அப்பீல் செய்ய கர்நாடகா முடிவு ; ஜெ., வுக்கு மீண்டும் சிக்கல் வருமா?

Added : ஜூன் 01, 2015 | கருத்துகள் (220)
Share
Advertisement
ஜெ., வுக்கு மீண்டும் சிக்கல் வருகிறது

பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் அப்பீல் செய்ய கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்படும் போது, கர்நாடக ஐகோர்ட்டின் விடுதலை உத்தரவுக்கு தடை வாங்கப்படக் கூடும். இதனால் ஜெ., பதவி குறித்து கேள்வி எழுப்பப்படும்.

ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் அப்பீல் செய்வதா , வேண்டாமா என முடிவு எடுக்க முடியாமல் இருந்த கர்நாடக அரசு இன்று அப்பீல் செய்ய முடிவு எடுத்துள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அரசு வக்கீல் ஆச்சார்யா, அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார் ஆகியோரது யோசனை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பீல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் இந்த அப்பீல் வழக்கில் அரசு தரப்பில் ஆச்சார்யாவும், சந்தேஷ் சவுடாவும் ஆஜராவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆச்சார்யா வரவேற்பு :

அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன் என சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான ஆச்சார்யா கூறியுள்ளார். எனது மற்றும் ரவி வர்மாவின் ஆலோசனையை அரசு ஏற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (220)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.SANKARA RAMAN - chennai,இந்தியா
02-ஜூன்-201500:56:05 IST Report Abuse
R.SANKARA RAMAN மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு உச்ச நீதி மன்றம் எடுத்துக்கொண்டால் மூன்று அல்லது ஐந்து பேர் கொண்ட நீதிபதிகளை கொண்டு விசாரிக்க வேண்டும் . ஏனெனில் ஒரு நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மறுபடியும் மேல் முறையீடு செய்வார்கள். ஆகையால் மேற்கொண்டபடி செய்தல் நீதிமன்றத்தின் நேரமும் வழக்கு செலவும் மிஞ்சும் .
Rate this:
Cancel
ranjith kumar - tuticorin,இந்தியா
01-ஜூன்-201523:45:39 IST Report Abuse
ranjith kumar அரசியலில் தேர்தலில் ஜெயை எதிர்த்து நிற்க ஒரு கட்சிக்கும் துப்பு இல்லை.ஆனால் நீதி மன்றத்தின் மூலமாக அவரை குறுக்கு வழியில் வீழ்த்த அனைவரும் கூட்டணி வியுகம் வகுக்க ரெடி. உங்களுக்கு உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கும். ஜே விடுதலை ஆவார்.அப்போதும் நீங்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் பணம் வாங்கி விட்டார்கள் என்று சொல்வீர்கள் என்று தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். நேர்மை இல்லாத தலைவர்கள் இவர்களுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டியே தீர்வார்கள் .
Rate this:
Cancel
ranjith kumar - tuticorin,இந்தியா
01-ஜூன்-201523:37:00 IST Report Abuse
ranjith kumar குன்காவின் தீர்ப்பில் 665 பக்கத்தில் உள்ள தீர்ப்பில் ஜெவிடமிருந்து கைப்பற்றிய தங்க மதிப்பு 20,548 கிராம் என்று எழுதி ஒரு கிராம் விலை 433 ரூபாய் என்று எழுதி 20,548 x Rs 433 = Rs.8,90,55,032 என்று உள்ளது. அதாவது எட்டு கோடியே தொண்ணூறு லட்ச ரூபாய் என்று எழுதி உள்ளார். நீங்கள் பெருக்கி பாருங்கள். உண்மைகள் தெரியும். ரூ 88,97,284 தான் வரும். அதாவது எண்பத்தி எட்டு லட்சத்தி தொன்னூத்தி ஏழு ஆயிரம்தான் வரும். எட்டு கோடி ரூபாய் அதிகம் எழுதி உள்ளார். ஜெ வாங்கிய கடனை எழுதவில்லை. நூறு ரூபாய் பெறுமான கிரானைட் கல்லுக்கு 5,000 ரூபாய் என்று எழுதி உள்ளார். கல்யாண பந்தல் அமைக்க 5 கோடி ரூபாயா? இவைகள் எல்லாம் ஜெக்கு சாதகமான விசயங்கள். கண்டிப்பாக உச்ச நீதி மன்றத்தில் ஜெ விடுதலை பெறுவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X