பொது செய்தி

இந்தியா

பீகாருக்கு உலக வங்கி ரூ.1,500 கோடி நிதியுதவி

Added : மே 21, 2015
Advertisement

புதுடில்லி: பீகாரில், ஆரம்ப கல்வி ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களுக்காக, உலக வங்கி, 1,500 கோடி ரூபாய் கடன் வழங்குகிறது.பீகாரில், 'மானவ் விகாஸ்' என்ற திட்டத் தின் கீழ், பள்ளிக் கல்வி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில், ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு தரமான பயிற்சி வழங்கும் திட்டமும் அடங்கும். இதற்காக, உலக வங்கி, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1,500 கோடி ரூபாய் வழங்க உள்ளது.
பீகாரில், ஆரம்ப கல்வித் தரம் மோசமாக உள்ளது. அதற்கு, திறமையான ஆசிரியர்களின் பற்றாக்குறையும் காரணம். உலக வங்கி நிதியுதவியில், அதிக அளவில், திறமையான ஆசிரியர்கள் உருவாக்கப்படுவர். பீகாரில், ஓராண்டில், 5,000க்கும் குறைவாகவே ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வசதி உள்ளது. வரும், 2020ல், ஆறு லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தேவைப்படுவர்.இந்த இலக்கை எட்ட, பயிற்சி பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை, தற்போது உள்ளதை விட, 10 மடங்கு அதிகரிக்க வேண்டும்.
இதை கருத்தில் கொண்டு, உலக வங்கி அளிக்கும் நிதியுதவி மூலம், பீகாரில், 4.50 லட்சம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் பயன்பெறுவர். இதில், திறந்தவெளி கல்வி முறை மூலம் போ திய தகுதியின்றி ஆரம்ப பள்ளியில் சேரும், 65 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர். திறமையான ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்கள் மூலம், 2.12 கோடி மாணவர்கள் பயன் பெறுவர் என, உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X