ரெண்டு லட்ச ரூபா கடிகாரம் பாத்திர கணக்குக்கு பரிகாரம்!| Dinamalar

ரெண்டு லட்ச ரூபா கடிகாரம் பாத்திர கணக்குக்கு பரிகாரம்!

Added : மே 17, 2015
Share
'மம்மி...டாடி! பிச்சை போடுங்க' என்று கவுண்டமணி பேசும் 'டயலாக்'கை, 'கோட் சூட்' போட்ட ஒருவர் 'மைக்'கில் பேசுவதைப் போல், 'டப்ஸ் மேஸ்' செய்து, சித்ராவிடம் காண்பித்தாள் மித்ரா.பாரதி பூங்காவில், மாலைப்பொழுதில் அதைப் பார்த்தபடி, இருவரும் சத்தமாய்ச் சிரிக்க, 'வாக்கிங்' வந்தவர்கள், விநோதமாகப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றார்கள்.''மித்து! மருதமலை அடிவாரத்துல
ரெண்டு லட்ச ரூபா கடிகாரம் பாத்திர கணக்குக்கு பரிகாரம்!

'மம்மி...டாடி! பிச்சை போடுங்க' என்று கவுண்டமணி பேசும் 'டயலாக்'கை, 'கோட் சூட்' போட்ட ஒருவர் 'மைக்'கில் பேசுவதைப் போல், 'டப்ஸ் மேஸ்' செய்து, சித்ராவிடம் காண்பித்தாள் மித்ரா.பாரதி பூங்காவில், மாலைப்பொழுதில் அதைப் பார்த்தபடி, இருவரும் சத்தமாய்ச் சிரிக்க, 'வாக்கிங்' வந்தவர்கள், விநோதமாகப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றார்கள்.''மித்து! மருதமலை அடிவாரத்துல இருக்கிற மன்னருக்கு, சூப்பரா 'செட்' ஆகுதுடி இந்த டயலாக்...அடுத்த மாசம், அவரு பொண்ணுக்கு கல்யாணமாம். 93 காலேஜ்ல, ரெண்டு லட்ச ரூபா கேக்குறதா தகவல்.'' என்றாள் சித்ரா.''அக்கா! அவரைப் பத்தி, ஏகப்பட்ட நியூஸ் குவியுது. எல்லாமே மெரட்டுற மாதிரி தகவலா இருக்கு. எதை நம்புறதுன்னே தெரியலை. சீக்கிரமே 172 போஸ்ட்டிங் போடுறதுக்கு, 'அட்வர்டைஸ்மென்ட்' வரப்போகுதாம். ஒவ்வொரு 'போஸ்ட்டிங்'குக்கும் மூணுலயிருந்து 5 லட்சம்னு 'பிக்ஸ்' பண்ணிருக்காராம்.'' என்றாள் மித்ரா.''அதுக்கு 'ஸ்டே' வாங்க, ஒரு குரூப் ரெடியாகுது. ஆனா, அவரை எதிர்த்துட்டு இருந்த சங்கத்துக்காரங்களுக்கு, 70 'போஸ்ட்டிங்' தர்றதாச் சொல்லி, 'கரெக்ட்' பண்ணிட்டதா ஒரு பேச்சு. இதைத் தவிர்த்து, சர்வதேச தரத்துல நீச்சல் குளம், ரோட்டைக் கடக்கிறதுக்கு நடை மேம்பாலம், அது இதுன்னு 22 கோடி ரூபாய்க்கு, 'எஸ்டிமேசன்' போட்ருக்காரு. ஆனா, இந்த ரெண்டு திட்டத்தையும் பைனான்ஸ் கமிட்டி 'ரிஜெக்ட்' பண்ணிருச்சாம்!''''இவரை எதிர்த்து ஒண்ணும் ஆகப்போறதில்லைன்னு, ஒரு அதிகாரியே, 70 பவுன் ஒட்டியாணத்தை வாங்கிட்டு, அமைதியாயிட்டாங்களாமே!.''''அப்பிடியா...என்னால நம்ப முடியலை. நான்...வேற 'மேட்டர்' கேள்விப்பட்டேன். ஹாஸ்டல்ல முக்கியமான பொறுப்புல இருக்கிற ஒருத்தரு, அவரோட மகனுக்கு, ரெண்டே கால் லட்ச ரூபாய்க்கு வாட்ச் வாங்கிக் கொடுத்திருக்காராம். ரெண்டு கோடி ரூபாய்க்கு, பாத்திரம் வாங்குனதா, கணக்கு எழுதுனாங்களே... அதுக்காக கொடுத்த 'போனஸ்' பரிசு!'' என்றாள் சித்ரா.மொபைலை மித்ரா காண்பிக்க, மறுபடியும் 'கோட் சூட்'டுடன் அவர்...இப்போது, 'டப்ஸ் மேஸ்'ல், வடிவேலு 'டயலாக்'கைப் பேசினார்...'இன்னுமாடா இந்த ஊரு, நம்மள நம்புது!'.''அக்கா! இதே 'டயலாக்'கை, நம்ம ஊர்ல 'மாவட்டமா' இருக்கிற முத்தான உடன்பிறப்புக்கும் 'டப்' பண்ணிப் போடலாம். பொறுப்புக்கு வந்து மூணு மாசத்துல, சொந்தக்காசுல ஒரு நிகழ்ச்சி கூட அவர் நடத்தலையாம். ஸ்டாலின் வந்தப்ப, ஏர்போர்ட் ஏரியாவுல ஒரு கொடி, பேனர் கூட காணோம். இதெல்லாத்தையும் ஸ்டாலின்ட்ட நம்மூரு உடன் பிறப்புக போட்டுக் கொடுத்துட்டாங்க.'' என்றாள் மித்ரா.''மே மாசத்துல ஒவ்வொரு மாவட்டமா ஆய்வு பண்ணுவோம். சரியா செயல் படாதவங்களை, பொறுப்புல இருந்து துாக்கிருவோம்னு ஸ்டாலின் சொல்லிருக்காராம். கோயம்புத்துார்ல, இவருக்கு நிச்சயமா 'சீட்' கிழிஞ்சிரும்னு உடன்பிறப்புங்க பேசிக்கிறாங்க.'' என்றாள் சித்ரா.''ஆளும்கட்சி மே தின பேரணியைப் பார்த்தியா... மொத்தம் மூணு, நாலு கோஷ்டியா வந்தாங்க. ஆனா, பிரச்னை ஒண்ணும் ஆகலை.''''அதுல வந்த ஒரு எம்.எல்.ஏ.,வால நடக்கவே முடியலை. ரொம்பவே முடியாம இருக்கார்னு, பார்த்தாலே தெரிஞ்சது... அவரை, பழைய 'டவுன் டாடி'தான், பாசத்தோட கையைப்பிடிச்சு கூப்பிட்டுப் போயி, பாதி பேரணியிலேயே கார்ல ஏத்தி விட்டாரு.''''கார்ன்னு சொல்லவும் தான் ஞாபகம் வந்துச்சு மித்து... சிட்டிக்குள்ள ஏகப்பட்ட கார்கள்ல, 'பிரஸ் ஸ்டிக்கர்' ஒட்டிட்டு, பேய் வேகத்துல வண்டியை ஓட்றாங்க. போன வாரம், வடவள்ளியில இப்பிடித்தான் 'பிரஸ் ஸ்டிக்கர்' ஒட்டுன 'ஸ்கார்பியோ' வண்டி ஒண்ணு, ஒரு ஆளை அடிச்சுத் துாக்கிருக்கு. அவரை, அவுங்களே ஏத்திட்டுப் போயிருக்காங்க. என்ன ஆச்சுன்னே தெரியலை.''''சுங்கம் பக்கத்துலயும், இதே மாதிரி, பிஎம்டபிள்யு கார் ஒண்ணு, மூணு பேரை இடிச்சிட்டுப் போயிருக்கு. ஒரு ஆளுக்கு ரொம்பவே அடியாம். ஆனா, யாரையுமே ஜி.எச்.,க்குக் கொண்டு வரலை. அந்த வண்டில, இங்கிலீஷ் பேப்பரோட பேரு இருந்துச்சாம். அடிபட்டவுங்க என்ன ஆனாங்கன்னு ஒரு தகவலும் இல்லை.''''இந்த மாதிரி 'ஆக்சிடென்ட்' ஆகி, ஜி.எச்.,க்கு வர்றவுங்களைக் கடத்துறதுக்குன்னே, பல கும்பல், ஜி.எச்.க்குள்ள அலையுது. எல்லாமே, எலும்பு ஆஸ்பத்திரிகளோட ஏஜென்ட்ங்க.'' என்றாள் மித்ரா.''நுாத்தி எட்டுல வர்றவுங்களை, எப்பிடி இவுங்க கடத்துறாங்க?'' ஆச்சரியமாய்க் கேட்டாள் சித்ரா.''ஜி.எச்.,ல இருக்கிற பல பேரும் இந்த கூட்டணியில இருக்காங்க. யாரு பேஷன்டைப் பிடிச்சு அனுப்புறாங்களோ, அவுங்களுக்கு, அந்த 'பேஷன்ட்'கிட்ட கறக்குற 'அமவுன்ட்'ல, 20 பர்சன்டேஜ் கொடுக்குறாங்களாம். போன வாரம், தாராபுரம் பக்கத்தால நடந்த ஒரு ஆக்சிடென்ட்ல, ஜி.எச்.,க்கு வந்த ஒரு பேஷன்டை, அங்க இங்கன்னு ரெண்டு ஆஸ்பத்திரிக்காரங்க இழுத்தடிச்சதுல, அந்த ஆளு போயே சேந்துட்டாராம்.''''அடப்பாவமே! இப்பிடியெல்லாம் சம்பாதிச்சு, என்ன தான் சாதிக்கப்போறாங்க?''''தப்பான வழியில சம்பாதிக்கிறவுங்களுக்கு, இதெல்லாம் காமெடி 'டயலாக்'...!'' என்றாள் மித்ரா.''உண்மை தான் மித்து! பத்திரம் பதியுற ஆபீஸ்ல, வசூல்ல கொடி கட்டிப் பறக்குற ஒரு லேடி ஆபீசர் பத்திப் பேசுனோமே...அவுங்க, கவலையேபடாம, இன்னமும் வசூல் தட்டி எடுக்குறாங்களாம்.'' என்றாள் சித்ரா.''ஆனா, நான் கேள்விப்பட்ட வரைக்கும், பீளமேட்டுல இருக்கிற லேடி ஆபீசர் தான், வசூல்ல 'ராஜ'யோகத்தோட முதல்ல இருக்காங்களாமே!'' என்றாள் மித்ரா.''ரெண்டு பேருக்குமே, கோயம்புத்துார்ல இருக்கிற பெரிய ஆபீசர் தான், 'ஃபுல் சப்போர்ட்'டாம்....!''''கரெக்டா 'கப்பம்' கட்றாங்க போலயிருக்கு...இல்லேன்னா, முக்கியமான இடங்கள்ல இத்தனை நாள் வண்டி ஓட்ட முடியுமா?'' என்றாள் சித்ரா.''நம்மூர்ல தொழிலை மேம்படுத்த ஒரு மையம் வச்சிருக்காங்களே. பழைய வில்லன் பேருல அங்க ஒரு ஆபீசர் இருக்காரு. அவரும் இப்பிடித்தான். லோனுக்கு கவர்மென்ட் கொடுக்குற மானியத்துல, அஞ்சு 'பர்சன்டேஜ்' வாங்கிக்குவாரு. வாங்குறதுல, பல பேருக்கு 'பங்கு' கொடுக்கிறதால, அவரோட வண்டியும் ரொம்ப நாளா இங்க ஓடுது!'' என்றாள் மித்ரா.''இவுங்க யாரு மேல கை வச்சாலும், யாராவது ஒரு ஆளும்கட்சி வி.ஐ.பி., பின்னால இருப்பாங்க. விஜிலென்ஸ்காரங்க இப்போதைக்கு வேடிக்கை பார்க்க வேண்டியது தான்!,''''அவுங்க மட்டுமா...எல்.பி.ஏ.,காரங்களும் தான் வேடிக்கை பாக்குறாங்க. ஸ்கூலு, காலேஜ்க்கு எல்லாம் நோட்டீஸ் கொடுக்குறாங்க...ஆனா, ரயில்வே ஸ்டேஷன் எதிர்த்த சந்துல, எந்த பர்மிஷனுமே வாங்காம, விதிகளை மீறி, ஓட்டல்கள்ல தாறுமாறா பில்டிங்' கட்றாங்க. ஒரு கட்டடத்துக்கு கூட, நோட்டீஸ் தரலை'' என்றாள் மித்ரா.''அதை விதிமீறலின் வீதின்னே சொல்லலாம்... அங்க ராவெல்லாம் சரக்கு, சாப்பாடு எல்லாமே கிடைக்கும். போலீஸ், கார்ப்பரேஷன், எல்.பி.ஏ., யாருமே கண்டுக்க மாட்டாங்க.'' என்றாள் சித்ரா.''எல்.பி.ஏ.,வுல ஏக ரகளை நடக்குதுக்கா....ரெண்டு தடவை மீட்டிங் தள்ளிப் போனது ஏன் தெரியுமா? அதுல புதுசா மெம்பராயிருக்கிற ஒரு வி.ஐ.பி., 'எல்லா பில்டிங்லயும் நீங்களே காசு வாங்கிக்கிட்டா எப்பிடி. எனக்கும் இனிமே 'பங்கு' வரணும்னு போர்க்கொடி துாக்கிட்டாராம். இல்லேன்னா, மீட்டிங் வர மாட்டேங்கிறாராம். அங்க ஏதோ ஒரு 'டிராமா' நடக்குது!'' என்றாள் மித்ரா.''சிட்டிக்குள்ள சீக்கிரமே, ஒரு பெரிய 'டிராமா' நடக்கப்போகுது மித்து! மீட்டர் போடாத ஆட்டோக்கள் மேல கடுமையா நடவடிக்கை எடுக்கணும்னு, போலீஸ் முடிவு பண்ணிருச்சு. அதை முறியடிக்கிறதுக்கு, ஒரு போராட்டம் நடத்தி, அதுல பெரிய அளவுல ஒரு 'டிராமா' பண்றதுக்கு 'ப்ளான்' நடக்குதாம்.'' என்றாள் சித்ரா.''ஓ! நீரஜ் மித்தல் கலெக்டரா இருந்தப்போ, தீக்குளிப்பு நடந்துச்சே...அது மாதிரியா?,'' என்றாள் மித்ரா.''வேற மாதிரி சொல்றாங்க...மித்து! நம்மூரு தாசில்தார்ங்க மூணு பேரு, இண்டஸ்ட்ரிகாரங்க கிட்ட வட்டிக்கு விடுற விஷயும் தெரியுமா...?'' என்று சித்ரா சொல்லும்போதே, 'சடசட'வென்று மழையடிக்கத் துவங்க, பூங்கா இருக்கையைக் காலி செய்து விட்டு, இருவரும் வேகமாக வெளியே ஓடினர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X