வருமான வரி விலக்கு பெறும் அறக்கட்டளைகளுக்கு கிடுக்கிப்பிடி: கறுப்பு ஆடுகளை களையெடுக்க நிதித்துறை உத்தரவு

Updated : ஜூன் 11, 2015 | Added : ஜூன் 09, 2015 | கருத்துகள் (23) | |
Advertisement
புதுடில்லி : 'அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில், மத்திய அரசிடம் இருந்து வருமான வரி விலக்கு சலுகை பெற்று, அந்தப் பணத்தை முறைகேடான வழிகளில் செலவழிக்கும் அமைப்புகளை கண்டுபிடித்து, அவற்றின் செயல்பாடுகளை முடக்க வேண்டும்' என, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு, மத்திய நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.ஏழை, எளிய மக்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்ற உதவிகள்
வருமான வரி விலக்கு பெறும் அறக்கட்டளைகளுக்கு கிடுக்கிப்பிடி: கறுப்பு ஆடுகளை களையெடுக்க நிதித்துறை உத்தரவு

புதுடில்லி : 'அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில், மத்திய அரசிடம் இருந்து வருமான வரி விலக்கு சலுகை பெற்று, அந்தப் பணத்தை முறைகேடான வழிகளில் செலவழிக்கும் அமைப்புகளை கண்டுபிடித்து, அவற்றின் செயல்பாடுகளை முடக்க வேண்டும்' என, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு, மத்திய நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஏழை, எளிய மக்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்ற உதவிகள் வழங்குவதாகவும்,
ஆதரவற்ற குழந்தைகள், முதியோருக்கு அடைக்கலம் அளிப்பதாகவும் கூறி, தொண்டு நிறுவனங்களை துவக்கும் அமைப்புகள், எதற்காக அனுமதி பெற்றனவோ அந்தப் பாதையை மறந்து, லாபநோக்கில் செயல்படுவதாக, மத்திய அரசுக்கு புகார்கள் சென்றுள்ளன.அதுபோல, பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்குவதற்கான அறக்கட்டளைகள் துவக்க, அரசிடம் அனுமதி பெற்று, அதற்காக வருமான வரி விலக்கு சலுகைகள் பெற்று, பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகள் வாங்கி, தங்களை வளப்படுத்திக் கொள்ளும் சில அமைப்புகள், வியாபார நிறுவனங்கள் போல மாறிவிட்டதாகவும், மத்திய அரசுக்கு தகவல்கள் சென்றுள்ளன.

ஏற்கனவே, அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்துள்ள மத்திய அரசு, அவற்றில் சிலவற்றின், வெளிநாட்டு நிதி ஆதாரங்களை முடக்கியுள்ளது. அரசின் தொழில் திட்டங்களுக்கு எதிராகவும், சமூக நல அறிவிப்புகளுக்கு எதிராகவும் செயல்படுவதையே தங்கள் வாடிக்கையாக, சில அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் கொண்டுள்ளதால், அவற்றின் மீது இரும்புக்கரத்தை செலுத்தியுள்ள மத்திய அரசு, இப்போது அறக்கட்டளைகள் மீதும் அதிரடி பார்வையை திருப்பியுள்ளது.

மத்திய நிதித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், நேரடி வரிகள் வாரியம் தயாரித்துள்ள, வரித்துறை அதிகாரிகளுக்கான அறிவுரை அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
*வருமான வரி விலக்கு பெறும் கறுப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டியது, அதிகாரிகளின் கடமை. அது, எளிதானதல்ல. வெள்ளையான தோற்றத்தை கொண்டுள்ள அந்த ஆடுகள், அசந்தால், வருமான வரித்துறையினரின் முகத்தையே மேய்ந்து விடும்.
*அத்தகைய முறைகேடான அமைப்புகள், எந்தெந்த விதங்களில், தொண்டு நிறுவன நன்கொடைகளை தவறாக பயன்படுத்துகின்றன என்பதை துல்லியமாக ஆராய்ந்து, அவற்றை சட்ட நடவடிக்கையில் சிக்க வைக்க வேண்டும்.
*தொண்டு நிறுவனங்கள், தொண்டுகள் புரிவதையே கடமையாக கொண்டிருக்க வேண்டும். அத்தகைய செயல்பாடு இல்லாத அமைப்புகள், தொடர்ந்து வரிச்சலுகை பெறவோ, பெற்ற நன்கொடையை தவறாக பயன்படுத்தவோ அனுமதிக்கக் கூடாது.
*அதே நேரத்தில், சட்டத்திற்கு உட்பட்டு, முறையான விதத்தில் செயல்படும் அறக்கட்டளைகளை ஊக்கப்படுத்துவதும், வரித்துறை அதிகாரிகளின் முக்கிய கடமை.
*அத்தகைய அமைப்புகளுக்கு, சட்டத்திற்கு உட்பட்டு, அனைத்து சலுகைகளும், உதவிகளும் வழங்கப்பட வேண்டும். ஆனால், எந்த காரணத்தை கொண்டும், முறைகேடான நிறுவனங்களின் மோசடியை அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேபாள பூகம்பம்:

அண்டை நாடான நேபாளத்தில், சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு, பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்ட போது, அந்நாட்டிற்கு உதவி செய்ய
முன்வந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார்களுக்கு, வருமான வரிச்சலுகை அறிவித்த மத்திய அரசு, அதற்கான விண்ணப்பதிற்கு, ஒற்றைச் சாளர வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது.அதுபோல, நேர்மையான, முறையான தொண்டுகளுக்கு உதவ, வரித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என, நேரடி வரிகள் வாரியம், தன் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது.


'ஏசி' உணவகங்களில் மட்டுமே சேவை வரி விதிக்க வேண்டும் :

'ஏசி' வசதி இல்லாத உணவகங்கள், எந்த விதமான சேவை வரியையும் வசூலிக்கக் கூடாது. 'ஏசி' வசதியுள்ள உணவகங்கள் மட்டுமே, வாடிக்கையாளர்களின் மொத்த பில் தொகையில், 40 சதவீதம் மட்டுமே சேவை வரி வசூலிக்க வேண்டும்' என, மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: 'ஏசி' வசதி அல்லது 'ஹீட்டர்' வசதி இல்லாத உணவகங்கள் அல்லது 'மெஸ்'களுக்கு, சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. 'ஏசி' வசதி உள்ள அல்லது ஹீட்டர் வசதி உள்ள உணவகங்கள் மட்டுமே, சேவை வரி செலுத்த வேண்டும். இந்த வகை உணவகங்கள், வாடிக்கையாளர்களின் மொத்த பில் தொகையில், 60 சதவீதத்தை கழித்து விட்டு, மீதமுள்ள, 40 சதவீத தொகைக்கு மட்டுமே, சேவை வரி வசூலிக்க வேண்டும். இப்படி வசூலிக்கப்படும் வரியானது, மொத்த பில் தொகையில், 5.6 சதவீதமாக இருக்கும். இது, இம்மாதம் முதல் தேதி அமலுக்கு வந்த, 14 சதவீத சேவை வரியின் விதிக்கப்படும் அளவாகும். இவ்வாறு, நிதி அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


4,470 நிறுவனங்கள் மீதுபாய்ந்தது நடவடிக்கை:

வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிக்கு சரியான கணக்கு காட்டாத மற்றும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கிடைக்கும் சலுகைகளை தவறாக பயன்படுத்தியதாக புகார்களுக்கு ஆளான, 4,470 அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பதிவை, மத்திய அரசு நேற்று அதிரடியாக ரத்து செய்தது.சில மாதங்களுக்கு முன், 9,000த்திற்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. Sathianarayanan - Chennai,இந்தியா
10-ஜூன்-201516:20:36 IST Report Abuse
K. Sathianarayanan வரி ஏய்ப்பு செய்யும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் என்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் கல்லூரி நிறுவனங்களும் மாட்ட வேண்டும். அரசு? ஏனென்றால் அவைகள் ஏதோ ஒரு தொண்டு நிறுவனமாகத்தான் தங்களை பதிவு செய்து வைத்துள்ளன.
Rate this:
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
10-ஜூன்-201515:01:27 IST Report Abuse
ganapati sb நல்ல முயற்சி சட்டபூர்வமாக அனைத்தும் நடக்க வேண்டும் என்ற உறுதி அரசு ஊழியர்கள் கொண்டாளே அனைத்து பிரச்சனைகளும் தீரும்
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
10-ஜூன்-201513:41:07 IST Report Abuse
Pasupathi Subbian முதலில் ராஜிவ்காந்தி அறக்கட்டளை , ராஜீவ் காந்தி அறகட்டளை இவைகளை தணிக்கை விதியின் கீழ் கொண்டுவர வேண்டும். இந்திய மக்களின் வரிபணத்தில் இவர்கள் ஏகபோக மிராஸ்தாரர்களாக வளம் வருகின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X