பொது செய்தி

தமிழ்நாடு

சதுரகிரிமலையில் பாறைகள் தகர்ப்பு: வனவிலங்குகளுக்கு அபாயம்

Updated : ஜூன் 10, 2015 | Added : ஜூன் 09, 2015 | கருத்துகள் (5)
Advertisement
 சதுரகிரிமலையில் பாறைகள் தகர்ப்பு: வனவிலங்குகளுக்கு அபாயம்

விருதுநகர்:சதுரகிரி மலைக்கோவிலில் கழிப்பறை கட்ட, வனப்பகுதியில் விதிகளுக்கு மாறாக, பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுவதால், வனவிலங்குகளுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. விருதுநகர், மதுரை மாவட்ட எல்லையில் உள்ளது சதுரகிரி மலை. இது, சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்திற்குட்பட்ட, அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. யானை, காட்டு மாடு, மான் உட்பட விலங்குகள் உள்ளன.இங்கு, சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோவில்கள், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை, ஆடி, தை அமாவாசை நாட்களில் மட்டும், இங்கு பக்தர்கள் வந்து வழிபட்டு சென்றனர்.
தற்போது அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சனி, ஞாயிற்று கிழமைகளிலும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு கழிப்பறை, தங்குமிடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், குளிக்கும் இடம் உட்பட வசதிகளை, 4.30 கோடி ரூபாயில் உருவாக்க, அறநிலையத் துறை முடிவு செய்து பணிகளை துவக்கிஉள்ளது.இங்கு, வி.ஐ.பி., தங்கும் விடுதி உட்பட கட்டுமானப் பணிகள், இரு வாரங்களுக்கு முன் துவங்கியது.
தற்போது, சந்தனமகாலிங்கம் கோவில் பகுதியில் கட்டடப்பணி நடந்து வருகிறது. தாணிப்பாறையிலிருந்து, 9 கி.மீ., துாரம் மணல், ஜல்லி, கற்களை தலைச்சுமையாக கொண்டு சென்று, கட்டடங் கள் கட்ட வேண்டும்.ஆனால், சதுரகிரி வனப்பகுதியில் உள்ள சிறிய பாறைகளை வெடி வைத்து தகர்த்து, கற்களை எடுத்து கட்டுமானத்துக்கு பயன்படுத்துகின்றனர். வனப்பகுதி ஆற்றிலிருந்து மணல் எடுத்து கட்டடப் பணி நடக்கிறது.வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால், வன விலங்குகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. வனப்பகுதியையும், அங்குள்ள விலங்குகளையும் பாதிக்காமல் விதிமுறைகளுக்குட்பட்டு கட்டடங்கள் கட்ட, அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagai Nagarajan Swaminathan - Chennai,இந்தியா
10-ஜூன்-201507:11:27 IST Report Abuse
Nagai Nagarajan Swaminathan இந்த மீடியாக்களுக்கு எப்படியாவது அரசை குறை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டுமா? சென்ற மாதம் சதுரகிரி மலையில் வெள்ளம் ஏற்பட்டு சிலர் அதில் அடித்து செல்லப்பட்ட போது, மலையில் பக்தர்களுக்கு போக்கு வரத்து வசதி, தாங்கும் வசதி, கழிப்பறை வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்று பெரியதாக புகார் தெரிவித்தன. அடிப்படை வசதிகள் இல்லாமல் வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து அரசு 4.30 கோடி ரூபாயில்,கழிப்பறை, தங்குமிடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், குளிக்கும் இடம் உட்பட வசதிகளை உருவாக்க அறநிலையத் துறை முடிவு செய்து பணிகளை துவக்கிஉள்ளது. இப்போது வனவிலங்குகளுக்கு அபாயம் என்று கூக்குரலிட்டால் அரசு என்னதான் செய்யுமோ?
Rate this:
Share this comment
Ramanathan Pillai - Tirunelveli,இந்தியா
10-ஜூன்-201522:47:08 IST Report Abuse
Ramanathan Pillaiஏற்கனவே பாதுகாக்கப்பட்ட வன விலங்கான சாம்பல் அணில்களின் சரணாலயமான பகுதியில் விதிகளுக்கு உட்பட்டு கட்டிட வேலைகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுவதில் நியாயம் இருக்கிறது. அரசாங்கம் விதிகளை மீறினால் அரசு எதற்கு?...
Rate this:
Share this comment
Cancel
annaidhesam - karur,இந்தியா
10-ஜூன்-201506:51:05 IST Report Abuse
annaidhesam நாசமாய் போன மனிதார்கள் நம்மள வாழ விட மாட்டேன்கிறாங்க எனும் விலங்குகள் ..எந்த சாமியிடம் முறையிடும்?
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
10-ஜூன்-201502:35:13 IST Report Abuse
மதுரை விருமாண்டி காட்டு வெள்ளம் எதுக்கு வருது, இவனுங்களை அடிச்சிட்டு போகத் தான்.. அது சரி, அறநிலையத் துறை எதுக்கு வி.ஐ.பி (Velai Illaa Paradhesi) களுக்காக இந்த அழிச்சாட்டியம் பண்ணுது.. மொட்டையடிக்கிறவன் கீழே அடிவாரத்திலே மொட்டை அடிக்கட்டுமே.. இப்போ மொட்டையடிக்க வசதிம்பான், அப்புறம் மொட்டையடிச்சிட்டு குளிக்க பாத்ரூம், துணி மாத்த ரூம்,, குளிச்சதும் சாப்பிட ஹோட்டலு, சாணி போட கக்கூசுன்னு, இப்படி அங்கெ மரம் செடி எல்லாம் அழிச்சு கட்டடம் கட்டுவானுங்க.. தண்ணி எங்கே இருந்து வரும், சாக்கடையை எங்கே விடுவானுங்க? அப்படியே மலையிலே நாலு அடி தள்ளி விட்டு நாற அடிப்பானுங்க.. ஐயா, நான் இப்படி குதர்க்கமாத் தான் சொல்றேன்னு நினைக்காதீங்க.. மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க (டி.எம்.எஸ் பாட்டு கிடையாது)..அங்கே மலையிலே கோவில் வளாகத்திலே, இடது பக்கம் 20 படி இறங்கி சித்தர் கோவில் போங்க.. மூச்சு முட்டி செத்துருவீங்க..எல்லாக் கோவில்களிலும் இது தான் நிலைமை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X