விஜயராகவபுரம்: விஜயராகவபுரத்தில், பராமரிப்பு இல்லாததால் குப்பை சேகரிக்கும் மையம், சிறுநீர் கழிப்பறையாக மாறி விட்டது.
கோடம்பாக்கம் மண்டலம், விஜயராகவபுரம் பி.வி.ராஜமன்னார் சாலையில் தேங்கும் குப்பையை சேகரிக்க, சாலையோரத்தில் குப்பை சேகரிக்கும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. பராமரிப்பு இல்லாததால், மையத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. அந்த மையத்தை, தற்போது சிறுநீர் கழிக்கும் இடமாக, சிலர் பயன்படுத்தி வருகின்றனர். குப்பை சேகரிக்கும் மையத்தை பராமரித்து பாதுகாக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.