பசிபிக் கடலை கடக்க புறப்பட்டது சோலார் விமானம்| Dinamalar

பசிபிக் கடலை கடக்க புறப்பட்டது சோலார் விமானம்

Updated : மே 31, 2015 | Added : மே 31, 2015
Share
நன்ஜிங் ( சீனா ) : ஒரே ஒரு பைலட் உடன் எந்த ஒரு எரிபொருளையும் எடுத்து செல்லாமல் சோலார் பவரை மட்டும் பயன்படுத்தி உலகை சுற்றி வர, கடந்த மார்ச் 9 ம் தேதி அபுதாபி நகரில் இருந்து புறப்பட்ட சோலார் இம்பல்ஸ் விமானம், இப்போது சீனாவின் நன்ஜிங் நகரில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருக்கிறது. முதன் முறையாக அது மிக அதிக தூரம் கொண்ட பசிபிக் கடலை கடந்து
பசிபிக் கடலை கடக்க புறப்பட்டது சோலார் விமானம்

நன்ஜிங் ( சீனா ) : ஒரே ஒரு பைலட் உடன் எந்த ஒரு எரிபொருளையும் எடுத்து செல்லாமல் சோலார் பவரை மட்டும் பயன்படுத்தி உலகை சுற்றி வர, கடந்த மார்ச் 9 ம் தேதி அபுதாபி நகரில் இருந்து புறப்பட்ட சோலார் இம்பல்ஸ் விமானம், இப்போது சீனாவின் நன்ஜிங் நகரில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருக்கிறது. முதன் முறையாக அது மிக அதிக தூரம் கொண்ட பசிபிக் கடலை கடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 21 ம் தேதியே சீனாவின் நன்ஜிங் நகருக்கு வந்துவி்ட்ட சோலார் இம்பல்ஸ், சாதகமற்ற வானிலை இல்லாத காரணத்தால் அங்கேயே ஒரு மாதத்திற்கும் மேலாக இருக்க வேண்டியதாகி விட்டது. ஏனென்றால் அது, நன்ஜிங்கில் இருந்து ஹவாய் தீவை அடைய 5 நாட்கள் இரவும் பகலும் தொடர்ந்து 8,200 கி.மீ.பயணம் செய்ய வேண்டும். ஸ்விஸ் நாட்டு விமானி ஆண்ட்ரி போர்க்ஸ்பர்க் இந்த விமானத்தை ஓட்டி சென்றுகொண்டிருக்கிறார். ஹவாய் தீவுக்கு சென்றபின் அது,அமெரிக்காவின் பியோனிக்ஸ் மற்றும் நியூயார்க் நகர்களை சென்றடைந்து பின்னர் அட்லாண்டிக் கடலை கடந்து ஆப்பிரிக்கா வந்து பின்னர், புறப்பட்ட அபுதாபி நகருக்கே வர வேண்டும். அபுதாபி - அபுதாபியின் மொத்த தூரம் 35,000 கி.மீ.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X