குடிநீர் பிரச்னையை சமாளிக்க 3 மனைவிகளை கட்டிக் கொள்ளுங்கள் : நீதிபதி சர்ச்சை பேச்சு| Have 3 wives to deal with water crisis: SDM | Dinamalar

பொது செய்தி

இந்தியா

குடிநீர் பிரச்னையை சமாளிக்க 3 மனைவிகளை கட்டிக் கொள்ளுங்கள் : நீதிபதி சர்ச்சை பேச்சு

Added : ஜூன் 10, 2015 | கருத்துகள் (45)
Share
போபால் : குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டுமெனில் மூன்று பெண்களை திருமணம் செய்து கொள்ளுங்கள் என நீதிபதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் திகம்கர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை மண்டல நீதிபதி ஒருவர், நிலம் கடுமையாக வறண்டு விட்டதால் குடிநீர் பஞ்சம் அதிகரித்து வருகிறது. இதனை சமாளிக்க ஒவ்வொருவரும் 3 பெண்களை மணந்து கொள்ள வேண்டும் என
wives, madhya pradesh, sub-divisional magistrate, water crisis, மனைவிகள், மத்திய பிரதேசம், துணை மண்டல நீதிபதி, குடிநீர் தட்டுப்பாட்டு

போபால் : குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டுமெனில் மூன்று பெண்களை திருமணம் செய்து கொள்ளுங்கள் என நீதிபதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் திகம்கர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை மண்டல நீதிபதி ஒருவர், நிலம் கடுமையாக வறண்டு விட்டதால் குடிநீர் பஞ்சம் அதிகரித்து வருகிறது. இதனை சமாளிக்க ஒவ்வொருவரும் 3 பெண்களை மணந்து கொள்ள வேண்டும் என கூறி உள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


குடிநீர் பஞ்சம் :

மத்திய பிரதேசத்தின் திகம்கர், சத்தர்பூர், பன்னா, தபோக், சாகார் ஆகிய மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. கோடையில் மிக கடுமையாக இருக்கும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வ காணுவதற்காக ரூ. 100 கோடி செலவில் குடிநீர் திட்டம் துவக்கப்பட்டது. இருந்தும் இதுவரை குடிநீர் பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்படவில்லை.


நீதிபதியின் சர்ச்சை பேச்சு :

லிதோகரா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை மண்டல நீதிபதி பி.கே.பாண்டே, கடந்த சில நாட்களுக்கு முன் பைவார் கிராம பகுதியை நான் கடந்து சென்ற போது நள்ளிரவு 2 மணிக்கு பெண்கள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருப்பதை கண்டேன். தண்ணீர் பிரச்னை பெரிய பிரச்னையாக உள்ளது. இத்தகைய நிலைக்கு தீர்வு காண விரும்பினால் ஒவ்வொரு ஆணும் 3 பெண்களை மணந்து கொள்ள வேண்டும். ஒரு பெண்ணை குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கும், மற்ற இருவரை தண்ணீர் பிடிப்பதற்கும் பயன்படுத்தலாம். தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண விரும்பாதவர்கள் 3 பெண்களை மணக்காமல் இருந்து கொள்ளலாம் என்றார்.


அதிர்ச்சியான உதாரணம் :

3 பெண்களை மணக்க வேண்டும் என்பதற்கு நீதிபதி கூறிய மற்றொரு காரணம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் பேசுகையில், பந்தல்காண்ட் பகுதியில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதும் நான் சொல்வதற்கு ஒரு காரணம். உ.பி.,யின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று பெண் சிசு கொலை காரணமாக அங்கு பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறி உள்ளது. அதே நிலை தான் இங்கும். மத்திய பிரதேசத்தின் பல பகுதிகளில் தண்ணீர் பிரச்னை காரணமாக பலர் தங்களின் மகள்களுக்கு திருமணம் செய்து வைப்பதையே தவிர்க்கிறார்கள். வெகு தூரம் சென்று தண்ணீர் எடுக்க வேண்டும் என அவர்களுக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் தண்ணீர் பிடிப்பதற்கு ஏற்பட்ட சண்டையில் பெண் ஒருவர் மற்றொரு பெண்ணை கொலை செய்துள்ளார். இச்சம்பவத்தையும் நீதிபதி சுட்டிக் காட்டி பேசினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X