வடிவம், தற்போதைய அனைத்து கணினித் தமிழ் எழுத்துகளுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. வெளிநாட்டுப் பத்திரிகைகளும், 'ஸ்ரீலிபி'யை பயன்படுத்துவது தனிச்சிறப்பு.
4. சங்க இலக்கியப் பழமையை நாணய ஆய்வுவழி நிலை நாட்டியமை: 'பழைய சங்க இலக்கியங்கள், பண்டைய சேர, சோழ, பாண்டிய மலையமான் மன்னர்கள் காலத்தில் எழுதப்பட்டு, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனும் சங்க இலக்கிய தொகுதிகள் ஆகிய அனைத்தும் மிகப் பிற்காலத்தவை. இவை கி.மு., நூற்றாண்டுகளைச் சார்ந்தவை அல்ல' என, தமிழ் விரும்பிகள் சிலர் கூறினர்.இக்கருத்து தவறு என்பதை, புகழூர், மாங்குளம் ஆகிய இடங்களில் கண்டறியப்பட்ட தமிழ் பிராமிக் கல்வெட்டு எழுத்துகளையும், சங்ககால நாணயங்களில் காணப்படும் எழுத்துகளையும் சங்க இலக்கியங்களாக கி.மு., 3ம் நூற்றாண்டுக்கு எடுத்துச் சென்றார்.
5. யவனருடன் வணிகம் உறுதிப்பட்டமை: சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரம் போன்ற சங்கம் மருவிய கால இலக்கியங்களிலும், யவனர் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றிருந்தன. பூம்புகார் முதலான தமிழக துறைமுகப் பட்டினங்களின் வழியாக, தமிழகத்தில் இருந்து சில பொருட்கள் ஏற்றுமதி ஆனதும், அரிக்கமேடு முதலான இடங்களுக்கு சில பொருட்கள் இறக்குமதி ஆனதும் குறிப்பிடப்பட்டு உள்ளன. கிரேக்கம், ரோமாபுரி முதலான இடங்களில் இருந்து வணிகர்கள், தமிழக வணிகத்தலங்களில் தங்கி வணிகம் செய்தனர். இக்குறிப்பு பிöய்னீ முதலான கிரேக்கப் பயணிகள் எழுதிய குறிப்புகளாலும் உறுதியாயிற்று. இவ்வணிகத்தின் காரணமாக, அயல்நாட்டாரின் நாணயங்கள், குறிப்பாக ரோம நாணயங்கள், தமிழக ஊர்களில் குவியல் குவியலாகக் கிடைத்தன. தம் நாணயவியல் ஆராய்ச்சி மூலம், பழந்தமிழரின் வாணிபத்தை உறுதிப்படுத்தினார்.
6.வட்டெழுத்து ஆராய்ச்சி: தமிழகத்திலும், கேரளாவிலும் வழங்கிய வட்டெழுத்தை இவர் ஆராய்ந்தமையால், கேரளா ஒரு காலத்தில் தமிழ்நாடாகவே விளங்கியது என்பது உறுதியாயிற்று.
7. இரா.கிருஷ்ணமூர்த்தியின் சிறப்புப் பண்பு நலன்கள்: அவரிடம் உள்ள பொழுதுபோக்கு, படிப்பது, நாணயங்களை ஆராய்வது தான். நாணயவியல் ஆராய்ச்சிக்கு, மிகுந்த பொறுமை வேண்டும். எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும் என்று புறந்தள்ளுபவர் அல்லர் இரா.கிருஷ்ணமூர்த்தி. அவர் ஒரு துல்லியவாதி (Perfectionist). ஒவ்வொன்றும் சரியாக இருக்க வேண்டும்; மேற்கொண்டு விளக்கமும், விரிவும் தேடக்கூடிய ஒரு கருத்தையோ, முடிவையோ சொல்லிவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கை உடையவர். இரா.கிருஷ்ணமூர்த்தியிடம் உள்ள இத்தகு பண்புகள், அவரை நாணயவியலில் சிறந்த ஆராய்ச்சியாளராக மேலெடுத்துச் சென்றன. விளைவு, அவரை உலகெங்கிலும் இருந்து, மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் பங்கேற்குமாறு அழைத்தனர். அனைத்துலக நாணயவியல் அரங்குகளில் அவர் தொடர்ந்து அழைக்கப்பட்டார். லண்டன் உலக நாணய சங்கத்தால் அழைக்கப்பட்டுக் கவுரவிக்கப்பட்டார்.
இரா.கிருஷ்ணமூர்த்தி, ஒரு புத்தகப் பிரியர். நாணயவியல், தொல்லியல், வரலாறு முதலானவை தொடர்பாக வெளிவந்திருக்கும் நூல்களை விலை கொடுத்து வாங்குவார்; விரும்பிப் படிப்பார். வெளிநாடுகள் செல்லும்போது, அங்குள்ள புத்தகக் கடைகளுக்கும், அருங்காட்சியகங்களுக்கும் சென்று மணிக்கணக்கில் செலவழிப்பது அவர்தம் வழக்கம்.
செம்மொழி தமிழுக்கான ஜனாதிபதி விருதுகளை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று வழங்குகிறார். 2011-12, 2012-13ம் ஆண்டு களுக்கான தொல்காப்பியர் விருது, செ.வை.சண்முகத்திற்கும், 'தினமலர்' ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கும் வழங்கப்பட்டது.
மேலும், 2011-12ம் ஆண்டுக்கான, குறள் பீடம் விருது - டாக்டர் ஈவா மரியா வில்டன், இளம் அறிஞர் விருது - முனைவர் கா.அய்யப்பன், முனைவர் இ.எழில் வசந்தன், முனைவர் க.ஜவகர் ஆகியோருக்கும்; 2012-13ம் ஆண்டுக்கான, இளம் அறிஞர் விருது - முனைவர் அ.சதீஷ், முனைவர் இரா.வெங்கடேசன், முனைவர் பா.ஜெய்கணேஷ், முனைவர் எம்.ஆர்.தேவகி, முனைவர் உ.அலிபாவா ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது. தொல்காப்பியர் விருதை இதற்கு முன் 2005-06ல், தொல்காப்பியம் பதிப்பித்தலுக்காக 100 வயதான பேராசிரியர் அடிகளாசிரியரும், 2009-10ல் கல்வெட்டு ஆராய்ச்சிக்காக ஐராவதம் மகாதேவனும் 2010-11ல் இலக்கியப் பணிக்காக ராம.தமிழண்ணல் பெரியகருப்பனும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kaliraja Thangamani - Chennai,இந்தியா
15-மே-201502:45:23 IST Report Abuse
Kaliraja Thangamani நிறைவான பணிகள் செய்துவரும் தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு, பாரதம் நன்றி சொல்கிறது.வரவேற்போம் வாழ்த்துக்கள். .
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
14-மே-201516:36:09 IST Report Abuse
g.s,rajan விருது பெரும் தினமலர் ஆசிரியர் மற்றும் மற்ற அனைத்து நெஞ்சங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel
S. NATARAJAN - delhi,இந்தியா
14-மே-201516:06:11 IST Report Abuse
S. NATARAJAN ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள். மிக திறைமையான மனிதருக்கு தகுதியான விருது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X