ஜெய்சால்மா: அணு குண்டு சோதனை நடத்தப்பட்ட போக்ரான் பகுதி உள் கட்டமைப்பு வசதிக்காக தவித்துக்கொண்டு உள்ளது. இது குறித்து கெதோலாய் கிராமத்தை சேர்ந்த ஹர்முக் ராம் விஷ்னோய் கூறியதாவது: கடந்த 1988-ல் மே மாதம் 11 மற்றும் 13-ம் தேதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள போக்ரான் கிராமத்தில் அணு குண்டு சோதனை நடத்தப்பட்டது. உலக வரை படத்தில் எங்கள் பகுதி அடையாளம் காணப்பட்ட போதிலும் இது நாள் வரையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் கிடைக்கவில்லை. போக்ரான் பகுதியில் 1988-ம் ஆண்டு மே மாதம் 5 முறை சோதனை நடத்தப்பட்டது. அதற்கு முன்னர் 1974-ம் ஆண்டிலும் அணு குண்டு சோதனை நடத்தப்பட்டது குறி்ப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE