நான் எப்பவுமே இப்படித்தான் : சந்தானம் பஞ்ச்

Added : ஜூன் 14, 2015 | கருத்துகள் (4)
Share
Advertisement
'என்னை கலாய்ச்சுடாராமா', 'நீ என்ன அவ்வளவு பெரிய அப்பா டக்கரா', 'அடை தேன் அடை','கெட்ட பையன் சார் இந்த பால்சாமி' என, இன்ச் பை இன்ச் காமெடி பஞ்ச் பேசி திரையரங்குகளை திருவிழாவாக்கும் நகைச்சுவை நாயகர், இந்த 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', இவர் 'இனிமே இப்படித் தான்' இல்லை, இல்லை எப்பவுமே இப்படித்தான், என பேச்சில் மணக்கும் சந்தனம், பார்த்ததும் மனதில் பளிச்சென ஒட்டிக்
நான் எப்பவுமே இப்படித்தான் : சந்தானம் பஞ்ச்

'என்னை கலாய்ச்சுடாராமா', 'நீ என்ன அவ்வளவு பெரிய அப்பா டக்கரா', 'அடை தேன் அடை','கெட்ட பையன் சார் இந்த பால்சாமி' என, இன்ச் பை இன்ச் காமெடி பஞ்ச் பேசி திரையரங்குகளை திருவிழாவாக்கும் நகைச்சுவை நாயகர், இந்த 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', இவர் 'இனிமே இப்படித் தான்' இல்லை, இல்லை எப்பவுமே இப்படித்தான், என பேச்சில் மணக்கும் சந்தனம், பார்த்ததும் மனதில் பளிச்சென ஒட்டிக் கொள்ளும் நண்பேன்டா சந்தானம் 'சுமாகாசூ' என புது மொழியில் பஞ்ச் பேசி மதுரையில் தினமலர் வாசகர்களுக்காக அளித்த கலகல பேட்டி...* இனி ஹீரோவாக தான் நடிப்பீர்களா?கண்டிப்பாக, ஆர்யா கூட சொன்னார் 'இனிமே இப்படித் தான்' தலைப்புக்கு பதிலா இனிமே ஹீரோ தான்னு வைச்சிருக்கலாம்ன்னு. ஹீரோவ நடிச்சாலும் வழக்கம் போல காமெடி டிராக் பண்ணிட்டு தான் இருப்பேன். காமெடியனா நடிக்கும் போது பாட்டு, பைட் இருக்காது, இப்போ அதையும் சேர்த்து பண்றேன் அவ்வளவு தான்.* இந்தப் படத்தின் மையக் கருத்து...இருக்குறத வைச்சு சந்தோஷமாக வாழணும், இல்லாததை நினைச்சு வருத்தப்பட கூடாது. இந்த கருத்துக்களை தான் சென்டிமென்ட் கலந்த காமெடியாக சொல்லியிருக்கிறேன்.* ஹீரோ, காமெடியன் என ரெண்டு லட்டு சாப்பிடுகிறீர்களே?ஹீரோவா நடிக்கும் போது கூட காமெடிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். கூடுதலாக சீரியஸ், எமோஷன் எல்லாம் கலந்து இருக்கும்.* எந்த ஹீரோவுடன் சேர்ந்து காமெடி பண்ண ஆசை?கமல்ஹாசன். இவர் கூட இன்னும் ஒரு படம் கூட நடிக்கவில்லை. * நீங்கள் ஹீரோவாக ஜோடி சேர விரும்பும் ஹீரோயின்?என்னை கேட்டால் தீபிகா படுகோன் கூட ஜோடியாக நடிச்சா நல்லாருக்கும்னு சொல்வேன். கதைக்கு ஏற்ற ஹீரோயின் இருந்தால் போதும். படம் நன்றாக வரும்.* உங்களுக்கு பிடித்த சீனியர் காமெடியன்ஸ்?தங்கவேலு, கவுண்டமணி காமெடிக்கு வெறித்தனமான ரசிகன்.* கலாய்ப்பது உங்களுக்கு கை வந்த கலையா?காமெடி, கலாய்க்கிறது எல்லாம் கராத்தே, குங்பூ மாதிரி சொல்லி கொடுத்து வருவதில்லை. அதுவாக வரும். எனக்கு சின்னவயதிலேயே காமெடி கை வந்த கலை. அதனால் நான் எப்பவுமே இப்படித் தான்.* ஹீரோவாக விரும்பும் காமெடியன்களுக்கு உங்கள் அறிவுரை?ஹீரோவாகுறது அவ்வளவு எளிதல்ல. நடிப்பு தவிர டெக்னிக்கலாக நிறைய தெரிஞ்சுக்கணும். இயக்குனருடன் ஆலோசித்து படத்தின் காட்சிகளை தீர்மானிக்கும் திறமையும் இருக்க வேண்டும்.* ரஜினியுடன் நடித்த அனுபவம்?ரஜினியின் மிகப்பெரிய ரசிகன் நான். வேற யார் கூட நடித்தாலும் ஒரு நடிகனாக தான் நடிப்பேன். ரஜினியுடன் நடிக்கும் போது மட்டும் ஒரு ரசிகனாக அவரது ஸ்டைலான நடிப்பை ரசித்து பார்ப்பேன்.* மதுரையை பற்றி சொல்லுங்களேன்?எல்லா நடிகர்களுக்கும் ரசிகர் மன்றம் உள்ள ஊர். சுமாரான படங்களை கூட விமர்சனம் செய்யாமல் சூப்பர் என சொல்லி ரசித்து பார்க்கும் ரசிகர்கள் நிறைந்த இடம்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Revathi Archana - madurai,இந்தியா
15-ஜூலை-201513:51:48 IST Report Abuse
Revathi Archana நீங்க கமெடியனொ, ஹீரோவோ எதுவேன்னாலும் இருங்க .ஆனா யார் மனசையும் புண்படுத்தாம காமெடி பண்ணுங்க ,உங்க சினிமா வளர்ச்சிக்கு நாங்க பொறுப்பு .எங்களை சிரிக்க வைக்கிறது உங்க பொறுப்பு .டீளிங்கு ஒ கே வா
Rate this:
Cancel
Mathan Rameshbabu - Muscat,ஓமன்
20-ஜூன்-201511:07:18 IST Report Abuse
Mathan Rameshbabu இருக்குறத வைச்சு சந்தோஷமாக வாழணும், இல்லாததை நினைச்சு வருத்தப்பட கூடாது. இந்த கருத்துக்களை தான் சென்டிமென்ட் கலந்த காமெடியாக சொல்லியிருக்கிறேன். - இது உனக்கும் பொருந்தும் தானே ?
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
19-ஜூன்-201514:39:01 IST Report Abuse
LAX இவனது தரம் தாழ்ந்த டயலாகுகளை காமடி என்று ரசிக்கும் கேவலமான கூட்டம் இருக்கும்வரை இவனைப் போன்றவர்கள் இப்புடித்தான் ஓவரா பீலா உடுவாங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X