அமெரிக்க தூதர் ரிச்சர்டு ராகுல் வர்மா பஞ்சாபில் பாட்டி வீட்டிற்கு விஜயம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அமெரிக்க தூதர் ரிச்சர்டு ராகுல் வர்மா பஞ்சாபில் பாட்டி வீட்டிற்கு விஜயம்

Added : மே 21, 2015 | கருத்துகள் (1)


ஜலந்தர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, இந்தியாவிற்கான அமெரிக்க தூதரான ரிச்சர்டு ராகுல் வர்மா, நேற்று பஞ்சாபில் தன் பாட்டி வசித்த வீட்டை பார்வையிட்டார்.ஜலந்தர் நகரில், பாஸ்தி ஷேக் பகுதியின் குறுகலான சந்தில் உள்ள அந்த வீடு, தற்போது ராகேஷ் குப்தா என்பவருக்கு சொந்தமாக உள்ளது. அதை, ராம் என்ற பெட்டிக் கடைக்காரர் உதவியுடன் ராகுல் கண்டுபிடித்தார்.
பிரதான சாலையில் இருந்து, அந்த வீடு நோக்கி வந்த ராகுலுக்கு, மேள தாளம் முழங்க, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திடீரென அமெரிக்க வி.ஐ.பி., ஒருவர், தன் வீட்டிற்கு வந்ததும், ராகேஷ் குப்தாவுக்கு, இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. ஒரு கணம் செய்வதறியாது திகைத்த அவர், பின் சுதாரித்து, ராகுலை வரவேற்று உபசரித்தார். இருவரும், 20 நிமிடங்கள் தனிமையில் பேசினர். அதே வீட்டில் தன் தாய் பிறந்து, தவழ்ந்து விளையாடியதை, மனத் திரையில் உருவகப்படுத்தி மகிழ்ந்த ராகுல், உணர்வுப்பூர்வமாக அந்த வீட்டில் இருந்து பிரியா விடை பெற்றார். இதைத் தொடர்ந்து, தன் தந்தையின் பூர்வீக கிராமமான அபராவுக்கு சென்ற அவர், மாலையில் கல்லூரி விழாவொன்றிலும், இந்திய தொழிலக கூட்டமைப்பின் கூட்டத்திலும் பங்கேற்றார். அப்போது, பஞ்சாப் உடனான தன் தொப்புள்கொடி உறவின் உணர்வுப்பூர்வ தருணங்களை அவர் பகிர்ந்து கொள்ள தவறவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X