பாலியல் பலாத்காரம் ஒரு 'ஸ்டன்ட்': கோவா அமைச்சர் மீண்டும் ஆணவம்

Added : ஜூன் 07, 2015 | கருத்துகள் (5)
Share
Advertisement
பாலியல் பலாத்காரம் ஒரு 'ஸ்டன்ட்': கோவா அமைச்சர் மீண்டும் ஆணவம்

பனாஜி : கோவாவில் இரு பெண்கள் மீதான, பாலியல் பலாத்காரத்தை, 'ஸ்டன்ட்' என, வர்ணித்து, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அம்மாநில சுற்றுலா துறை அமைச்சர் திலீப் பருலேகர்.

டில்லியில் இருந்து கோவாவை சுற்றிப் பார்க்க வந்த இரு பெண்களை, போலீஸ் உடையில் வந்த ஐந்து பேர், பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பான புகாரில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.


அப்பாவிகள்:

இதுகுறித்து, திலீப் பருலேகர் பேசும்போது, 'கைதானவர்கள் சிறுவர்கள், அப்பாவிகள். அவர்களின் குற்றப் பின்னணி சிறிய அளவில் தான் உள்ளது. இது போல், இனி நிகழாது' என்றார். மேலும், சுற்றுலா தலங்களில், இது போன்ற சில சம்பவங்கள் நடப்பது சகஜமே என்றும் கூறினார். அவரது இந்தப் பேச்சு, பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், உள்ளுர் 'கேபிள் டிவி'க்கு பேட்டி அளித்து, மீண்டும் வம்பை விலைக்கு வாங்கியுள்ளார்.

பேட்டியில் அவர் கூறியதாவது:பாலியல் பலாத்கார விவகாரத்தில், முழு உண்மையும் இன்னும் வெளிவரவில்லை. குற்றவாளிகளும், பாதிக்கப்பட்டவர்களும், கோவாவைச் சேர்ந்தவர்கள் அல்ல; அவர்களுக்குள் என்ன தொடர்பு உள்ளது என்பது தெரிய வில்லை. அல்லது இது, 'ஸ்டண்ட்'டுக்காக (விளம்பரத்திற்காக) செய்யப்பட்டதா என்பதும் தெரியவில்லை.


எதிர்ப்பு:

ஆனால், சம்பவத்தில் கோவா சிறுவர்களுக்கு தொடர்பில்லை. அவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.சுற்றுலா துறை அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சிற்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பெண்ணுரிமை இயக்கங்கள், அமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கப் போவதாக தெரிவித்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
abdulrahim - dammam ,சவுதி அரேபியா
07-ஜூன்-201511:36:00 IST Report Abuse
abdulrahim கவலையே வேண்டாம் மத்திய மந்திரி பதவி உறுதி.... சர்ச்சை நபர்களுக்கு தான் பா.ஜா.க வில் மவுசு அதிகம்..
Rate this:
Cancel
Chennai Tamilan - Chennai,இந்தியா
07-ஜூன்-201507:08:55 IST Report Abuse
Chennai Tamilan இவரெல்லாம் ஒரு அமைச்சரா...
Rate this:
Cancel
Kankatharan - newyork,யூ.எஸ்.ஏ
07-ஜூன்-201501:47:05 IST Report Abuse
Kankatharan  மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் எல்லாம் பாக்கிஸ்தானுக்கு போங்க எங்கிறார் ஒரு அமைச்சர், மோடிக்கு வோட் போடாதவர்கள் வம்பில பிறந்தவர்கள் எங்கிறார் ஒரு அமைச்சர், கோட்சேக்கு கோவில் கட்டணும் எங்கிறார் ஒரு தலையாரி, டில்லி கல்லூரி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டதற்கு அந்த மாண்வியின் உடைதான் காரணம் எங்கிறார் ஒருவர் மோடியை விமர்சித்த சென்னை ஐ.ஐ.டி., அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்படுகிறது. இன்று இந்த அமைச்சர் கற்பழிப்பு ஸ்டன்ட் எங்கிறாரு பாரதமாதா உறக்கத்திலிருந்து விழிக்கவில்லை.
Rate this:
RENU - Chennai,இந்தியா
07-ஜூன்-201504:43:34 IST Report Abuse
RENUஅதனால தான் என்னமோ நாய் வேஷம் போட்டுக்கொண்டு அமெரிக்காவில் இருக்கிறீர்களா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X