கசக்கிறதா கறிவேப்பிலை! | Dinamalar

கசக்கிறதா கறிவேப்பிலை!

Updated : ஜூன் 05, 2015 | Added : ஜூன் 05, 2015 | கருத்துகள் (4)
கசக்கிறதா கறிவேப்பிலை!

நாம் ஆரோக்கியமாக இருக்கவே விரும்புகிறோம். அதற்கென பல்வேறு உணவுப்பழக்கங்களையும், உடற்பயிற்சிகளையும் செய்கிறோம். ஒரு பெரிய நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட இணை உணவினையோ, அல்லது உடலுக்கு போஷாக்கு மற்றும் சக்தி தரக்கூடிய விலை உயர்ந்த உணவுப்பொருட்களையோ அன்றாடம் பயன்படுத்துகிறோம்.ஆப்பிள், ஆரஞ்சு போன்ற கண்களுக்கு இதமான பழங்களில் மட்டுமே சத்துக்கள் நிறைந்துள்ளன எனக்கருதி அவற்றை உண்ண ஆவல் கொள்கிறோம். நாம் தினந்தோறும் நம் உணவில் காணும் பொருள் கறிவேப்பிலையில் எத்தனை வித உயிச் சத்துக்கள் அடங்கியிருக்கின்றன என உங்களுக்கு தொரியுமா...? எத்தனை போர் கறிவேப்பிலையைத் தட்டின் ஓரம் எடுத்துவைக்காமல் உண்டிருப்போம். பழந்தமிழ்ச் சித்தர்கள் கறிவேப்பிலையின் மகத்துவம் உணர்ந்து, அதனை தங்கள் மருத்துவத்தில் பயன்படுத்தி உள்ளனர். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சகலத்துக்கும் நன்மை பயக்கும் கறிவேப்பிலை நமக்கு கிட்டிய வரப்பிரசாதம்.கறிவேப்பிலை வரலாறு பாரசீகத்திலிருந்து வந்த ஆரியர்களின் வருகைக்குப் பின், தென்னகத்தில் திராவிடர்களுக்கு, கறிவேப்பிலை அறிமுகமானது என வரலாற்றிலிருந்து அறிகிறோம். உலகெங்கும் பரவலாக வளரும் தாவரமாக உள்ள கறிவேப்பிலையின் அறிவியல் பெயர் முராயாகோனிகி. curry leaves என ஆங்கிலத்தில் வழங்கப்படும் இப்பெயர் ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது வழக்கில் வந்தது.இந்திய நறுமணப் பொருள் கழகத்தின் தகவல்படி, 100 கிராம் கறிவேப்பிலை சராசரியாக 6 கிராம் புரதம், 1 கிராம் கொழுப்பு, 4 கிராம் தாதுக்கள், 7 கிராம் நார்ச்சத்து, 19 கிராம் கார்போஹைட்ரேட், 830 மில்லி கிராம் கால்சியம், 57 மில்லி கிராம் பாஸ்பரஸ், 0.930 மில்லி கிராம் இரும்புச்சத்தும் கொண்டது. பீட்டா கரோட்டின், தயாமின், ரைபோபிளேவின், தயாசின், போலிக் அமிலம், விட்டமின் ஏ.பி.சி. மற்றும் இ, மாங்கனீசு, குரோமியம் போன்ற தாதுச்சத்துக்களும், கறிவேப்பிலையில் அடக்கம்காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு கறிவேப்பிலையைப் பச்சையாக உண்ணும் போது, அதனால் கிடைக்கக்கூடிய பயன்கள் அளப்பரியவை.
பலதரப்பட்ட ஆன்டி ஆக்ஸிடண்ட் மூலக்கூறுகளைக் கொண்ட கறிவேப்பிலை வயிற்றுப்போக்கு, வாயுக்கோளாறு, செரிமானமின்மை, வயிற்றுப் புண், அல்சர், இன்சுலின் குறைபாடு, கெட்ட கொழுப்புகளைக் கரைத்து சமநிலையில் பராமரித்தல் மற்றும் உடலில் தோன்றும் கட்டிகள் மற்றும் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் ஆற்றலும் இந்த அற்புத மூலிகைக்கு உண்டு.இயற்கை மருத்துவம்நம் தமிழ் இயற்கை மருத்துவத்தில், மனித உள் உறுப்புகளைப் பாதுகாக்கும் மகத்தான பணியினைக் கறிவேப்பிலை செய்கிறது என்பதனை சித்தர்களின் குறிப்புகளிலிருந்தும் அறிகிறோம்.சிறிது கறிவேப்பிலைச்சாறுடன், எலுமிச்சை பழச்சாறு மற்றும் வெல்லம் சேர்த்துக் காலை நேரத்தில் பருகுவது, நம் மனதையும், உடலையும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்வாகவும் வைக்கும் என்பதை இயற்கை மருத்துவம் குறிப்பிடுகிறது. காடுகளில் வாழ்ந்த நம் தமிழ் யோகிகள் இவ்வாறான மூலிகைகள் பற்றிய உண்மைகளை அறிந்து போற்றினர். அவற்றைக் குறிப்புகளாகவும் எழுதி வைத்திருந்தனர். காலப் போக்கில் இவற்றையெல்லாம் நாம் மறந்திருக்கிறோம் என்பதும், போற்றிக் கொண்டாட வேண்டிய இயற்கை மருத்துவத்தை கேப்சூல்களாக மாற்றி, வெளிநாட்டுக் கம்பெனிகள் கொள்ளை லாபம் ஈட்டுவதும் கண்கூடு.பாதுகாக்கும் அரண் பலவிதமான நம் உடல் குறைபாடுகளிலிருந்து கறிவேப்பிலை நம்மைக் காக்கிறது. புற்றுநோய், வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பிரச்னை, உடல் பருமன் பிரச்னைகளுக்கு நிவாரணம் தருகிறது. உடலில் உள்ள குளுகோசின் அளவைக் கட்டுப்படுத்தி, ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. விட்டமின்கள் இருப்பதால் கண்கள், கேசம், தோல் பகுதிகளுக்கு நிறைந்த பலனையும், பலவித தோல் ஒவ்வாமையிலிருந்தும் காக்கும். ரத்த சோகையை விரட்டும் தன்மை கொண்டது.
கறிவேப்பிலையின் கனி, இலை, வேர், பட்டை என அனைத்தும் உயிர் சத்துக்கள் நிறைந்தவை. மூல நோய்க்கான மருத்துவத்தில் இதன் கனி முதன்மையானது.தமிழ் மருத்துவத்தில் சிறப்பான இடம் பெற்ற கறிவேப்பிலையை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். கறிவேப்பிலை துாக்கி எறிந்து விடும் பொருளல்ல. அது நம் உடலைக் காக்கும் அரண். இலை வடிவினில் உடல் நலம் பேணும் இனிய அறம்.- ரோஸ்லின்,ஆசிரியை, மதுரை,99521 77592

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X