மாநகராட்சி அலுவலர்களுக்கு வாய்ப்பூட்டு!

Added : மே 24, 2015
Share
Advertisement
""காஸ் சிலிண்டர் மானியம் பாங்க்ல வர்றதுல இருந்து, "டெலிவரி பாய்ஸ்' கூடுதலா வசூலிக்க ஆரம்பிச்சிட்டாங்க,'' என, அலுப்புடன் கூறினாள் மித்ரா.""சிலிண்டர் கெடைக்கறதே பெரிசா இருக்கு? இதுல கணக்குப் பார்க்க முடியுமா?'' என, "சப்போர்ட்'டாக பேசினாள் சித்ரா.""காஸ் ஏஜன்சி கொடுக்கிற பில்லில் இருந்து, 20 அல்லது 30 ரூபாய் கூடுதலா வசூலிக்கிறாங்க. அதையும் சரியான சில்லரையா
மாநகராட்சி அலுவலர்களுக்கு வாய்ப்பூட்டு!

""காஸ் சிலிண்டர் மானியம் பாங்க்ல வர்றதுல இருந்து, "டெலிவரி பாய்ஸ்' கூடுதலா வசூலிக்க ஆரம்பிச்சிட்டாங்க,'' என, அலுப்புடன் கூறினாள் மித்ரா.""சிலிண்டர் கெடைக்கறதே பெரிசா இருக்கு? இதுல கணக்குப் பார்க்க முடியுமா?'' என, "சப்போர்ட்'டாக பேசினாள் சித்ரா.""காஸ் ஏஜன்சி கொடுக்கிற பில்லில் இருந்து, 20 அல்லது 30 ரூபாய் கூடுதலா வசூலிக்கிறாங்க. அதையும் சரியான சில்லரையா கொடுக்கணும். இல்லேன்னா, மீதித்தொகைக்கு, துணி துவைக்கும் சோப்பு கொடுத்து, கணக்கை "ரவுண்ட்' பண்ணிட்டு போயிடுறாங்க. குறிப்பா, பாரத் காஸ் ஏஜன்சி ஊழியர்கள்தான் இப்படி செய்றாங்கனு, வாடிக்கையாளர் தரப்புல புகார் கொடுத்திருக்காங்க,'' என்றாள் மித்ரா.""தேவையில்லாத எடத்துல, எதுக்கு "ரவுண்டானா' போட்டாங்கன்னு தெரியலை?'' என, கோபமாக கேட்டாள் சித்ரா.""நம்மூரில் எந்த ரோடா இருந்தாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுதே; அதை கட்டுப்படுத்த கட்டியிருப்பாங்க; அது தெரியாம பேசாதே,'' என்றாள் மித்ரா.""ரெண்டு நாளைக்கு முன்னாடி, ஒரு வேலையா டூம்லைட் மைதானம் போயிருந்தேன். ஒரு காலத்துல பொதுக்கூட்டம் நடந்த மைதானத்துல, இப்ப "ரவுண்டானா' கட்டியிருக்காங்க. கொடிக்கம்பங்களுக்கு பக்கமா, ஆட்டோக்களை நிறுத்தி வச்சிருந்தாங்க. ஆட்டோக்காரங்களோடு மாநகராட்சிக்கோ, கவுன்சிலருக்கோ என்ன சண்டைனு தெரியலை. மைதானத்துக்கு நடுவுல, "ரவுண்டானா' கட்டி, ஆட்டோ நிறுத்த முடியாம செஞ்சிருக்காங்க,'' என்றாள் சித்ரா.""தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த, எதிர்க்கட்சிக்காரங்க திட்டமிட்டிருக்காங்க,'' என, பொடி வைத்தாள் மித்ரா.""ஏன், எதுக்கு?'' என, ஆச்சரியத்துடன் கேட்டாள் சித்ரா.""ஈஸ்வரன் கோவில் முன்னாடி புதுசா குறுக்கு பாலம் கட்டியிருக்காங்க. ஈஸ்வரன் கோவில் வீதியிலும், பெருமாள் கோவில் குறுக்கு வீதியிலும் இருந்த சிறுபாலத்தை உயரமா கட்டுனாங்க. சிறுபாலத்துக்கு மேல இருந்த கான்கிரீட்டை நகர்த்தி வச்சு, வேலை முடிஞ்சதும், பழையபடி வச்சுட்டாங்க. ஈஸ்வரன் கோவில் முன்னாடி மட்டும் புதுசா கான்கிரீட் போட்டிருக்காங்க. அதனால, மதிப்பீடு எப்படி தயாரிச்சிருக்காங்கனு, தகவல் அறியும் உரிமை சட்டத்துல கேட்டு, குடைச்சல் கொடுக்க எதிர்கட்சிக்காரங்க திட்டம் போட்டிருக்காங்க,'' என்று சொல்லி, சிரித்தாள் மித்ரா.""மாநகராட்சி அலுவலர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டிருக்காங்களாமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.""ரொம்ப ஜாக்கிரதையா இருங்கன்னு, "அட்வைஸ்' சொல்லியிருக்காங்க,'' என்றாள் மித்ரா.""கொஞ்சம் விளக்கமாதான் சொல்லேன்,'' என, சித்ரா கேட்க, ""மாநகராட்சியில் மாதாந்திர அலுவல் கூட்டம் நடந்துச்சு. அதில் பேசிய மாநகராட்சி கமிஷனர், "வாட்ஸ்அப்', "பேஸ்புக்', "டுவிட்டர்'ல யாராவது இருந்தீங்கன்னா கவனமா இருங்க. எதிர்முனையில் பேசுவோரின் நம்பகத்தன்மையை தெரிந்து, பேசுங்க. ஒவ்வொரு துறையிலும் நடக்கும் விஷயங்கள், சமூக வலைதளங்கள் உதவியோடு, "டிவி', பத்திரிகைகளில் வெளிச்சத்துக்கு வந்து, பெயரை, "டேமேஜ்' பண்ணுது; அது மாதிரி நம்மூர்ல, நம்ம ஆபீஸ்ல ஏதேனும் பிரச்னை வந்திறக்கூடாதுன்னு, "அட்வைஸ்' மழை பொழிஞ்சிருக்கார்.'' என்றாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X