காந்தி கணக்குல ரூ.75 லட்சம்!| Dinamalar

'காந்தி கணக்குல' ரூ.75 லட்சம்!

Added : ஜூன் 08, 2015
Share
'எங்கேயும்... எப்போதும்... சங்கீதம்... சந்தோஷம்...ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்கட்டழகுப் பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்குதொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லைரா ரா ரா ரிரீ...ஓ...'...ஜன்னலோர இருக்கையில், தலைசாய்ந்து அயர்ந்திருக்க, தலைமுடிகளில் ஒன்றிரண்டு தவியாய் தவிப்பதுபோல் காற்றிலாடி முகத்தை வருட, மெல்லிய விரல்களால் விலக்கிவிட்டவாறு,
'காந்தி கணக்குல' ரூ.75 லட்சம்!

'எங்கேயும்... எப்போதும்... சங்கீதம்... சந்தோஷம்...ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்கட்டழகுப் பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்குதொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லைரா ரா ரா ரிரீ...ஓ...'...ஜன்னலோர இருக்கையில், தலைசாய்ந்து அயர்ந்திருக்க, தலைமுடிகளில் ஒன்றிரண்டு தவியாய் தவிப்பதுபோல் காற்றிலாடி முகத்தை வருட, மெல்லிய விரல்களால் விலக்கிவிட்டவாறு, கமலின் மேடை ராகத்தில் கரைந்து கிடந்தாள் சித்ரா.'அக்கா... அக்கா... பஸ், மலுமிச்சம்பட்டிய தாண்டிருச்சுக்கா...' உசுப்பினாள் மித்ரா.திடுக்கிட்டு எழுந்து, முகத்தில் படர்ந்திருந்த துாக்கத்தை, கர்ச்சீப்பால் துடைத்த சித்ரா...'பஸ்சுல துாங்கறதே ஒருவித சுகம்தாண்டி. பழநி முருகன, மனம்குளிர தரிசனம் பண்ணுணத நெனச்சு அப்படியே கண் அசந்துட்டேன்' என்றவாறு, மேலாடையை சரிசெய்தபடி, ஜன்னலுக்கு வெளியே பார்வையை ஓடவிட்டாள்.கற்பகம் கல்லுாரி எதிரே, எல்.அண்ட்.டி., பைபாஸ் சாலை சந்திப்பில் சிக்னலுக்காக பஸ் நின்றது. அங்கு, சாலையோரத்தில் ஓரங்கட்டி நிறுத்தப்பட்டிருந்த ஒயிட் கலர் ஆம்னி பஸ்சுக்குள், போலீசார் சிலர் போவதும், வருவதுமாக இருந்ததை பார்த்த சித்ரா கேட்டாள்...'என்னடி மித்து அது, அங்க என்ன நடக்குது, ஏதாவது ஆக்சிடன்டா?''அதுவாக்கா... அதான் மொபைல் கோர்ட்' என்ற மித்ரா...'அக்கா, குடிபோதையில வாகனம் ஓட்டுறவங்க, ஆர்சி., புக் இல்லாதவங்க, டிராபிக் ரூல்ஸ மீர்றவங்கள ஸ்பாட்டிலேயே போலீஸ்காரங்க பிடிச்சு, கையோட மொபைல் கோர்ட்ல ஆஜர்படுத்துவாங்க... பஸ்சுக்குள்ளாற கோர்ட்ல இருக்கும் மாஜிஸ்திரேட், விதிமீறிய நபருக்கு அபராதம் விதிப்பார். பணத்த கட்டிட்டு போயிட வேண்டியது...' என்றாள்.'அதற்குத்தான் ரெகுலர் கோர்ட் இருக்கே... இதென்ன மொபைல்கோர்ட்?' என,குறுக்கிட்டாள் சித்ரா.'ரெகுலர் கோர்ட்ல வழக்குகள் தேங்காம இருக்கத்தான், இந்த சிஸ்டம்க்கா... இப்ப, பிரச்னை என்னன்னா... நம்ம போலீஸ்காரங்க, வழக்கம்போல, இதிலேயும் 'கைவரிசை' காட்டுறாங்களாம். மொபைல் கோர்ட் வாகனம் முன்னாடி பிடிபடுற ஆசாமிகள்ல கொஞ்சம் பேர்மீது கேஸ் புக் பண்ணாம, 'கைமேல் பலனா' வாங்கிட்டு, விட்டுர்றாங்கன்னு, மேலிடத்துக்கு ஏகப்பட்ட புகார் போயிருக்காம்; யார், யார் சிக்கப்போறாங்களோ!' என்ற மித்ரா, திடீரென இடதுபுறம் பார்வையைத் திருப்பி, போகிற போக்கில், 'ஈச்சனாரி விநாயகரை' வினாடி தரிசனம் செய்து முடித்தாள் மித்ரா.கார்ப்பரேஷன் ஆபீசர் வாகனம் ஒன்று, சைரனுடன் கடந்து செல்ல, திடீர் ஞாபகம் வந்தவளாய், 'கார்ப்பரேஷன் மேட்டர் ஒண்ணு சொல்றேன்' என்ற சித்ரா,'கார்ப்பரேஷன் டெபுடி கமிஷனர் மேடம், கோயம்புத்துாருக்கு டிரான்ஸ்பராகி வந்ததும், எஸ்.இ., குவார்ட்டஸ்ல அவருக்கு வீடு ஒதுக்குனாங்க. அங்கு வசதி குறைவா இருக்குன்னு சொல்லி, கார்ப்பரேஷன் பணம் 40 லட்சம் ரூபாயில, அந்த வீட்டை புதுப்பிச்சாங்க...''வீட்ல வசதியில்லாட்டி ஆல்ட்டர் பண்ணா என்ன தப்பாம்க்கா? மக்களுக்காக ராவு பகலா வேல பார்க்குற அதிகாரிங்களுக்கு, சில வசதிகள செஞ்சு தர்றதுதானே நியாயம். இதேப் போயி பெரிசா பேசுறீங்களே!' என்றாள் மித்ரா.'புரியாம பேசாத மித்து, கொஞ்சம் பொறு! 40 லட்சம் ரூபாயில, எஸ்.இ., குவாட்டர்ஸ் வீட்ட ஆல்ட்டர் பண்ணுன பின்னாடி, அந்த மேடத்துக்கு வேற டி.சி., குவாட்டர்ஸ்ச ஒதுக்கினாங்க. அதுக்கும், கார்ப்பரேஷன் பணம் 35 லட்சம் ரூபாய எடுத்து செலவழிச்சுருக்காங்க. இதற்குத்தான், கார்ப்பரேஷனுக்குள்ள இப்ப புகைச்சல் கிளம்பிருக்காம்...' என்ற சித்ரா, 'காந்தி' போல எளிமையா வாழ்ந்தாலே 'மதி', எதுக்கு தேவையில்லாத ஆடம்பரமெல்லாம்?' என்றாள் சித்ரா.'அக்கா, இன்னொரு விஷயம் கேள்விப்பட்டியா?' என்ற மித்ரா...'சமீபத்துல நடந்த கார்ப்பரேஷன் கவுன்சில் மீட்டிங்கில, டவுன் பிளானிங் சேர்மன் செந்தில்குமாரு, ரொம்பவே ஆவேசமாகிட்டாரு. 'டவுன் பிளானிங் கூட்டத்த நடத்துறதும் இல்ல... அதிகாரிங்க என்ன மதிக்கிறதுமில்ல...'ன்னு ஓபன் மீட்டிங்குல, எல்லா கவுன்சிலர்க முன்னாடியும் ஒரு பிடி பிடிச்சுட்டாருக்கா...'அப்புறம் என்ன நடந்துச்சாம் மித்து?' ஆர்வத்துடன் கேட்டாள் சித்ரா.அட என்னடா! நம்ம கட்சிக்காரனே, நமக்கு இப்படி வேட்டு போடுறானேன்னு அதிர்ச்சியடைஞ்ச மேயரு, 'என்னப்பா, இதெல்லாம் ஓபன் மீட்டிங்ல பேசற சப்ஜெக்டா? பிறகு நாம பேசிக்குவோம்னு' சமாதானம் செஞ்சிருக்காரு. மேயரு அப்செட் ஆனத பார்த்த பிறகும் ஆதங்கம் தீராத செந்திலு, இதுக்கொரு முடிவு கட்டாம விடமாட்டேன்னு, தனது நண்பர்களிடம் புலம்பித்தீர்த்துட்டாராம்....இருவரும் பேசி முடிக்க, உக்கடம் பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்து நின்றது பஸ்; இறங்கி நடந்தனர். பெட்டிக்கடை முன் தொங்கிய,'வால்போஸ்டரில்' 'திருச்சியில் சிக்கிய கடத்தல் தங்கம் மாயம்; விசாரணையில் திருப்பம்' என்றிருந்த தலைப்பை பார்த்த சித்ரா...'கோயம்புத்துார் ஏர்போர்ட்ல கொஞ்ச நாளைக்கு முன்னாடி, அப்பப்ப கடத்தல் தங்கம் கிலோ கணக்குல பிடிபட்டுகிட்டே இருந்தது. ஷார்ஜா, சிங்கப்பூர்ல இருந்து தங்க கடத்தி வந்த ஆசாமிகள அரெஸ்ட் பண்ணிணாங்க. இப்பெல்லாம், யாரும் பிடிபடறது இல்ல... கடத்தல்காரங்க, தொழிலயே வுட்டுட்டு மனம் திருந்தீட்டாங்களா; இல்லை, கஸ்டம்ஸ்காரங்க, கடத்தல்காரங்கள கண்டுக்காம 'திரும்பீட்டங்களான்னு' டவுட்டா இருக்கு' என்றாள்.இடைமறித்த மித்ரா...'நீ ஒண்ணுக்கா, அப்படியே அவங்க கடத்தல்காரங்கள பிடிச்சாலும், எத்தன கிலோ தங்கம் பிடிபட்டுச்சுன்னு, ஒப்பனா பிரஸ்காரங்ககிட்ட சொல்றதில்ல. கடத்துன ஆட்கள போட்டோ எடுக்கவும் வுடுறதில்ல. அவங்களே பிடிச்சு, பல மணி நேரம் தீவிரமா 'ஆலோசிச்சு', அதன்பிறகே, பிடிபட்ட தங்கத்தோட கணக்க காட்டுறாங்க. இதுல என்ன மூடுமந்திரம் வேண்டிக்கிடக்குணுதான் தெரியல...' என்றாள்.'எதுவும் வெளிப்படையா இருந்துட்டா, பிரச்னையில்ல மித்து' என்ற சித்ரா,'நீயே பாரேன், ஒரு நாளைக்கு, திருச்சி கஸ்டம்ஸ் அதிகாரிங்க சி.பி.ஐ., கிட்ட வசமா மாட்டினா மாதிரி, இங்கேயும் சிலர் மாட்டினாத்தான், 'பூனைக்குட்டி' வெளியேவரும்' என்றாள்.இருவரும் பேசிக்கொண்டிருக்க, திடீரென பரபரப்பான சித்ரா, 'நா, வாரேன்டி... பஸ் வந்துருச்சு, நான் சிங்காநல்லுார் போகோணும்' என்றவாறு, 52ம் நம்பர் பஸ்சில் தாவி ஏறி, முன் வரிசையில் சீட் பிடித்தாள். பதிலுக்கு டாடா காட்டிய மித்ரா, பழக்கடை நோக்கி நகர்ந்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X