பொக்கிஷம் பகுதியில்...நீலகிரி மாவட்டத்தில் பெருங்கற்கால சிற்பங்கள்...

Updated : ஜூன் 08, 2015 | Added : ஜூன் 08, 2015 | |
Advertisement
ஊட்டியில் கிடைத்த பெருங்கற்கால சுடுமண் சிற்பங்கள்பத்திரிகையாளர்கள் என்பவர்கள் தம்முன் நடப்பதை பதிவு செய்பவர்கள் என்று மட்டும்தான் பலருக்கும் தெரியும் ஆனால் சில பத்திரிகையாளர்கள் அதையும் தாண்டிதங்கள் மண்ணின் வளமையையும் மக்களின் பெருமையையும் உலகிற்கு பறைசாற்றுபவர்களாகவும் இருக்கின்றனர்.அவர்களின் ஊட்டியில் உள்ள நிருபர் பிரதீபனும் புகைப்படக்கலைஞர் ரகுவும்
பொக்கிஷம் பகுதியில்...நீலகிரி மாவட்டத்தில் பெருங்கற்கால சிற்பங்கள்...ஊட்டியில் கிடைத்த பெருங்கற்கால சுடுமண் சிற்பங்கள்

பத்திரிகையாளர்கள் என்பவர்கள் தம்முன் நடப்பதை பதிவு செய்பவர்கள் என்று மட்டும்தான் பலருக்கும் தெரியும் ஆனால் சில பத்திரிகையாளர்கள் அதையும் தாண்டிதங்கள் மண்ணின் வளமையையும் மக்களின் பெருமையையும் உலகிற்கு பறைசாற்றுபவர்களாகவும் இருக்கின்றனர்.அவர்களின் ஊட்டியில் உள்ள நிருபர் பிரதீபனும் புகைப்படக்கலைஞர் ரகுவும் முக்கியமானவர்கள்.

நீலகரி மாவட்டதின் பல்றுே சிறப்புகளை தேடி தேடி கண்டுபிடித்து செய்தியாக படமாக வெளியிட்டு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போதைய அவர்களது பதிவுதான் பெருங்கற்கால சுடுமண் சிற்பங்கள்.இதுகுறித்து, தொட்டபாலி ஆவின் நகரில் வசிக்கும், தொல்லியல் ஆர்வலர் ரவிச்சந்திரனுடன் சம்பந்தபட்ட இடங்களுக்கு சென்று சேகரித்து வெளியிட்ட விஷயங்கள் மிகவும் சுவராசியானவையாகும்.

ஊட்டி அருகே, நீர்காய்ச்சி மந்தில், 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பெருங்கற்கால மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும், சுடு மண் சிற்பங்கள் கிடைத்துள்ளன.

முந்தைய வரலாற்று காலம் என்பது, பழங்கற்காலம்; புதிய கற்காலம்; இடைகற்காலம்; பெருங்கற்காலம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இதில், இடைகற்காலம் மற்றும் புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறைகளுக்கு சான்றாக விளங்குவது, பாறை ஓவியங்கள் மற்றும் வேட்டை கருவிகள் ஆகும்.

அதேப்போல, பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியலில், புதைகுழி கலாச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனை, கடந்த, 1823ம் ஆண்டு அப்போதைய மலபார் பகுதிகளில் ( கேரள மாநிலம் ), ஆய்வு செய்த பேபிங்டன் என்ற ஆங்கிலேய தொல்லியல் ஆய்வாளர் வெளி உலகுக்கு கொண்டு வந்தார். இவர், பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்களின் கலாச்சாரம், வாழ்வியல் முறைகளை, பல்வேறு ஆதாரங்களுடன் பதிவு செய்தார். அதன்பின்பு தான், நம் நாட்டின் தென்மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும், தொல்லியல் ஆய்வாளர்கள் பலர் பெருங்கற்காலம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதில், தமிழகத்தில், ஈரோடு கொடுமணல், திருநெல்வேலி ஆதிச்சநல்லுார், நீலகிரி தெங்குமரஹாடா, மசினகுடி, கோத்தகிரி, ஏக்குனி, நீர்காய்ச்சிமந்து ஆகிய பகுதிகள், பல்வேறு வரலாற்று பதிவுகளை உள்ளடக்கியதாக உள்ளன.

நீலகிரியில், 1873ம் ஆண்டு அப்போதைய கமிஷனராக இருந்த பிரீக்ஸ் என்ற ஆங்கிலேயர், முதன்முதலாக, பெருங்கற்கால புதை குழிகளில் இருந்த சுடுமண் சிற்பங்கள் மற்றும் கலை பொருட்களை கண்டறிந்தார். அவரால் சேகரிக்கப்பட்ட, புராதாண கலைப்பொருட்கள், சென்னை அரசு அருங்காட்சியத்திலும், லண்டன், பெர்லின் போன்ற பிரபலமான அருங்காட்சியகங்களிலும், இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பெருங்கற்கால புதை குழிகளில், கிணறு வடிவ கல்லறை, 'டால்மன்' கல்லறை, குத்துக்கல் கல்லறை, கல்வட்ட கல்லறை உட்பட நான்கு வகைகள் உண்டு. இதில், கிணறு வடிவ கல்லறைகள், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் காணப்படுகின்றன.

இம்மாவட்டத்தில், ஏக்குணி, கோத்தகிரி, நீர்காய்ச்சிமந்து, ஏழுகோட்டை போன்ற பகுதிகளில், தொல்லியல் துறை ஆய்வாளர்களால், இத்தகைய புதைக்குழிகள் கண்டறியப்பட்டு பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஊட்டி அருகே உள்ள நீர்காய்ச்சி மந்து பகுதியில், தொல்லியல் ஆர்வலர் ரவிச்சந்தரன் மற்றும் குழுவினரால், உடைந்த நிலையில் சிதறி கிடந்த சுடுமண் சிற்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அப்போது, அப்பகுதியில் உள்ள புதைக்குழி, கிணறு வடிவ கல்லறை போன்றவை 2000 ஆண்டுகளை கடந்தும், பாதுகாப்புடன் இருந்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிணறு வடிவ கல்லறையில் கிடைக்கப்பெற்ற, பெருங்கற்கால மக்களின், சுடுமண் சிற்பங்களில், எருமை, யானை, ஆடு, சிறிய சட்டிகள் ஆகியவை இருந்தன.

பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் இறந்து விட்டால், அவர்களின் சடலத்தை புதைக்கும்போது, அதனுடன், நம்முடன் வாழும் கால்நடைகள் உட்பட பல்வேறு பொருட்கள், சுடுமண் சிற்பங்களை, போட்டு புதைத்து மரியாதை செலுத்துவதை அக்கால மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால், பெரும்பாலான புதை குழிகளில் இத்தகைய சிற்பங்கள் காணப்படுகின்றன.

கடந்த,1983, 84, 88, 91 ஆகிய ஆண்டுகளில், அமெரிக்காவில் உள்ள, சிக்காகோ மெக்சிகன் பல்கலைக் கழக பேராசிரியர் ஆலன் சாகிரல் என்பவர், இப்பகுதிக்கு வந்து, பெருங்கற்கால புதை குழிகள் பற்றி ஆய்வு செய்து, பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவை மாணவர்களுக்கான பாடங்களாகவும் உள்ளன.மேலும், இந்த கலாச்சார பரிமாற்றங்கள் அக்காலத்தில், நீலகிரியில் உள்ள மாயார் பள்ளத்தாக்கு; கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதிகளில் இருந்து தான், இந்த கலாச்சாரம் இங்கு பரவியுள்ளது என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்தது. இத்தகைய தொன்மை வாய்ந்த வரலாற்று பொக்கிஷங்களை பாதுக்க வேண்டியது, மலை மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி அனைவரின் கடமையாகும்.

இது தொடர்பான ஆர்வம் கொண்டவர்களும் இந்த கிணறுவடிவ கல்லறை மற்றும் சுடுமண் சிறபங்களை காணவிரும்புபவர்களும் தொடர்பு கொள்ளவேண்டிய எண்:9894009254.

-எல்.முருகராஜ்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X