சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : மே 18, 2015
Advertisement

ஆல்கஹால் இல்லா பானம்: கோவா என்பதை ஆங்கிலத்தில் எழுதும் போது அதில் உள்ள 'ஜி' என்பது கிரீன் எனும் பசுமையையும், 'ஓ' என்பது ஓசன் எனும் கடலையும், 'ஏ' என்பது ஆல்கஹால் எனும் மதுபானத்தையும் குறிப்பதாக கூறுவர். மதுபானங்களின் விலை குறைவாக இருப்பதால் 'சுற்றுலா' செல்லும் குடிமகன்களுக்கு கொண்டாட்டம். கலாசார பானமான 'பென்னி' விற்பதில் தான் கோவா மாநில அரசு அதிக அக்கறை காட்டுகிறது. முந்திரி, தேங்காயில் இருந்து 'பென்னி' தயாரிக்கப்படுகிறது. கோவாவைத் தவிர வேறு எங்கும் 'பென்னி' கிடைப்பதில்லை. ஆல்கஹாலோ, செயற்கை ரசாயனப் பொருட்களோ துளியளவும் இல்லை என்று கூறப்படும் 'பென்னி' கோவாவின் கோடை பானமாகவும் உள்ளது.

தகவல் சுரங்கம்

முத்தரையர் மாதம்: தமிழ் சமுதாயத்தில் மே மாதம் 'முத்தரையர் மாதம்'.மே 23, பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாள், அதன் முன்னும் பின்பும் முத்தரையரைப் போற்றும் வகையில் விழாக்கள் நடைபெறுகின்றன. கடற்கரைப் பகுதிகளில் முத்து குளிக்கும் இடங்களில் தான் இவர்களின் ஆட்சிஇருந்தது. அரையர் என்ற சொல்லுக்கு 'நாடாள்வோர்' என்றும் பொருள். அதனால் தான் முத்தரையர் என்ற பொருள் வந்தது.இவர்கள் கொடிகளில் பாண்டியர்களைப் போல் மீன் சின்னம் வைத்திருந்தனர். பல்லவர்களின் பட்டப் பெயர்களை இணைத்து வைத்திருந்தனர். பெரும்பிடுகு என்பதில் 'பிடுகு' என்பது வலிமையான இடி என்பதைக் குறிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X