சிங்கப்பூரில் போலீஸ் சுட்டு ஒருவர் பலி

Added : மே 31, 2015 | கருத்துகள் (2)
Share
Advertisement
சிங்கப்பூர் :சிங்கப்பூரில் பல நாட்டு பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்துகொண்டிருந்த பிரபல சங்ரி - லா ஹோட்டலுக்குள் நுழைய முயன்ற ஒருவர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். கூட்டம் நடந்து கொண்டிருந்த ஹோட்டலுக்குள் வேகமாக வந்த ஒரு காரை அங்கிருந்த போலீசார் நிறுத்தி காரை திறந்து காண்பிக்க சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதில்
சிங்கப்பூரில் போலீஸ் சுட்டு ஒருவர் பலி

சிங்கப்பூர் :சிங்கப்பூரில் பல நாட்டு பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்துகொண்டிருந்த பிரபல சங்ரி - லா ஹோட்டலுக்குள் நுழைய முயன்ற ஒருவர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். கூட்டம் நடந்து கொண்டிருந்த ஹோட்டலுக்குள் வேகமாக வந்த ஒரு காரை அங்கிருந்த போலீசார் நிறுத்தி காரை திறந்து காண்பிக்க சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதில் வந்தவர்கள் வேகமாக காரை முன்னோக்கி செலுத்தியிருக்கிறார்கள். உடனே போலீசார் அந்த காரை நோக்கி சுட்டதில் ஒருவர் பலியானார், இன்னும் இருவரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில் இந்த நபர்கள் போதை பொருள் கடத்துபவர்களாக இருக்க கூடும் என்றார்கள். பிடிபட்ட ஒருவரிடம் போதை பொருள் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
31-மே-201516:45:25 IST Report Abuse
K.Sugavanam மிக சரியான செயல்.பாதுகாப்பில் இம்மி அளவு கூட தொய்வு கூடாது.
Rate this:
Cancel
Thiruchitrambalam Kennedy - Singapore,சிங்கப்பூர்
31-மே-201514:53:45 IST Report Abuse
Thiruchitrambalam Kennedy பயங்கரவாதம் எங்கும் தலை காட்ட ஆரம்பித்து விட்டது. ISIS யும் டார்கெட் லிஸ்டில் சிங்கப்பூரை சேர்த்தார்கள். மதமே மனித குலத்திற்கு ஆபத்தாக மாறாமல் இருந்தால் நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X