செங்கல்பட்டு: செங்கல்பட்டில், ரயில் பயணிகளுக்கு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நேற்று போலீசார் வழங்கினார்.
செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம், காஞ்சிபுரம், திருமால்பூர் ஆகிய பகுதியில், தண்டவாளத்தை கடக்கும்போது, ரயிலில் அடிபட்டு பலர் இறந்துள்ளனர்.
ரயிலில், பயணிகள் பயணம் செய்யும்போது, திருட்டு சம்பவங்களும் நடைபெறுகின்றன.
இதைத் தவிர்க்க, செங்கல்பட்டு ரயில்வே போலீசார், நேற்று, பயணிகளுக்கு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். பயணிகள், தண்டவாளங்களை கடக்காமல், ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும்; ரயிலில் பயணம் செய்யும்போது, அறிமுகம் இல்லாதவர்கள் கொடுக்கும், தின்பண்டங்களை வாங்க கூடாது உட்பட பல்வேறு அறிவுரைகள் அதில் கூறப்பட்டிருந்தது.