அம்மா உத்தரவு அமல்படுத்த விடாமல் ஆளும்கட்சி தொந்தரவு!| Dinamalar

'அம்மா' உத்தரவு அமல்படுத்த விடாமல் ஆளும்கட்சி தொந்தரவு!

Added : மே 17, 2015
Share
''அக்கா! டெபுடி மேயர் குத்தாட்டத்தைப் பார்த்தியா?'' ஜெ., விடுதலையையொட்டி, நடந்த கொண்டாட்டத்தைப் பற்றி, பேசிக்கொண்டே, சித்ராவும், மித்ராவும் காந்திபுரம் ஓட்டலில் அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.''கோயம்புத்துார்ல பத்தாயிரம் வாலா மட்டுமே அம்பது வெடிச்சிருப்பாங்க. புது மேயரும், பழைய மேயரும் சேர்ந்து 'ஸ்வீட்' கொடுத்து, அண்ணா சிலைக்கு மாலை போட்டாங்க. குஷியில,
 'அம்மா' உத்தரவு அமல்படுத்த விடாமல்  ஆளும்கட்சி தொந்தரவு!

''அக்கா! டெபுடி மேயர் குத்தாட்டத்தைப் பார்த்தியா?'' ஜெ., விடுதலையையொட்டி, நடந்த கொண்டாட்டத்தைப் பற்றி, பேசிக்கொண்டே, சித்ராவும், மித்ராவும் காந்திபுரம் ஓட்டலில் அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.''கோயம்புத்துார்ல பத்தாயிரம் வாலா மட்டுமே அம்பது வெடிச்சிருப்பாங்க. புது மேயரும், பழைய மேயரும் சேர்ந்து 'ஸ்வீட்' கொடுத்து, அண்ணா சிலைக்கு மாலை போட்டாங்க. குஷியில, மக்களுக்கு லட்டை ஊட்டியே விட்டாங்க. மேயரு, 'இனிமே தான், எங்களுக்கு தீபாவளி'ன்னு சொன்னாராம். எப்பிடியோ, நம்மூர்க்கு ஏதாவது நல்லது நடந்தா சரி'' என்றாள் சித்ரா.''எனக்கென்னவோ அந்த நம்பிக்கையில்லை...மக்களுக்கு நல்லது செய்யணும்னு தான், ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணத்தை நிர்ணயிச்சு, 'அம்மா' ஜிஓ போட்டாங்க. ஆனா, அதை அமல் படுத்த வேணாம்னு, அவுங்க கட்சிக்காரங்களே, போலீஸ்காரங்களுக்கு 'பிரஷர்' கொடுக்குறாங்க.'' என்றாள் மித்ரா.''எம்.எல்.ஏ.,வும், மேயரும் போலீஸ் கமிஷனரைப் பார்த்ததைப் பத்திச் சொல்றியா?,'' என்றாள் சித்ரா.''ஆமா...'இனிமே அண்ணா, எம்ஜிஆர், அம்மா படம் போட்டு, எங்க கட்சி ஆட்டோக்கள் ஓடும். அதுல மீட்டர் போடலைன்னா, எங்ககிட்ட 'கம்பிளைன்ட்' பண்ணலாம்னு அந்த எம்.எல்.ஏ., பெருசா 'டயலாக்' விட்டாரு.''''ஆனா, ஆபீசர்ட்ட பேசுனது, வேற மாதிரி கேள்விப்பட்டனே!''''கரெக்ட்! கேசு இருக்கிற வரைக்கும், ஆட்டோக்காரங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்க வேணாம்னு சொன்னாராம். ஆனா, 'சட்டப்படி நடவடிக்கை எடுங்க'ன்னு சொன்னதா, வெளியில தகவல் பரப்பி விடுறாங்க.'' என்றாள் மித்ரா.''அப்பிடின்னா, இதுவரைக்கும்...போலீஸ்காரங்க சட்டவிரோதமா நடவடிக்கை எடுத்துட்டு இருந்தாங்களா? 'அம்மா' படம் போட்ட ஆட்டோக்கள்ல, அநியாயமா கட்டணம் வாங்குனாங்களா? கோர்ட்ல கேசு இருக்குன்னா, ஏன் 'ஸ்டே' வாங்க முடியலை?'' கேள்விகளாய் அடுக்கினாள் சித்ரா.''மக்களும் இதைத்தான் கேக்குறாங்க. இவரு...யூனியன் தொழிற்சங்கப் பொறுப்புல இருக்காராம். அதனால, அவுங்களைக் காப்பாத்த வந்தாராம். அப்பிடின்னா, மக்கள் கஷ்டப்படலாமா?'' என்றாள் மித்ரா.''யூனியன்ல இருக்கிற ரெண்டாயிரம் பேரு ஓட்டுப்போட்டு தான், இவரு எம்.எல்.ஏ., ஆனாரா? ஓட்டுப் போட்ட ஜனங்க பாதிக்கப்பட்டா பரவாயில்லையா?'' மேலும் கொந்தளித்தாள் சித்ரா.''நீ ஏன் கொந்தளிக்கிற...இதுக்கெல்லாம் சேத்து வச்சு, அடுத்த வருஷம் மக்கள் வேட்டு வைப்பாங்க.'' என்றாள் மித்ரா.''கோயம்புத்துார்ல நடக்கிற பல விஷயங்களைப் பார்த்தா, கொந்தளிக்காம, கொண்டாடவா முடியும்?,'' என்றாள் சித்ரா.''ஏதோ ஒரு விஷயம், உன்னைய கடுமையா பாதிச்சிருக்கிறது மாதிரி இருக்கே...என்னக்கா மேட்டர்?,''''எனக்கொண்ணும் பாதிப்பு இல்லை. ஊருக்கு தான் கேடு...கார்ப்பரேஷன்ல, குப்பையிலேயே கோடிக்கணக்குல சம்பாதிச்ச ஒரு இன்ஜினியரு இருக்காரு தெரியுமா?''''ஓ...'தீயா வேலை செய்யணும் குமாரு'ங்கிறதை, சரியாப் புரிஞ்சுக்கிட்டு, குப்பைக்கு தீ வச்சே, கணக்கு எழுதுவாரே...அவர் தான?''''அவரே தான். ஏற்கனவே, குப்பையில ஊழல் பண்ணி, 3 லாரிகளை கண்ணுல காட்டாம மறைச்சு, 'சஸ்பெண்ட்' ஆகி, மறுபடியும் வேலையில சேர்ந்தாரே. இப்போ, அவரையே மறுபடியும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கு பொறுப்பாப் போட்ருக்காங்க. இதுக்காக, 25 லட்சம் கொடுத்திருக்காராம். இதை வாங்கிக் கொடுத்தது, யாருன்னா, 'சஸ்பெண்ட்' ஆகி, மறுபடியும் வந்த இன்னொரு இன்ஜினியர்!'' என்றாள் சித்ரா.''ஜாதி ஆளா இருக்கணும். இல்லேன்னா, சம்பாதிச்சுக் கொடுக்கிற ஆளா இருக்கணும். இல்லேன்னா, கோயம்புத்துார் கார்ப்பரேஷன்ல குப்பை கொட்ட முடியாது போலிருக்கே.'' என்றாள் மித்ரா.''எக்ஸாட்லி மித்து! அடுத்த மாசம் ரிட்டயர்டு ஆகப்போற 'உயர்ந்த மனிதன்' இன்ஜினியரும், 'சஸ்பெண்ட்'ல இருந்து மீண்டு வந்துட்டாரே...தெரியுமா?'' என்றாள் சித்ரா.''ஆமா...கேள்விப்பட்டேன். ஒழுங்கா 'ரிட்டயர்டு' ஆவுறதுக்கு, அவர்ட்ட ரெண்டு 'சி' கேட்டு, பேரம் நடந்துட்டு இருந்துச்சு. கடைசியா, எவ்வளவு தான் கொடுத்தாராம்?'' என்றாள் மித்ரா.''கொடுத்தது 'சி'யா....'எல்'லான்னு எனக்கும் தெரியலைடி...தெரிஞ்சா சொல்றேன்.'' என்றாள் சித்ரா.''அக்கா! பிடபிள்யுடி காண்ட்ராக்டர்க மாதிரி, நம்ம கார்ப்பரேஷன்ல இருக்கிற பிளம்பர்க எல்லாம் போராட்டம் நடத்தத் தயாராகுறாங்க'' என்றாள் மித்ரா.''ஏன்...அவுங்களுக்கென்ன, நல்லாத்தான சம்பாதிக்கிறாங்க?'' என்று ஆவேசப்பட்டாள் சித்ரா.''நல்லாத்தான் சம்பாதிச்சிட்டு இருந்தாங்க. இப்போ, அவுங்க சம்பாத்தியத்துக்கே, குழி பறிச்சிட்டாங்க. குடிதண்ணி கனெக்ஷனுக்கு, 'ஆட்டோ டிசிஆர்'ல 'அப்ளை' பண்ணுனா, எந்த பிளம்பரை 'அலாட்' பண்ணிருக்குன்னு தகவல் வருது. ஆனா, அந்த பிளம்பர் போறதுக்கு முன்னாடியே, அங்க கனெக்ஷன் கொடுத்திருக்கு.'' என்றாள் மித்ரா.''என்னடி இது...காஞ்சனா 3 மாதிரி இருக்கு. இவுங்களுக்குத் தெரியாம, யாரு கனெக்ஷன் கொடுக்குறது?'' என்றாள் சித்ரா.''அதுக்குன்னு 15 பேர் கொண்ட குழு இருக்காங்க'' என்று 'நாடோடிகள்' பட 'டயலாக்'கைச் சொல்லிச் சிரித்த மித்ரா, ''அது, ஆளும்கட்சிக்காரங்க வச்சிருக்கிற 'பிளம்பர் டீம்'னு சொல்றாங்க. எதிர்க்கட்சி கவுன்சிலர் வார்டுகள்ல தான், இந்த வேலை அதிகமா நடக்குது. உண்மையா 'அலாட்' பண்ணுன பிளம்பர்க்கு, ஒரு கையெழுத்துப் போட, வெறும் ஆயிரம் ரூபா மட்டும் தர்றாங்களாம். கேள்வி கேட்டா, அதுவும் கிடையாதாம்.'' என்றாள் மித்ரா.''என்ன நடக்குதுன்னே புரியலை. எலக்ஷன் சீக்கிரமே வந்துரும்னு, கொஞ்சம் ஓவர் ஸ்பீடாத்தான் போறாங்க.'' என்றாள் சித்ரா.''நீ ஸ்பீடுன்னதும் தான், பஸ் ஞாபகம் வந்துச்சு. கோயம்புத்துார்ல இருந்து மேட்டுப்பாளையத்துக்கு, ஒரு பூவோட பேருல 3 பஸ்சுங்க ஓடுது. அந்த பஸ்சுங்க போற வேகம், அந்த வண்டிகள்ல பயன் படுத்துற ஏர் ஹாரனைப் பாத்து, ரெண்டு பக்கமும் இருக்கிற பல லட்சம் மக்கள் கொதிக்கிறாங்க. அந்த 3 பஸ்களும், 'பெர்மிட்'டே இல்லாம, அப்பப்போ கோத்தகிரி, குன்னுார்னு 'சண்டிங்' அடிக்குதாம்.'' என்றாள் மித்ரா.''இவ்ளோ திமிரா வண்டி ஓட்றாங்கன்னா, யாரோ பெரிய ஆளோட வண்டிகளாத்தான் இருக்கும்'' என்றாள் சித்ரா.''அதே தான்...எல்லாமே கரூர்க்காரரோட பஸ்களாம்!'' என்றாள் மித்ரா.''மித்து! ஏற்கனவே, அவருக்கு சிங்காநல்லுார்ல இருந்து திருச்சி, மதுரைக்கு ஏகப்பட்ட 'ஆம்னி' பஸ்கள், எந்த 'பர்மிட்'டும் இல்லாம ஓடிட்டு இருக்கு. திருச்சிக்கு மட்டுமே, 16 பஸ் ஓடுதாம். கவர்மென்ட் பஸ் டிக்கெட்டை விட, 25 ரூபா தான் அதிகம். அதனால, மக்களே அதுல தான போக ஆசைப்படுறாங்க. திருச்சிக்குப் போற, பெரும்பாலான அரசு பஸ்சுங்க காலியாத்தான் போகுது'' என்றாள் சித்ரா.''டாஸ்மாக் 'பார்'ல இருந்து, பஸ் வரைக்கும், கவர்மென்ட்டுக்குப் போக வேண்டிய காசெல்லாம், கரைவேட்டிங்களுக்குப் போனா, ஸ்டேட் எப்பிடிக்கா உருப்படும்?''''இருக்கிற வரைக்கும் சம்பாதிக்கணும்...அப்புறமா, சம்பாதிச்சதை வச்சு தொழில் பண்ணணும். இது தான், இப்போ அரசியல் தாரக மந்திரம்.''''இல்லேன்னா, எந்தப் பதவியிலயும் இல்லாம, 114 கோடி ரூபாய்க்கு, ஒரு ஹாஸ்பிடலை வாங்க முடியுமா?,'' என்றாள் மித்ரா.''ஏய்! என்னடி, ஏதோ பெருசா குண்டைத் துாக்கிப் போடுற?'' என்றாள் சித்ரா.''ஆமாக்கா! நம்ம ஊருல பதவியெல்லாம் பறி கொடுத்தவரு, தன்னோட டாக்டர் மகனுக்காக, அதிசயமாப் பூக்குற பூ பேருல இருக்கிற ஹாஸ்பிடலைத் தான் இந்த 'ரேட்' கொடுத்து வாங்கிருக்காரு. அதை இன்னமும் பல கோடியில, 'டெவலப்' பண்ணப் போறாராம்.'' என்றாள் மித்ரா.''எல்லாம் தெரிஞ்சு என்ன பிரயோஜனம்? எதிர்க்கட்சி எதுவும் தேறப்போறதில்லை. தன்னை எதிர்த்து, 'மாவட்டத்துக்கு' போட்டி போட்டதால, லேடி கவுன்சிலர் ஏற்பாட்டுல, திமுக மகளிரணி நடத்துன ரத்ததான முகாமுக்கு, 'வீரமான' மாவட்டம் போகவே இல்லியாம். ரத்தம் கொடுக்கிறதுக்குப் படுத்துட்டு இருந்த ஒருத்தரையும் மெரட்டி, வெளிய வர வச்சிட்டாராம்.'' என்றாள் சித்ரா.''மாவட்ட செயற்குழு கூட்டத்துல, இந்த விஷயத்தை லேடி கவுன்சிலர் பேசுனாங்களாமே.'' என்றாள் மித்ரா.''அதை மட்டுமில்லை. எலக்ஷன் செலவு, கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு வசூலாப் பண்றீங்க. எங்களுக்கு எதுவும் செய்யுறதில்லை. வாக்காளர் பேரு சேர்க்கிற வேலைக்கு வந்த ஏடிஎம்கேகாரங்களுக்கு பிரியாணி கொடுக்குறாங்க. எங்களுக்கு வரக்காபி கூட கிடைக்குறதில்லைன்னு ரெண்டு உடன் பிறப்புக பேசிருக்காங்க. அந்த நேரத்துல, 'வீரமான'வரு, 6 பாக்கெட் மிக்சரை காலி பண்ணிட்டாராம்.'' என்றாள் சித்ரா.''சரி! எனக்குப் பசிக்குது. ஏதாவது சீக்கிரமா 'ஆர்டர்' பண்ணு.'' என்றாள் மித்ரா. மெனு கார்டைப் புரட்டினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X