ஜெ., மீண்டும் முதல்வராக பதவியேற்க தடை கோரி மனு

Updated : மே 23, 2015 | Added : மே 21, 2015 | கருத்துகள் (117)
Advertisement
ஜெ., மீண்டும் முதல்வராக பதவியேற்க தடை கோரி மனு

புதுடில்லி: 'அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்பதற்கு, தடை விதிக்க வேண்டும்' எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, கர்நாடக ஐகோர்ட்டால் விடுவிக்கப்பட்ட ஜெயலலிதா, நாளை மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், விஜயகாந்தின் தே.மு.தி.க., கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.


மேல் முறையீடு:

அந்த மனுவில் கூறியுள்ளதாவது: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, ஜெயலலிதாவை கர்நாடக ஐகோர்ட் விடுவித்து விட்டதால், அவர் உடனடியாக தேர்தலில் போட்டியிடலாம், எம்.எல்.ஏ., ஆகலாம் என்று, அர்த்தமில்லை. கர்நாடக ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய, 90 நாட்கள் அவகாசம் உள்ளது. அப்படி அப்பீல் செய்யப்பட்ட பின், சுப்ரீம் கோர்ட் அனுமதிக்கும் வரை, முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க முடியாது. அரசியல் சட்டத்தின், 164 (4)வது பிரிவின்படி, சட்டசபை உறுப்பினராக இல்லாத ஒருவர், முதல்வராக பதவியேற்கலாம். ஆனால், கோர்ட் அளித்த தண்டனையால், பதவி இழந்த, தகுதி இழந்த ஒருவர், இந்த சட்டப்பிரிவை பயன்படுத்தி, முதல்வராக பதவியேற்க அனுமதிக்க கூடாது. குற்ற வழக்குகளில், தண்டனை பெற்ற ஒருவர், மீண்டும் அரசு பொறுப்பை ஏற்க வேண்டும் எனில், சுப்ரீம் கோர்ட், அவரை தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் அல்லது பதவியேற்க அனுமதி வழங்க வேண்டும். இதுதொடர்பான வழிகாட்டிக் குறிப்புகளையும், சுப்ரீம் கோர்ட் வரையறுக்க வேண்டும்.


விடுதலை செய்யலாம்:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்து மதிப்பானது, அவர்களின் வருமானத்தை விட, 10 சதவீதம் வரை கூடுதலாக இருந்தால், அவர்களை விடுதலை செய்யலாம் என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், ஜெயலலிதா வழக்கில், கர்நாடக ஐகோர்ட் நீதிபதி செய்த தவறு, சரி செய்யப்பட்டால், அவர், 76 சதவீத அளவுக்கு சொத்து சேர்த்துள்ளது, நிரூபணமாகும். எனவே, ஜெயலலிதாவை பதவியேற்க அனுமதிக்கக் கூடாது என, தமிழக கவர்னருக்கும், இதர அமைப்புகளுக்கும் கடிதம் எழுதினேன். அதற்கு எந்தப் பதிலும் இல்லாததால், இந்த மனுவை தாக்கல் செய்துள்ளேன். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


ரூ.25 ஆயிரம் அபராதம்:

'தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க கூடாது' என, கர்நாடகா உயர்நீதிமன்ற விடுமுறை கால அமர்வில், ரவிராஜ் குல்கர்னி என்ற வழக்கறிஞர், மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை, நீதிபதி வேணுகோபால கவுடா, வீரப்பா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து பிறப்பித்துள்ள உத்தரவில், 'வழக்கு தொடர்பாக, உயர்நீதிமன்ற தீர்ப்பு பிரதியை, மனுவுடன் இணைக்கவில்லை. ஜெயலலிதா விடுதலை தொடர்பான, உயர்நீதிமன்ற தீர்ப்பை சரியாக தெரிந்து கொள்ளாமல், விளம்பரத்துக்காக மனு தாக்கல் செய்து, நீதிமன்ற நேரத்தை வீணடித்துள்ளார். மனுவை தள்ளுபடி செய்வதுடன், அவருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது' எனக் கூறியுள்ளனர்.

இந்நிலையில், ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய, கர்நாடகா மாநில ஆம் ஆத்மி மாநில பொறுப்பாளர் ஹரிஹரன், முதல்வருக்கு வேண்டுகோள் மனு கொடுத்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஜெயலலிதா நிரபராதி என, கர்நாடகா உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக, மாநில அரசு, உடனடியாக உச்ச நீதிமன்றத்தில், அப்பீல் மனு தாக்கல் செய்ய வேண்டும். அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா, தீர்ப்பில் உள்ள குறைகள் பற்றி, ஏற்கனவே அறிக்கை அளித்துள்ளார். ஆனால், மாநில அரசு, இன்னும் மேல் முறையீடு தாக்கல் செய்ய முன்வரவில்லை. இதனால் தவறு செய்தவர்கள், லாபம் பெறும் வாய்ப்புள்ளது. மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வது தாமதமானால், நீதிமன்றம் அதை ஏற்க மறுக்கும் சாத்தியமுள்ளது. எனவே, அரசு, உடனடியாக, மேல் முறையீடு மனு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்உச்ச நீதிமன்றத்தில், அப்பீல் செய்வது குறித்து ஆலோசிக்க, நேற்று நடப்பதாக இருந்த, கர்நாடகா அமைச்சரவை கூட்டத்தை, வரும், 25ம் தேதி, மாலை நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (117)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
24-மே-201506:00:10 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam உச்ச நீதிமன்றத்தில் விஜயகாந்தின் கட்சி வழக்கறிஞர், மணி , நல்ல பாடம் கற்றுக்கொள்வார். சில வேளை, சட்டம் சம்பந்தமான கேள்விகளுக்குப் பதில் அளிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
22-மே-201520:04:25 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ஓர் வழக்கு பொய்வழக்கு என்று தீர்ப்பானால் பொய்வழக்கு போட்டவருக்கு தண்டனை அளிக்க வேண்டும். அவ்வழக்கால் பாதிக்கப்பட்டவருக்கு நட்ட ஈடும் வழங்க வேண்டும்.அப்போதுதான் சரியான தீர்வாக அமையும்.எல்லாவற்றிற்கும் சற்று நிதானமாக உண்மையாக நேர்மையாக எதையும் செய்ய எண்ணம் வரும். வளரும்.இக்கால நடைமுறைக்கு ஏற்ப சட்டதிருத்தம் பிரிவுகள் மேலும் கொண்டு வரவேண்டும்.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-மே-201523:53:50 IST Report Abuse
தமிழ்வேல் பாட்டி.... நஷ்ட ஈடு கேட்டு கேசு போடுவாங்க......
Rate this:
Share this comment
வேந்தன் - சின்சினாட்டி,யூ.எஸ்.ஏ
23-மே-201503:31:14 IST Report Abuse
வேந்தன் ஆம். 20 ஆண்டுகளுக்கு முன் அது பொய்வழக்கு என்று தீர்ப்பானால் செய்திருக்கலாம்....
Rate this:
Share this comment
Cancel
SUBASH CHANDRA BOSE RR - Coimbatore ,இந்தியா
22-மே-201519:26:59 IST Report Abuse
SUBASH CHANDRA BOSE RR The so called lawyer is not a lawyer, because his leader itself komali, after influence of something he beats everybody, he is not fit for a leader, Now file the case for what, he wants his leader should be made as a Chief Mininster of Tamilnadu. well done Mr lawyer , hence I request Hon Supreme Court fine him , so that in future like this unwanted petition should file and wasting time of valuable Supreme court times, Jai Hind
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X