"டார்ச்சர்' தாங்காமல் அதிகாரி ஓட்டம்!

Added : மே 17, 2015 | |
Advertisement
""ஆள் பிடிக்கறதுல, நாங்களும் சளைச்சவங்க இல்லைனு காட்டிட்டாங்க,'' என, விவாதத்தை துவக்கினாள் சித்ரா.""என்னக்கா சொல்றீங்க, தேர்தல் நேரத்துல தானே ஆள் பிடிப்பாங்க?'' என, புரியாமல் கேட்டாள் மித்ரா.""திருப்பூர்ல, ஒவ்வொரு வருஷமும் மே 1ம் தேதி, மே தின பேரணி நடக்கும்; கம்யூ., கட்சிக்காரங்க நடத்துவாங்க. ரெண்டு வருஷமா, ஆளுங்கட்சி தொழிற்சங்கமும் களமிறங்கிடுச்சு. இந்த வருஷம்
 "டார்ச்சர்' தாங்காமல் அதிகாரி ஓட்டம்!

""ஆள் பிடிக்கறதுல, நாங்களும் சளைச்சவங்க இல்லைனு காட்டிட்டாங்க,'' என, விவாதத்தை துவக்கினாள் சித்ரா.""என்னக்கா சொல்றீங்க, தேர்தல் நேரத்துல தானே ஆள் பிடிப்பாங்க?'' என, புரியாமல் கேட்டாள் மித்ரா.""திருப்பூர்ல, ஒவ்வொரு வருஷமும் மே 1ம் தேதி, மே தின பேரணி நடக்கும்; கம்யூ., கட்சிக்காரங்க நடத்துவாங்க. ரெண்டு வருஷமா, ஆளுங்கட்சி தொழிற்சங்கமும் களமிறங்கிடுச்சு. இந்த வருஷம் அமைதியா இருந்தா, சட்டசபை எலக்ஷன்ல மண்ணை கவ்விடுவோம்னு, கம்யூ., கட்சிக்காரங்க உஷாராகிட்டாங்க.""சி.ஐ.டி.யு.,வை சேர்ந்தவங்க, வார்டு வாரியா குழு அமைச்சு, தொழிலாளர்களை அழைச்சுட்டு வந்தாங்க. ஏ.ஐ.டி.யு.சி.,யை சேர்ந்தவங்க, சீருடை மாதிரி, பெண்களுக்கு சேலை வாங்கி கொடுத்து, கூட்டம் சேர்த்துட்டாங்க. சீருடை, தொப்பி சகிதமா பேரணி நடத்தி, ஆளும்கட்சியை அசர வச்சிட்டாங்க,'' என்றாள் சித்ரா.""ஆளுங்கட்சி பேரணியிலும், கூட்டம் அதிகமா இருந்துச்சுன்னு சொன்னாங்களே,'' என, மித்ரா கேட்க, ""அவுங்களுக்கு என்ன? வழக்கம்போல, அரசாங்க பஸ்சை ரூட்டை மாத்திவிட்டு, ஆட்களை அள்ளிட்டு வந்துட்டாங்க,'' என்றாள் சித்ரா.""தி.மு.க., கூட்டத்துல, "மாஜி'யை பேச விடாம, உடன்பிறப்புகள் கடுப்பேத்திட்டாங்களாமே,'' என, மித்ரா அடுத்த மேட்டருக்கு தாவினாள்.""ஆமாப்பா, "மாஜி' எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, அப்பத்தான் பேச ஆரம்பிச்சார். அந்த நேரத்துல, "2ஜி' ராஜா வந்துட்டார். ஆர்வக்கோளாறுல, அவருடன் ஏகப்பட்ட உடன்பிறப்புகள் மேடை ஏறிட்டாங்க. கும்பலா நின்னுக்கிட்டு "சலசல'ன்னு பேசிக்கிட்டிருந்தனர். டென்ஷனான "மாஜி', "என்னை கொஞ்சம் பேசுறதுக்கு விடுங்கப்பா; தொல்லை பண்றீங்களே'ன்னு கடுப்பா சொல்லிட்டு, ரெண்டே நிமிஷத்துல பேச்சை முடிச்சிட்டார்,'' என்றாள் சித்ரா.""அரசியல்வாதி, எதை வேணுமானாலும் பொறுத்துக்குவாங்க. "மைக்'கில பேசும்போது மட்டும் தொல்லை பண்ணுனா, அவங்களால பொறுத்துக்கவே முடியாது,'' என, சிரித்தபடி கூறிய மித்ரா, ""உள்ளூர் திட்டக்குழும அதிகாரிக்கு, "சிட்டி மம்மி' தரப்பில் "டார்ச்சர்' கொடுக்கிறாங் களாமே,'' என, கேள்வி எழுப்பினாள்.""அதுவா, யூனியன் மில் ரோட்டுல, தியேட்டர் பக்கத்துல ஒரு இடம் இருக்கு; நில உரிமையாளர் யாருன்னே தெரியாத அந்த இடத்துல, பல மாடி கட்டடம் கட்ட அனுமதி கொடுக்கணும்னு, எல்.பி.ஏ., அதிகாரிகளுக்கு "சிட்டி மம்மி' பி.ஏ., தெனமும் கூப்பிட்டு "டார்ச்சர்' கொடுக்கிறார். சமாளிக்க முடியாமல், அந்த அதிகாரி, விடுமுறையில் "எஸ்கேப்' ஆயிட்டார்,'' என்றாள் சித்ரா.""ஆளுங்கட்சிக்காரங்களுக்கு இன்னுமா புத்தி வரலை; "அக்ரி' நிலைமை, "சிட்டி மம்மி'க்கு வராம இருந்தா சரி,'' என்ற மித்ரா, ""கதர்ச்சட்டைக்காரங்க நடத்துன கூட்டத்துல, கட்சி நிர்வாகி, ஏகத்துக்கும் டென்ஷனாகிட்டாராமே,'' என்றாள்.""கூட்டம் அமைதியாதான் நடந்துச்சு; திடீருன்னு காரசாரமா மாறிடுச்சு. மாநகர் மாவட்ட பொறுப்பாளர் ஒருத்தர் எழுந்து, "உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வாங்கிய நெறைய்ய பேரு, இந்த பக்கம் திரும்பி வரலை. யாருன்னு பெயரை சொல்லி அவமானப்படுத்த விரும்பல. வாக்காளர் பட்டியலை பார்த்து, பெயரை எழுதிட்டு வர்ற, வேலைய செய்யாதீங்க; வீதி வீதியா போயி, "கேன்வாசிங்' செய்யுங்கன்னு சூடாகிட்டார். அரங்கத்துல இருந்தவங்க தலைய தொங்கப்போட்டு, குனிஞ்சிருந்தாங்க. மேடையில் இருந்தவங்க, அவரை பொறுமையா இருங்கன்னு சமாதானப்படுத்துனாங்க,'' என்றாள் சித்ரா.""அடடே, காங்கிரஸ் கட்சிக்காரங்களும், "வேகமா' செயல்படுறாங்களே,'' என, மித்ரா கேட்க, ""வேகமா செயல்படலைன்னுதான் திட்டு விழுந்திருக்கு. அடுத்த மாசம் மாநாடு நடக்கப் போகுது. மாநில நிர்வாகிகள் வரப்போறாங்க. கூட்டத்தை திரட்டுறதுக்காக, இப்பவே தயாராகிட்டு இருக்காங்க; அதுதான், விஷயம்'' என்றாள் சித்ரா..

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X