அமைச்சர் கைது : காங்., ஆம்ஆத்மியை ஆதரிக்கிறதா - எதிர்க்கிறதா

Added : ஜூன் 10, 2015 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுடில்லி : போலி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் டோமர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய அரசு தான் காரணம் என ஆம்ஆத்மி மட்டுமல்ல, காங்கிரசும் குற்றம்சாட்டி உள்ளது. அதே சமயம், ஜிதேந்தர் சிங் டோமரின் தவறுக்கு பொறுப்பேற்று டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் எனவும் காங்கிரஸ் கூறி வருகிறது. இது உண்மையில், ஆம்ஆத்மியை காங்கிரஸ்
delhi minister tomar, congress, aam aadmi, modi, டில்லி அமைச்சர் டோமர், காங்கிரஸ், ஆம்ஆத்மி, மோடி

புதுடில்லி : போலி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் டோமர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய அரசு தான் காரணம் என ஆம்ஆத்மி மட்டுமல்ல, காங்கிரசும் குற்றம்சாட்டி உள்ளது. அதே சமயம், ஜிதேந்தர் சிங் டோமரின் தவறுக்கு பொறுப்பேற்று டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் எனவும் காங்கிரஸ் கூறி வருகிறது. இது உண்மையில், ஆம்ஆத்மியை காங்கிரஸ் ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என்ற குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


மத்திய அரசு மீது குற்றச்சாட்டு :

போலி சான்றிதழ் அளித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள டோமர், எனது சட்ட சான்றிதழ் உண்மையானது தான். நான் கைது செய்யப்பட்டதற்கு மத்திய அரசு தான் காரணம் என தெரிவித்துள்ளார். டோமர் கைது பற்றி தனது மைக்ரோ பிளாக் பகுதியில் கருத்து தெரிவித்துள்ள ஆம்ஆத்மியின் அசுதோஷ், மோடியை எதிர்ப்பவர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். ஆனால் நாங்கள் தொடர்ந்து அவர்களை எதிர்த்து போராடி வருகிறோம். அதனால் ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் திடீரென சாலை விபத்தில் உயிரிழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என தெரிவித்துள்ளார்.


காங்.,ன் நிலை என்ன :

டோமர் கைது விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ள காங்., பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், டில்லி சட்ட அமைச்சர் டோமர் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக மட்டுமே. போலி கல்வி சான்றிதழ் அளித்து இவர் மட்டும் தான் மோசடி செய்துள்ளாரா என கேள்வி எழுப்பி உள்ளார். அதே சமயம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த விவரகாம் தொடர்பாக கெஜ்ரிவால் ஏன் பதவி விலக கூடாது என கேட்டுள்ளார்.


ஆம்ஆத்மி மவுனம் :

மத்திய அரசை குறை கூறினாலும், அமைச்சர் கைது விவகாரத்தில் தங்களின் நிலை என்ன என்பதை, ஊழலுக்கு எதிராக போராடும் ஆம்ஆத்மி கட்சி இன்னும் தெளிவுபடுத்தாமல் மவுனம் காத்து வருகிறது. அதே சமயம் டோமர் அளித்துள்ள ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக் கொண்டதுடன், அதனை கவர்னரிடமும் முதல்வர் கெஜ்ரிவால் அளிக்க உள்ளார். இது தொடர்பாக டில்லி துணைநிலை ஆளுனர் நஜீப் ஜங்கை கெஜ்ரிவாலும், மணிஷ் சிசோடியாவும் சந்திக்க உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chozhan - melbourne,ஆஸ்திரேலியா
11-ஜூன்-201515:31:06 IST Report Abuse
chozhan கேஜரி நல்லவர் .வல்லவர் என்று எல்லாம் பேசும் கருத்து கடல்களே ,சிறிது தலைநகரம் வந்து பார்த்து எழுதுங்கள்.நம்ம கட்டுமரதைவிட (மு க வே தனக்கு தானே வைத்துகொண்ட பெயர் இது .1996 அரசியல் பார்த்துக்கொள்ளவும்) மக்களை ஏமாற்றுவதில் விவரமானவர் .காமராஜ் தோற்றதால் தி மு க நல்லதா. அன்றைக்கு சுயரூபம் தெரியவில்லை .இன்று புரிகிறது அதற்குள் காமராஜரை விட்டு காங்கிரஸ் ஓடிவிட்டது. அதேபோல் ஆம் ஆத்மியும் . ஆட்டோ ரிக்க்ஷவ் ஓட்டுனர்களின் தயவில் ஆட்சிக்கு வந்த கட்சி என்று சொல்கிறார்கள் . சுயரூபம் புரிய 50 வருடங்கள் ஆகாது
Rate this:
Cancel
karuvaayan - karimedu,இந்தியா
11-ஜூன்-201501:14:38 IST Report Abuse
karuvaayan ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இந்த இரண்டு திருடர்களும் நாட்டுக்கு தேவையில்லை
Rate this:
Cancel
Murukesan - Kannankulam,இந்தியா
10-ஜூன்-201516:59:36 IST Report Abuse
Murukesan பாவம் ஆம்ஆத்மி கட்சி டெல்லி மக்களுக்கு - நாங்கள் அத்தனை பேரும் உத்தமர் தான சொல்லுங்கள் என கேட்க போகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X