கண்காணிப்பு ஆணையர் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு

Added : ஜூன் 10, 2015 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி : மத்திய தலைமை தகவல் ஆணையராக விஜய் சர்மாவும், ஊழல் கண்காணிப்பு ஆணையராக கே.வி.சவுத்ரியும் நியமிக்கப்பட்டனர். இதில் சவுத்ரியின் நியமனத்துக்கு, ராம்ஜெத்மலானி எதிர்ப்பு தெரிவுத்துள்ளார்.சவுத்ரி நியமனம் குறித்து ராம்ஜெத்மலானி கூறியதாவது:ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கு,கே.வி.சவுத்ரி, தகுதியான நபர் அல்ல. அவர், ஏற்கனவே பணியில் இருந்தபோது, ஊழல்
Strong opposition to the surveillance commissioner appointment

புதுடில்லி : மத்திய தலைமை தகவல் ஆணையராக விஜய் சர்மாவும், ஊழல் கண்காணிப்பு ஆணையராக கே.வி.சவுத்ரியும் நியமிக்கப்பட்டனர். இதில் சவுத்ரியின் நியமனத்துக்கு, ராம்ஜெத்மலானி எதிர்ப்பு தெரிவுத்துள்ளார்.
சவுத்ரி நியமனம் குறித்து ராம்ஜெத்மலானி கூறியதாவது:ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கு,கே.வி.சவுத்ரி, தகுதியான நபர் அல்ல. அவர், ஏற்கனவே பணியில் இருந்தபோது, ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர். இவரை ஊழல் கண்காணிப்பு ஆணையராக ஏற்க முடியாது. கே.வி.சவுத்ரி நியமனத்தை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன். இவ்வாறு, அவர் கூறினார்.
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறியதாவது: '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான விஷயத்தில், அரசியல் தரகர் நீரா ராடியா வின் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டது. அப்போது, வருமான வரித்துறை உயர் அதிகாரியாக இருந்த சவுத்ரி, இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
இன்று பதவியேற்பு : மத்திய தகவல் ஆணையர் மற்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆகிய பதவிகள், நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருந்தது. ஒன்பது மாத தாமதத்துக்கு பின், இப்பணியிடங்களுக்கு, இவர்கள் இருவரும் நியமிக்கப்பட்டன. இருவருக்கும் ஜனாதிபதி மாளிகையில் இன்று நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Ramaswamy - CHEN NAI,இந்தியா
10-ஜூன்-201515:42:33 IST Report Abuse
Srinivasan Ramaswamy பிஜேபி அரசு தூங்கி எழுந்து கொண்டது.ஆனால் நாட்டுக்கு நல்லது செய்ய வில்லை. எல்லா விசயமும் நீதி மன்றம் மூலமாக நடக்க வேண்டும் போல் உள்ளது.
Rate this:
Cancel
Raja - Bangalore,இந்தியா
10-ஜூன்-201513:29:25 IST Report Abuse
Raja ஒன்பது மாத காலமாக தேடிக் கண்டு பிடித்த ரத்தினம் அவர். பிடிக்கவில்லை என்றால் வழக்கு போட்டுக் கொள்ளுங்கள் ராம் ஜெத்மலானி. உச்சநீதி மன்றம் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க சொல்லி முடிவு செய்யட்டும்.
Rate this:
Cancel
rajan - kerala,இந்தியா
10-ஜூன்-201513:04:41 IST Report Abuse
rajan ஊழல்வாதிகள் ஒழிக்கப்படும் வரை ஊழலை யாராலுமே ஒழிக்க முடியாது அதுவும் இந்திய ஜனநாயகத்தில். அரசியல்வாதிகள் தவறுகளை தண்டிக்க தனி சட்டம் கோர்ட் ப்ரோசீடிங்க்ஸ் இந்த நாட்டுக்கு தேவை. குடிமகன்களுக்கு ஒரு சட்டம் அரசியல் பெரும்குடிமகன்களுக்கு ஒரு சட்டம் என வச்சுட வேண்டியது தானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X