திண்டுக்கலில் போலி நகைகள் கொடுத்து ரூ.4 லட்சம் மோசடி

Added : நவ 15, 2010 | |
Advertisement
திண்டுக்கல் :  திண்டுக்கலில் தனியார் பைனான்ஸ் கம்பெனியில் போலி நகைகளை கொடுத்து 4 லட்ச ரூபாய் மோசடி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல்- பழநி ரோட்டில் பாலமுத்தழகு பைனான்ஸ் கம்பெனி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை திண்டுக்கல் அண்ணாநகரை சேர்ந்த மணி, ஒரு பெண் உட்பட மூன்று பேர் வந்துள்ளனர். இவர்கள் தங்களிடமிருந்த 327 கிராம் தங்க நகைகளை அடகு வைப்பதாக

திண்டுக்கல் :  திண்டுக்கலில் தனியார் பைனான்ஸ் கம்பெனியில் போலி நகைகளை கொடுத்து 4 லட்ச ரூபாய் மோசடி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல்- பழநி ரோட்டில் பாலமுத்தழகு பைனான்ஸ் கம்பெனி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை திண்டுக்கல் அண்ணாநகரை சேர்ந்த மணி, ஒரு பெண் உட்பட மூன்று பேர் வந்துள்ளனர். இவர்கள் தங்களிடமிருந்த 327 கிராம் தங்க நகைகளை அடகு வைப்பதாக கூறியுள்ளனர். இதற்கு 4 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளனர். மணி ஏற்கனவே இந்த கம்பெனியில் நகையை அடகு வைத்து திருப்பியுள்ளார். இந்த அடிப்படையில் 4 லட்ச ரூபாயை பைனான்ஸ் நிறுவனத்தார் கொடுத்துள்ளனர். இந்த நகையை நேற்று சோதனை செய்து பார்த்த போது, இவை அனைத்தும் போலியானவை என தெரிந்தது. இது குறித்து பைனான்ஸ் கம்பெனி மேலாளர் கிருஷ்ணசாமி (60), திண்டுக்கல் நகர் மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர் கொடுத்த விலாசத்திற்கு சென்று பார்த்தபோது, அவர்களின் விலாசமும் போலியாக இருந்தது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X