பழ வியாபாரியின் பரந்த மனம்: மருத்துவ கல்லூரிக்கு உடல் தானம்

Updated : ஜூன் 10, 2015 | Added : ஜூன் 09, 2015 | கருத்துகள் (1)
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழ வியாபாரியின் விருப்பப்படி, அவரது உடல், மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, தானமாக வழங்கப்பட்டது. ராமநாதபுரம் அருகே, முதுனாள் சாலை, மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன், 59. தன் இறப்புக்குப் பின், தன் உடலை, மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் ஆராய்ச்சிக்கு தானம் கொடுப்பதாக, கடந்த, 2013ல் பதிவு செய்தார். கடந்த ஒரு
 பழ வியாபாரியின் பரந்த மனம்: மருத்துவ கல்லூரிக்கு உடல் தானம்

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழ வியாபாரியின் விருப்பப்படி, அவரது உடல், மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, தானமாக வழங்கப்பட்டது. ராமநாதபுரம் அருகே, முதுனாள் சாலை, மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன், 59. தன் இறப்புக்குப் பின், தன் உடலை, மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் ஆராய்ச்சிக்கு தானம் கொடுப்பதாக, கடந்த, 2013ல் பதிவு செய்தார்.


கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:00 மணிக்கு இறந்தார். அவரது விருப்பப்படி, அவரது உடலை தானம் செய்ய, உறவினர்கள், மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். நேற்று காலை, சந்திரசேகரன் உடலுக்கு, மனைவி நாகேஸ்வரி, மகன் மணிமாறன், மகள் வேணி மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். பின், பகல், 1:45 மணிக்கு, சந்திரசேகரனின் உடல், மதுரைக்கு அனுப்பப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. SIV GOWRI - Chennai,இந்தியா
10-ஜூன்-201510:08:45 IST Report Abuse
P. SIV GOWRI நல்ல மனது கொண்ட இவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்தனை செய்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X