பொது செய்தி

தமிழ்நாடு

30 கோவில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம்: *நீர்வளத்துறைக்கு ரூ.3 லட்சம் செலவு

Added : ஜூன் 07, 2015 | கருத்துகள் (10)
Share
Advertisement
30 கோவில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம்: *நீர்வளத்துறைக்கு ரூ.3 லட்சம் செலவு

திருச்சி மண்டல நீர்வளத் துறையினர், 30 கோவில்களில் மழை வேண்டி யாகம் நடத்த, மூன்று லட்சம் ரூபாய் செலவழித்துள்ளனர்.

பொதுப்பணித்துறையின் அங்கமான நீர்வளத்துறைக்கு, சென்னை, திருச்சி, மதுரை, கோவை என நான்கு மண்டலங்கள் உள்ளன. இதில், திருச்சி மண்டலத்தில், தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.டெல்டா மாவட்டங்களின் பாசன தேவையை பூர்த்தி செய்யும் மேட்டூர் அணை, திருச்சி நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு இல்லாததால், இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு, தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், மண்டலத்திற்கு உட்பட்ட அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.

அதில், 'மழை வேண்டி, ஒவ்வொரு உதவி செயற் பொறியாளர் அலுவலகம் மூலம், சிறப்பு யாகம் நடத்த வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தார்.

அவரது உத்தரவை ஏற்று, கடந்த, 3ம் தேதி முதல், திருச்சி மண்டலத்தில் உள்ள, 30 கோவில்களில், மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டுள்ளது.இதற்காக, ஒவ்வொரு உதவி செயற்பொறியாளர் அலுவலகம் மூலமும், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, மூன்று லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டு இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. யாகம் நடத்த உத்தரவிட்ட அதிகாரியிடம் விசாரணை நடத்த, பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

-- நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaswamy Sundaram - Mysooru,இந்தியா
07-ஜூன்-201514:27:06 IST Report Abuse
Ramaswamy Sundaram மழை வேண்டி யாகம் என்பது தமிழகத்தில் புதிது இல்லை.. இது எத்தனை தூரம் உண்மை?
Rate this:
Cancel
Prabhu nath - chennai,இந்தியா
07-ஜூன்-201510:05:29 IST Report Abuse
Prabhu nath இயற்கை பொய்த்தால் இறைவனை வேண்டுவதும் ஒரு வழிதான்.. அரசு என்பது மக்களிலிருந்து விலகி இருப்பது அல்ல.. மக்களின் உணர்வுகளைப் புரிந்துவைத்திருப்பது.. தனி மனிதன் யாகம் செய்யட்டும் என்று எப்படி இருக்க முடியும்? அவனவன் குழந்தைப் பேற்றுக்காகவோ செல்வத்துக்காகவோ செய்யும் யாகம் தனிப்பட்டது.. ஆனால் பொதுமக்கள் நலன் கருதி யாகம் வளர்ப்பதில் என்ன தவறு? இதின் மதச் சார்பின்மை ஏகே வந்தது? இதென்ன காந்தி ஜெயந்தியா சர்வ மதப் பிரார்த்தனை பண்ணி டிராமா காட்ட? யாகம் செய்வதும் அரசின் கடமைதான்.. அதில் தவறில்லை.. வீணாக வம்பைக் கிளப்பி இல்லாத மதக் காழ்ப்புணர்ச்சியைத் தூதும் வேலை தான் எதிர்க் கட்சிகள் செய்வது.. பெரும்பாலானவர்களை ஏமாளிகள் என என்ன வேண்டாம்.. அவர்களின் நடுநிலையால்தான் இன்று இங்கே மத நல்லிணக்கமும் அமைதியும் வாழ்கிறது..
Rate this:
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
07-ஜூன்-201506:48:39 IST Report Abuse
kundalakesi இயற்கையை தன வசப்படுத்த இந்தியாவின் யாகம் மற்றும் ஜபங்கள், ஆப்பிரிக்க வூடூ, தென் அமெரிக்க மாயா-இன்கா ப்ளாக் மாஜிக் பலிகள், சிவப்பிந்திய புகை விடு செய்தி, ருச்சிய கோமாளி நாடகம், மத்தியப் பிரதேச பழங்குடி பெண்டிர் நங்காவாய் நிலம் உழுதல், ம்ம்ம் எவ்வளவு தாஜாக்கள் இயற்கையிடம். அப்போவெல்லாம் நல்லார் ஒருவர் கிராமத்தில் விராட பர்வம் கதை படித்த உடன் மழை அடித்து கொட்டியதை பலமுறை கண்டிருக்கிறேன். நானும் படித்து மழை பெய்தது .( பனங்காயும் , அதம் மேல் அமர்ந்த காக்கையும் போல். )
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X