தோல்வி அனுபவத்திற்கு; வெற்றி அனுபவிப்பதற்கு: டாக்டர் ஆர்.முருகேசன் - சமூக ஆர்வலர்

Updated : மே 24, 2015 | Added : மே 24, 2015 | கருத்துகள் (2) | |
Advertisement
பத்திரிகைகளில், தற்கொலை என்ற செய்தி வராமல் இருந்தது இல்லை. இந்த செய்தி, தினமும் இடம் பெறுவதற்கான காரணங்களை மேலோட்டமாக பார்த்தால், வெவ்வேறாக தோன்றலாம். குக்கிராமத்தில் இருந்து, படிப்பு சதவீதம் அதிகமுள்ள நகரம் வரை, தடையின்றி பரவியிருக்கும் ஒருவித மனநிலை பாதிப்புக்கான வெளிப்பாடாக இருப்பது தற்கொலை நிகழ்வுகள். இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் எண்ணிக்கை
தோல்வி அனுபவத்திற்கு; வெற்றி அனுபவிப்பதற்கு: டாக்டர் ஆர்.முருகேசன் - சமூக ஆர்வலர்

பத்திரிகைகளில், தற்கொலை என்ற செய்தி வராமல் இருந்தது இல்லை. இந்த செய்தி, தினமும் இடம் பெறுவதற்கான காரணங்களை மேலோட்டமாக பார்த்தால், வெவ்வேறாக தோன்றலாம்.

குக்கிராமத்தில் இருந்து, படிப்பு சதவீதம் அதிகமுள்ள நகரம் வரை, தடையின்றி பரவியிருக்கும் ஒருவித மனநிலை பாதிப்புக்கான வெளிப்பாடாக இருப்பது தற்கொலை நிகழ்வுகள். இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் எண்ணிக்கை கணிசமாக இருப்பது, நாம் வாழும் சமுதாயத்தை அச்சப்படுத்த வைக்கும் புள்ளி விவரம்.உயர் கல்வி வழங்கக்கூடிய கல்வி நிறுவனங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்று, சிறந்த மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்றோர் மத்தியிலும், தற்கொலை நிகழ்வு நடக்கிறது. வாழ்க்கையை சீர்செய்ய கல்வி எப்படி பயன்பட வேண்டுமோ, அப்படி பயன்படுத்தப்பட்டு இருக்கிறதா என்றால் இல்லை.கல்வியின் குறைபாடா, கற்பிக்கும் விதத்திலா அல்லது கற்றுக் கொள்வதில் உள்ள குழப்பமா, ஏன் இப்படிப்பட்ட நிகழ்வுகள்? சமீபத்திய ஒரு செய்தி, ஆசிரியர் திட்டியதால், ஏழாம் வகுப்பு மாணவி தன்னை எரித்துக் கொண்டு தற்கொலை செய்திருப்பது, சமுதாய நல்லொழுக்க பாதை என்ற மனிதத்தை கொலை செய்யும் கொடுமை.

தற்கொலை செய்து கொண்டதை நியாயப்படுத்தி, தற்கொலை செய்து கொண்டவருக்கான தீர்வு அது தான் என, யாரும் ஆமோதிப்பதும் இல்லை; ஆதரிப்பதும் இல்லை. சரி, தற்கொலை செய்து கொண்ட ஒருவரது விருப்பத்தை பூர்த்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பாக கருதி செய்து கொண்டிருக்கலாம் எனவும் கருத முடியாது.ஏன் என்றால், தற்கொலை, விரும்பி செய்து கொள்வதில்லை; மாறாக, விருப்பத்திற்கு எதிராக, கட்டாயப்படுத்திக் கொண்ட ஒரு செயல். அதனால்தான், அது தற்செயலாக இல்லாமல், தற்கொலையாக மாறி இருக்கிறது.இந்த நிகழ்வுகள், முன்னேறிக் கொண்டிருக்கும் நம் நாட்டில் மட்டுமே நிகழும் நிகழ்வுகளா என்றால் இல்லை. நன்கு வளர்ந்த அமெரிக்கா போன்ற நாட்டில் தான், அதிகளவு தற்கொலை நடக்கிறது. பெண்களை விட, ஆண்களே அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்கின்றனர் என, உளவியல் சார்ந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

எந்த ஒரு செயலுக்கும், அதை செய்தவருக்கும் அல்லது அவர் மீது செயல்படுத்தப்பட்டதற்கும், அவர் சார்ந்த சூழல் முக்கிய காரணியாக இருக்கும். தற்கொலை என்பது தன்னைத்தானே கொலை செய்து கொள்ளும் ஒரு குற்றம் என்ற உணர்வு, தற்கொலை செய்துகொள்வோரிடம் இல்லை.பொதுவாக, ஒரு குற்றத்தை செய்யும்போது தோன்றும் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்ற கண்ணோட்டம், தற்கொலை செய்து கொள்வோரிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை. தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர் பிழைத்தவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம் இதை நிரூபிக்கும். பொதுவாக, மனநலமின்றி பெரும் பாதிப்புக்கு உள்ளானோர் தான், தற்கொலைக்கான இலக்காக இருக்கின்றனர். உலகத்தில், 6,50,000 பேர், ஆண்டுதோறும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
தற்கொலை என்பது மனம் சார்ந்த நோய் அல்லது அதைச் சார்ந்த பாதிப்புகளால் ஏற்படும் நிகழ்வு என்பது உண்மை. ஆனால், மனநோயாளிகள் அதிகபட்சமாக தற்கொலை செய்து கொள்கின்றனரா என்றால் இல்லை.

மனநலமின்மை மட்டுமல்லாமல், வயது, பாலினம், திருமண நிலை, இனம், இழப்பை ஏற்படுத்தியிருக்கும் சமீபத்திய நிகழ்வுகள், சமுதாயத்தால் ஆதரிக்கப்படுதலும், விலக்கப்படுதலும், போதை மருந்து மற்றும் மதுபானங்களை பயன்படுத்துவதும், தற்கொலைக்கான காரணிகளாக இருக்கின்றன. எதிர்மறையான எதிர்பார்ப்பு, நம்பிக்கையின்மை கொண்டோர், தீர்க்கப்படாமல் இருக்கக்கூடிய பிரச்னைக்கு சாத்தியமான தீர்வு தற்கொலை என, நினைக்கின்றனர். மேலும், சிலர் நடைமுறைக்கு மாறுபட்ட உயர்ந்த வாழ்வில் தரத்தை தனக்குரியதாக அமைத்துக் கொள்கின்றனர். அதேவேளை, அளவுக்கு அதிகமாக தங்களை தாங்களே எடை போட்டு பார்த்து, தாங்கள் தரம் தாழ்ந்தவர்கள் என, தீர்மானித்து விடுகின்றனர். மன அழுத்தம் தொடர்ச்சியாக வாழ்வு சார்ந்த நிகழ்வுகளால் தொடரும்போது, தங்களைப் பற்றிய எதிர்பார்ப்பு நிகழ்வுகளின் வெளிப்பாட்டுடன் முரண்படும்போது, எதிர்மறையான உணர்ச்சி தூண்டுதல் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. அதன் விளைவாக, மனம் சார்ந்த தாழ்வு நிலை ஏற்படும். அதுவே, தற்கொலை தூண்டுதலுக்கான முக்கிய காரணியாக மாறிவிட வாய்ப்பு இருக்கிறது.

தற்கொலை தூண்டுதலுக்கான அறிகுறிகளாக, பின்வருவனவற்றை குறிப்பிடலாம். உணவு உண்ணுவதில் திடீர் மாற்றம், தூங்கும் பழக்கத்தில் திடீர் மாற்றம், கொடூரமான செயலை எதிர்க்கும் அல்லது அதிலிருந்து விலகி ஓடும் தீவிர குணம், போதை மருந்து மற்றும் மது பானங்கள் அளவுக்கு அதிகமாக உபயோகப்படுத்துதல், வழக்கத்திற்கு மாறாக, எதிர்மறையாக, தன் தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளல், மனதை ஒருமுகப்படுத்துவதில் அதிக தடுமாற்றம், தலைவலி, வயிற்றுவலி என, அடிக்கடி பொய்யாக கூறுதல் ஆகியவை.'இனி எந்த பிரச்னையும் இருக்காது; இனி, நான் உங்களுக்கு பிரச்னையாக இருக்க மாட்டேன்' போன்ற வார்த்தைகளை அடிக்கடி விரக்தியாக உபயோகப்படுத்துதல், பிடித்தமானவற்றை விட்டு வலுக்கட்டாயமாக விலகுதல் அல்லது தவிர்த்தல், மனத்தாழ்வு நிலைக்கு பின், திடீரென சந்தோஷப்படுதலும் அடங்கும்.

இப்படிப்பட்ட அறிகுறிகள், தற்கொலை எண்ணமுடையோரின் அடையாளமாக கொண்டு, அவர்களை அக்கறையாக, அதேசமயம் அன்பாக கரிசனம் காட்ட வேண்டும். தேவையான உதவிகள் கிடைக்கும் என்ற உறுதியை அவர்கள் உணர்ந்து கொள்ளும் விதத்தில் சொன்னால், தற்கொலை தூண்டுதல் உணர்வுகளை தவிர்க்கலாம்.நம் செயலுக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனில், நம் செயல் அங்கீகாரத்திற்கான தகுதி பெறவில்லை அல்லது நம் செயலை அங்கீகரிக்கத் தெரியவில்லை என்று தான் அர்த்தம். அதற்காக, நம்மை அழித்துக் கொள்ள வேண்டியது அவசியமில்லை. இதை சரியாக புரிந்து கொள்ளாததால் தான், தற்கொலையும், பயங்கரவாத செயலும் நடைபெறுகின்றன. தற்கொலை கூட, ஒரு பயங்கரவாத செயல் தான். தோல்வியை புரிந்து கொள்ளாமல், வெற்றியை அடைய முடியாது. வெற்றியை விட, தோல்வி நிறைய பாடங்களை கற்றுக் கொடுக்கும்; கற்றுக் கொள்ள, நாம் தான் தயாராக இருக்க வேண்டும்.தோல்வி அனுபவத்திற்கு; வெற்றி அனுபவிப்பதற்கு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.e-mail: rmmindreader@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
05-ஜூன்-201500:26:29 IST Report Abuse
Manian தோல்வி என்பது உங்கள் அனுகுமுறை, படிக்கும் முறை, நேரம் பற்றி சிந்தனை செய்யாமை,போன்றவையே காரணங்கள், தவிர, நீங்கள் உங்கள் வாழ்வில் தோல்வி அடையவில்லை.. தோல்வி உங்களை எச்சரிக்கும் நண்பன். இதை தோல்வி என்று சொல்லாமல் தோல்வி ஆராய்ச்சி (Error Analysis) தவறு அலசல் என்றும் சொல்லலாம் - என்ன தவறு, ஏன் இந்த தவறு, இதை எப்படி சரி செய்யலாம், இதை - இந்த அனுபவத்தை வாழ்கையிலே, திருமணம், என்றெல்லாம் எப்படி இது உபயோகப்படும் . என்று சிந்தை செய்தால் வாழ்கயில் வெற்றி நிச்சயமே. குழந்தை பருவத்தில் எத்தனை தடவை நீங்கள் விழுந்திருப்பீர்கள்? அதன்பின் இப்போது, நடக்க, ஓட வில்லாயா? இதை பெற்றோர்களும் தங்கள் இளவயதில் செய்யத பிழை களையும் நினைவில் கொண்டால் தற்கொலை நடக்காது.பெற்றோர்களும் பிற பிள்ளைகளுடன் ஒப்பு செய்வது மிக பெரிய குற்றம். குழந்தையின் மரபணு, வளரும் முறை, உடல், மன நலம், தகப்பனின் அன்பு இல்லாமை, வறுமை, சூற்றுச் சூழல், கண்ணுக்கு தெயாத வியாதி, போன்ற எல்லா விதத்திலும் சிந்தனை செய்தால் இந்த மாதிரி ஒப்பு நோக்கும் எண்ணம் வராது. ஆனால் பெற்றோகள் தங்களையும் சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் ""ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காணும் பின் தீதும் உண்டோ மன்னும் உயிர்க்கு" தோல்வியே வெற்றியின் அடித்தளம்.
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
25-மே-201502:47:52 IST Report Abuse
Manian மிக நல்ல கட்டுறை. ஆனா நம்து நாட்டில் மன நிலை பாதிப்பை கேவலமாக நினைகிறோம். அத்தோடு பள்ளிகளில் முதல் கல்லுரி வரை கவுன்சிலிங் இல்லை. மன அழுத்தம் மருத்துவர்களும் கிராமங்களில் இல்லை. நல்ல வழிகாட்டிகளும் இல்லை. ஆசியா முழுவதும் இந்த மனோநல டாக்டர்களும் இல்லை. பெற்றோர்களும் மனமூதிர்ச்சிஇல்லாமலேயே பிள்ளை பெற்று கொள்கிறார்கள் . தனியே குடித்தனம் போனவர்களுக்கு சொல்லி அழ ஆளும் இல்லை. பொதுவாக தகப்பான்மார்களே இந்த மனோ வியாதிக்கு காரணம் பல தாய்மார்களும் " படி படி " என்று எரிச்ல்லுட்டுவதும் ஒரு காரணம் . இப்படி படி என்று சொல்லி தெரிவதில்லை . 18-19 வயதில் சொந்தத்தில் திருமணம் செய்யும் பெண்களில் பலருக்கு தர்கொலை செய்து கொள்ளும் பிள்ளைகள் பிறக்கும் என்றும் ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. எனவே இந்த பிரச்சி‌னையை சுலபமாக தீர்க்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X