waste water in Cauvery river | தமிழக நீர்நிலைகளில் தினமும் கலக்கும் கர்நாடக கழிவுநீர்: காவிரியில் 59 கோடி லிட்டரை திருப்பி விடுவதாக ஒப்புதல் Dinamalar
Advertisement
பதிவு செய்த நாள் :

Dinamalar Banner Tamil News

Advertisement

கர்நாடகா அரசு, தினமும், 148 கோடி லிட்டர் கழிவுநீரை, நீர்நிலைகள் வழியாக தமிழகத்திற்கு அனுப்புவதும், காவிரியில் மட்டும், 59 கோடி லிட்டர் கழிவுநீர் கலக்க விடுவதும், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நிர்ணயித்த அளவை விட, 10 மடங்கு மாசு அதிகம் உள்ளதை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளதால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து தடுக்க, அரசு ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில், நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்பட்டு, குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, தமிழக அரசு, 1,928 கோடி ரூபாயில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம், 2013 முதல் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் குடிக்கும் தண்ணீர் சுகாதாரமானது தானா? என்ற கேள்வி எழுகிறது.அதிர்ச்சி தகவல்:

இதற்கு காரணம், கர்நாடகாவில் இருந்து, காவிரியில் தினமும், 53 மில்லியன் லிட்டர் கழிவுநீர் கலக்க விடும், அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. கர்நாடகா அமைச்சரின் பேச்சு, உறுதிபடுத்தி உள்ளது. சமீபத்தில், கர்நாடகா மேலவையில் பேசிய, சிறிய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, 'பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளில், தினமும் குடிநீர் குழாய்கள், போர்வெல் மூலமாக, 1,950 மில்லியன் லிட்டர் தண்ணீர்

பயன்படுத்தப்படுகிறது; இதில், 148 கோடி லிட்டர் கழிவுநீராக, பலவகையில் ஆறுகள், கால்வாய்கள் வழியாக, தமிழகத்துக்குள் செல்கிறது' என, தெரிவித்து உள்ளார்.மேலும், 'பினாகினி, தென்பெண்ணை ஆறுகளின் வழியாக, 88.9 கோடி லிட்டரும்; 59.3 கோடி லிட்டர் கழிவுநீர், அர்காவதி, காவிரி ஆறுகளில் கலந்து தமிழகத்துக்கு செல்கிறது. இவ்வாறு, வீணாகும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து, கோலார், சிக்பல்லாபூர் மாவட்டங்களில் உள்ள, வறண்ட ஏரிகளுக்கு திருப்பி விட, அரசு திட்டமிட்டு உள்ளது' என்றும், அவர் தெரிவித்தார்.அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆய்வு :

இதற்கிடையே, காவிரியில் மாசுபட்ட நீர் கலக்கிறதா என, ஆய்வு நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொடர்ந்து ஐந்து நாட்கள், காவிரியில் கலக்கும் நீரின் தன்மை குறித்து பரிசோதித்தனர்; ஆய்வு முடிவுகள், அதிர்ச்சி தரும் வகையிலேயே உள்ளன.மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'தண்ணீரில், 3 மி.கி., அளவில் தான், பி.ஓ.டி., எனப்படும், 'பயோ ஆக்சிஜன் டிமான்ட்' இருக்க வேண்டும்; ஆனால், 29 மி.கி., என்ற அளவில் உள்ளது. நிர்ணய அளவை விட, 10 மடங்கு அதிகம்; அதிக அளவில் மாசு நிறைந்துள்ளது, உறுதியாகி உள்ளது. இதுகுறித்த அறிக்கை, தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது' என்றனர்.சுற்றுச்சூழல் பாதிப்பு மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும், மக்கள் நல்வாழ்வு சார்ந்தும் உள்ளதால், மாநில அரசு, சிறப்புக்கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. கழிவுநீர் கலப்பை, சட்ட ரீதியாக தடுக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.மேலும், காவிரியில் இருந்து, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு வந்து சேரும் குடிநீரில், மாசு அளவை, தினமும் தானியங்கி முறையில் கணக்கிடவும், ரசாயனம் உள்ளிட்ட மாசுக்களை, முற்றிலும் நீக்கும் வகையில், சுத்திகரிப்பு நிலையை மேம்படுத்தவும், அரசு திட்டமிட்டு உள்ளது.

'வடிகால்வாயான அவலம்':

தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குனர், இளங்கோ கூறியதாவது: கர்நாடகா, பூகோள ரீதியாக மேடான பகுதி என்பதால், அங்கிருந்து கழிவுநீர் நேரடியாக, தமிழகத்தில் காவிரியில் கலக்கும் சூழல் உள்ளது. நதியாக இருந்த காவிரி, வடிகால்வாயாக மாற, கர்நாடகாவே காரணம்.மாசுபட்ட நீரால், வேளாண் உற்பத்தி குறைந்து விட்டது; மேட்டூர் அணை நீரும், வண்ணம் மாறி உள்ளது. குடிக்கவோ, குளிக் கவோ, உகந்தது அல்ல; பயன்பாட்டுக்கு, ஒட்டுமொத்த மாசுகளையும் நீக்க, பலகட்ட சுத்திகரிப்பு முறை வேண்டும்.இந்த நீரை பருகுவதால், டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலும்பு, கல்லீரல், சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும். சுற்றுச்சூழல், சுகாதாரம், பொருளாதார ரீதியான பாதிப்பு என்பதால், தமிழக அரசு, இதில் சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

"


தேச துரோக செயல்:

தண்ணீரை மாசுபடுத்துவது தனிநபராக இருந்தாலும், அரசாக இருந்தாலும் குற்றம்; சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். தமிழக மக்கள், குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் பயன்படுத்தும் நீரில், கழிவுநீரை கர்நாடகா கலந்துள்ளது, தேச துரோக செயல்
நல்லுசாமி
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர்

விஷத்தை கலப்பதா?

காவிரிநீரை, முன் டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமே பயன்படுத்தினர். இப்போது, சென்னை உள்ளிட்ட பல மாவட்ட மக்களும், குடிநீர் தேவைக்காக பயன்படுத்துகின்றனர். தண்ணீரில் விஷத்தை கலப்பது போல், கழிவுநீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது, கொடூரமான செயல்
ஓய்வுபெற்ற பொறியாளர்
சென்னை

- நமது நிருபர் -

"


Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-மே-201521:58:06 IST Report Abuse

Pugazh Vகலைஞர் ஆட்சியில் இது மாதிரி சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொண்டார்கள். கர்னாடக அரசுக்கும் இது மாதிரி சட்ட விரோத செயல்கள் செய்ய பயம் இருந்தது. இப்போது சட்டத்தை மீறிய ஆட்சியல்லவா? அதான் இப்படி நடக்கிறது. பாவம் மக்கள், கலைஞரின் அருமை இப்போதாவது புரிந்தால் சரி.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-மே-201521:50:39 IST Report Abuse

Pugazh Vஅன்புள்ள கட்டுமரம் ஆட்சியில் இதெல்லாம் நடக்கவில்லை. நடக்க விட்டிருக்கவும் மாட்டார் என்பது மட்டும் நிச்சயம். நிர்வாகத் திறன் இல்லாத அரசும் அமைச்சர்களும் இருப்பதால் இதெல்லாம் நடக்கிறது.

Rate this:
Dr A.Arimappamagan - Puducherry,இந்தியா
20-மே-201507:00:59 IST Report Abuse

Dr A.Arimappamaganதமிழக வளங்கள் வெளிமாநிலங்களுக்குத் தமிழர்களாலேயே கடத்தப்படுகின்றன. கேரளா, கருநாடகா, ஆந்திரா போன்றவை பல்வேறு கழிவுகளை இங்கே கொட்டுகின்றன.

Rate this:
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
20-மே-201506:44:50 IST Report Abuse

Samy Chinnathambiஇது ஏதோ தமிழகத்தின் காவிரி ஆறில் மட்டும் உள்ள அசுத்தம் என்று எடுத்து கொள்ள முடியாது...இந்தியாவின் பெரும்பாலான நதிகள் மாசு பட்டு தான் இருக்கிறது..இது இந்திய அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம்...மாசு கட்டுப்பாட்டு துறையும் லஞ்சத்திற்கு அப்பாற்பட்டது கிடையாது....அதே போன்று அரசுக்கும் இதில் கடுமையான அக்கறை கிடையாது... பொது மக்களுக்கு தண்ணீரை அசுத்தபடுத்துவதில் எந்த தயக்கமும் கிடையாது...எனவே கடுமையான நடவடிக்கையின் வழியாக தான் இதனை சீர் படுத்த முடியும்...

Rate this:
adithyan - chennai,இந்தியா
20-மே-201505:51:23 IST Report Abuse

adithyanஏன் கர்நாடகாவை மட்டும் சொல்கிறீர்கள். தமிழகம் என்ன பெரிய யோக்யமா. பள்ளிபாளையம், கொமாரபாளையம், கரூர் போன்ற இடங்களில் எவ்வாறு ரசாயன கழிவுநீர் ஒரு வாய்க்கால் போல காவிரியில் கலக்கிறது என்ற விவரத்தை போடோவோடு போடவில்லை. அந்த செயல் என்ன புனிதமானதா.

Rate this:
samy - singapore,சிங்கப்பூர்
20-மே-201505:07:33 IST Report Abuse

samyஇனிமேலும் தாமதிக்காமல் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Rate this:
suresh - omaha,யூ.எஸ்.ஏ
20-மே-201504:38:40 IST Report Abuse

sureshகுடகு நாட்டிலிருந்து வரும் காவிரியை கொட நாட்டுக்குத் திருப்பி விட சொல்லுங்கள். முப்போகமும் விளையும்.

Rate this:
suresh - omaha,யூ.எஸ்.ஏ
20-மே-201504:35:49 IST Report Abuse

sureshபுதுசா பதவிக்கு வரும் 'மக்கள் முதல்வர்' இது குறித்து மேல் முறையீடு செய்வாரா?

Rate this:
20-மே-201504:15:30 IST Report Abuse

தீதும் நன்றும் பிறர் தர வாராஅடப்பாவிங்களா.. குடிக்கிற தண்ணிய கூட பாதுகாக்க தெரியாத நம்மளையெல்லாம் அடிமைகன்னு வெள்ளக்காரன் சொன்னது சரிதான்..அப்புறம் நான் இந்தியன் அப்படின்னு பெருமைப்பட என்ன இருக்கு.. பழங்கதைகளை பேசி காலத்தை கடத்த மட்டும் நமக்கு நல்லா தெரியும்..

Rate this:
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
20-மே-201504:14:13 IST Report Abuse

N.Purushothamanகழிவு நீரை குடிநீர் பயன்பாட்டிர்க்கு பயன்படும் காவிரி நீரோடு கலந்ததே சட்ட விரோதம்....

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X